ஹரிப்ரோபா டகேடா
அரிப்ரோபா தகேடா Hariprobha Takeda | |
|---|---|
![]() Uemon and Hariprabha Takeda | |
| பிறப்பு | 1890 |
| இறப்பு | 1972[1] கொல்கத்தா, மேற்கு வங்காளம்[1] |
| வாழ்க்கைத் துணை | Wemon Takeda |
அரிப்ரோபா தகேடா (Hariprobha Takeda) (1890-1972), ஹரிப்ரோபா பாசு மல்லிக் என்றும் அழைக்கப்படுபவர், ஒரு ஜப்பானியரை மணந்த ஒரு வங்காள பெண் ஆவார். அவர் ஜப்பானில் வசித்து, ஒரு குறிப்பிடத்தக்க சுயசரிதையை எழுதினார், அது வங்காளதேசத்தில் திரைப்படமாக எடுக்கப்பட்டது.[1]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]பங்களா மஹிளா ஜப்பான் ஜாத்ரா புத்தகத்தின் முகப்புப் பக்கம், 1915 1907 ஆம் ஆண்டில் ஹரிப்ரோபா, கிழக்கு வங்காளத்தின் டாக்காவில் வசித்து வந்த ஜப்பானிய தொழிலதிபராகிய உயெமோன் டகேடாவை மணந்தார். [1][2] அவர் புல்புல் சோப்பு தொழிற்சாலையில் சோப்புகளை தயாரித்தார். ஹரிப்ரோபா 1912 இல் ஜப்பானின் டோக்கியோவுக்கு குடிபெயர்ந்தார். அவர் அங்கு தனது பயணங்களையும் அனுபவங்களையும் விவரிக்கும் 'போங்கோ மோஹிலர் ஜப்பான் ஜாத்ரா ' (ஒரு வங்காளப் பெண்ணின் ஜப்பான் பயணம்) என்ற நூலை வெளியிட்டார். அவர் 1941 இல் ஜப்பானில் நிரந்தரமாக குடியேறினார். [1]
இரண்டாம் உலகப் போர்
[தொகு]முன் வரிசையில் வலமிருந்து இரண்டாவதாக இருப்பவர் ஹரிப்ரோபா டகேடா. நடுவில் இருப்பவர் வேறு யாருமல்ல, சுபாஷ் சந்திர போஸ்தான். அவர் 1944 முதல் 1945 வரை சுபாஷ் சந்திர போஸ் தலைமையிலான வங்காள இந்திய தேசிய இராணுவத்திற்காக ஜப்பானிய ஏகாதிபத்திய இராணுவத்தில் செய்திகளை ஒலிபரப்பும் பணியில் ஈடுபட்டார். இரண்டாம் உலகப் போரின் போது இந்திய தேசிய இராணுவம் ஜப்பானுடன் கூட்டணி வைத்திருந்தது. போரின் போது அவரது கணவர் நோய்வாய்ப்பட்டார். டோக்கியோ மீதான நேச நாடுகளின் குண்டுவீச்சைத் தவிர்க்க, அவர் நள்ளிரவில் வேலைக்குச் சென்றார். ஜப்பானிய மக்கள் மீது போரின் தாக்கம் குறித்து அவர் மற்றொரு புத்தகத்தை எழுதினார். அவரது ஒலிபரப்புகளுக்கு ராஷ் பிஹாரி போஸ் உதவினார். கணவரின் மரணத்திற்குப் பிறகு, அவர் மேற்கு வங்காளத்தின் ஜல்பைகுரிக்கு குடிபெயர்ந்தார்.[1][3]
மரபு
[தொகு]ஹரிப்ரோபா 1972 இல் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் உள்ள சம்புநாத் பண்டிட் மருத்துவமனையில் இறந்தார். தன்வீர் மொகம்மெல் அவரது புத்தகம் மற்றும் அவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ஜப்பானி போடு (ஜப்பானிய மனைவி ) என்ற ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளார்.[1][4][5]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 4 5 6 7 "A Bengali Iron Lady" (in en). The Daily Star. 17 March 2012. http://www.thedailystar.net/news-detail-226549. பார்த்த நாள்: 14 November 2017.
- ↑ History of Relations of Asian Countries (PDF) (in ஆங்கிலம்), retrieved 21 September 2025
- ↑ Deb, Chitra (2010). Women of The Tagore Household (in ஆங்கிலம்). Penguin UK. ISBN 9789352141876. Retrieved 14 November 2017.
- ↑ Bhattacharjee, CS. "Filmmaker to relive Hariprabha on screen". thesundayindian.com. The Sunday Indian. Archived from the original on 9 November 2016. Retrieved 14 November 2017.
- ↑ "Woman who penned Bengali book on Japan captured on celluloid". Daily News & Analysis. 6 May 2012. http://www.dnaindia.com/india/report-woman-who-penned-bengali-book-on-japan-captured-on-celluloid-1685182. பார்த்த நாள்: 14 November 2017.
