ஹரிநாத் டே
ஹரிநாத் தே | |
|---|---|
| பிறப்பு | 12 ஆகஸ்ட் 1877 அரியதாஹா, கல்கத்தா (வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம்), மேற்கு வங்கம், இந்தியா[1] |
| இறப்பு | 30 ஆகஸ்ட் 1911 (வயது 34) கல்கத்தா, இந்தியா |
| பணி | கல்வியாளர், நூலகர், பல மொழி அறிஞர் |
| அறியப்படுவது | 34 மொழிகளில் பேசும் திறன் |
ஹரிநாத் டே(Harinath De) (12 ஆகஸ்ட் 1877 – 30 ஆகஸ்ட் 1911) ஒர் இந்திய மொழியியலாளர், பல மொழிகளை அறிந்தவர், இந்தியவியல் அறிஞர் மற்றும் கல்வியாளர் ஆவார். இவர் 1907 முதல் 1911 வரை இந்தியாவின் தேசிய நூலகத்தின் முதல் இந்திய நூலகராகப் பணியாற்றினார்.[1] தனது முப்பத்து நான்கு ஆண்டு கால வாழ்க்கையில், இவர் 34 மொழிகளைக் கற்றுக்கொண்டார்.[2]
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி:
இவர் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவுக்கு அருகிலுள்ள கமர்காட்டியின் அரியதாஹா என்ற இடத்தில் பிறந்தார். இவரது தந்தை ராய் பகதூர் பூத்நாத் டே, மத்திய மாகாணங்களில் உள்ள ராய்ப்பூரில் அரசு அதிகாரியாகப் பணியாற்றினார். அங்கு, இளம் நரேந்திரநாத் தத்தாவின் குடும்பமும் 1877 முதல் 1879 வரை அதே கட்டிடத்தில் சிறிது காலம் தங்கியிருந்தது.[3][4]
இவர் ராய்ப்பூர் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார்; பின்னர் கொல்கத்தாவில் உள்ள பிரசிடென்சி கல்லூரியிலும், அதைத் தொடர்ந்து கேம்பிரிட்ஜில் உள்ள கிறிஸ்ட்ஸ் கல்லூரியிலும் கல்வி பயின்றார். பல மொழிகளை அறிந்தவராகவும், மொழியியல் மேதையாகவும் திகழ்ந்த இவர், சீனம், திபெத்தியம், பாலி, சமஸ்கிருதம், பாரசீகம், அரபு, ஆங்கிலம், கிரேக்கம், லத்தீன் உள்ளிட்ட பல கிழக்கு , மேற்கத்திய மொழிகளில் நிபுணத்துவம் பெற்றிருந்தார்.[5][6] இவற்றில் 14 மொழிகளில் இவர் முதுகலைப் பட்டம் பெற்றிருந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ravindra N. Sharma, ed. (1981). Indian librarianship: perspectives and prospects. Kalyani Publishers. p. 221.
- ↑ Capital. 1977. p. 267. Retrieved 4 June 2013.
- ↑ Chattopadhyay Rajagopal (1999). Swami Vivekananda in India: A Corrective Biography. Motilal Banarsidass. p. 23. ISBN 8120815866.
- ↑ Greenspan, p. 169
- ↑ P. Thankappan Nair (1987). A history of Calcutta's streets (Vol. 2). Firma KLM. p. 396.
- ↑ Greenspan, p. 140