ஹரிபூர், பாகிஸ்தான்
ஹரிபூர்
ہری پور | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 33°59′39″N 72°56′0″E / 33.99417°N 72.93333°E | |
நாடு | பாகிஸ்தான் |
மாகாணம் | கைபர் பக்துன்வா மாகாணம் |
மாவட்டம் | ஹரிபூர் மாவட்டம் |
ஏற்றம் | 520 m (1,710 ft) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 8,04,000 |
நேர வலயம் | ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்) |
தொலைபேசி குறியீடு | 0995 |
இணையதளம் | Meraharipur.com |
ஹரிப்பூர் (Haripur) (ہری پور) பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கு பகுதியில் அமைந்த கைபர் பக்துன்வா மாகாணத்தில் அமைந்த ஹரிபூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். காரகோரம் மலைத்தொடரின் சமவெளியில், காரகோரம் நெடுஞ்சாலையில் அமைந்த ஹரிபூர் நகரம் கடல் மட்டத்திலிருந்து 520 மீட்டர் உயரத்தில் உள்ளது.[1]மனித மேம்பாட்டுச் சுட்டெண் அடிப்ப்டையில், பாகிஸ்தானில் ஹரிபூர் நகரம் மூன்றாவது இடத்தை தக்கவைத்துள்ளது. இம்மாவட்டத்தில் புகழ்பெற்ற பௌத்த நினைவுச் சின்னங்களான ஜௌலியன் விகாரை மற்றும் பாமலா தூபி உள்ளது.
அமைவிடம்
[தொகு]இது பாகிஸ்தான் நாட்டின் தேசியத் தலைநகரான இஸ்லாமாபாத் நகரத்திற்கு வடக்கே 65 கிமீ தொலைவிலும், தட்சசீலம் மற்றும் அப்போட்டாபாத்திற்கு தெற்கே 35 கிமீ தொலைவிலும் உள்ளது.
ஹரிபூர் நகரத்தில் பஷ்தூன்கள், முகல்கள், குஜ்ஜர் போன்ற பலவகையான பழங்குடி மக்கள் வாழ்கின்றனர்.
தட்பவெப்பம்
[தொகு]தட்பவெப்ப நிலைத் தகவல், ஹரிப்பூர் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 16.7 (62) |
17.8 (64) |
22.8 (73) |
27.8 (82) |
33.9 (93) |
38.9 (102) |
36.7 (98) |
33.9 (93) |
32.8 (91) |
30 (86) |
23.9 (75) |
18.9 (66) |
27.8 (82) |
தாழ் சராசரி °C (°F) | 2.8 (37) |
5 (41) |
10 (50) |
13.9 (57) |
17.8 (64) |
23.9 (75) |
23.9 (75) |
22.8 (73) |
20 (68) |
13.9 (57) |
8.9 (48) |
3.9 (39) |
13.9 (57) |
பொழிவு mm (inches) | 74 (2.9) |
104 (4.1) |
124 (4.9) |
104 (4.1) |
74 (2.9) |
76 (3) |
246 (9.7) |
244 (9.6) |
97 (3.8) |
51 (2) |
30 (1.2) |
48 (1.9) |
1,267 (49.9) |
ஆதாரம்: Weatherbase[2] |
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ United Nations Joint Logistics Centre (UNJLC). "Detailed Assessment by Ben Wielgosz". Archived from the original on 2007-07-24. பார்க்கப்பட்ட நாள் 2009-06-16.
- ↑ "Weatherbase.com". Weatherbase. 2019. பார்க்கப்பட்ட நாள் 4 September 2019.