உள்ளடக்கத்துக்குச் செல்

ஹயாத் ரெஜன்ஸி கொல்கத்தா

ஆள்கூறுகள்: 22°34′14″N 88°24′19″E / 22.5706711°N 88.40522083333335°E / 22.5706711; 88.40522083333335
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹயாத் ரீஜென்சி கொல்கத்தா
Hyatt Regency Kolkata
Map
விடுதி சங்கிலிஹயாத்
பொதுவான தகவல்கள்
இடம்இந்தியா
முகவரிசால்ட் லேக் நகர், கொல்கத்தா - 700098, மேற்கு வங்காளம், இந்தியா
ஆள்கூற்று22°34′14″N 88°24′19″E / 22.5706711°N 88.40522083333335°E / 22.5706711; 88.40522083333335
திறப்புஆகத்து 10, 2002
மேலாண்மைகுளோபல் ஹயாத் கார்ப்பரேசன்
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை7
பிற தகவல்கள்
அறைகள் எண்ணிக்கை233
தரிப்பிடம்200 வாகனங்கள்
வலைதளம்
http://kolkata.regency.hyatt.com/

ஹயாத் ரீஜென்சி கொல்கத்தா (Hyatt Regency Kolkata) (ஹயாத் ஆட்சியாண்மை), ஒரு ஐந்து நட்சத்திர மதிப்பு உணவு விடுதி ஆகும். இது இந்தியாவின் கொல்கத்தாவில் அமைந்துள்ளது.[1]. இந்த விடுதி நகரத்தின் பிற பாகங்களுடன் இணைந்துள்ளது, அத்துடன் இந்த இங்கிருந்து நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பன்னாட்டு/உள்நாட்டு விமான நிலையம் மற்றும் ஹவுரா தொடருந்து நிலையம் ஆகியவை 11 கிலோ மீட்டர் (6.83 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. இது கொல்கத்தாவில் சுமார் 6.5 ஏக்கர் பரப்பளவினைக் கொண்டு பரந்துவிரிந்துள்ளது. இந்த விடுதியில் 233 அறைகள் மற்றும் 13 அறைத்தொகுதிகள், சிறப்புமிக்க உணவகங்கள், உடற்பயிற்சி நிலையத்துடன் கூடிய மருத்து நீருற்று, சுவர்ப்பந்து மற்றும் டென்னிசு விளையாடும் இடம், நீச்சல் குளம் ஆகியவை அமைந்துள்ளன.

வரலாறு

[தொகு]

இந்த ஹோட்டல் ஆகஸ்ட் 10, 2002 இல் திறக்கப்பட்டது. உப்பு ஏரி நகரம் என்று அழைக்கப்படும் பிதான்னகரத்தில் முதன் முதலாகத் தொடங்கப்பட்ட ஐந்து நட்சத்திர ஹோட்டல் இதுவாகும்.கொல்கத்தாவின் தலைநகரில் உள்ள மக்கள் தொகையினை சரிசெய்யும் வகையில் பிதான்னகரம் 1958 மற்றும் 1965 ஆம் ஆண்டுகளில் மேம்படுத்தப்பட்டது[2].

கிழக்கு நகரச் சாலையின் முக்கியப் பகுதியில் இந்த ஹோட்டல் அமைந்துள்ளதால், கொல்கத்தாவின் கிழக்குப் பகுதியினை, உப்பு ஏரி நகரத்துடனும், கொல்கத்தாவின் வடகிழக்குப் பகுதியினை தெற்குப் பகுதியுடனும் இந்த ஹோட்டல் இணைக்கிறது.

இருப்பிடம்

[தொகு]

விடுதியில் இருந்து ஷாஹீத் மினார் சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவிலும், பிர்லா வான்கோள்கள் அருங்காட்சியகம் சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இவை தவிர பிரபலமிக்க ஹவுரா பாலம், அலிப்பூர் விலங்கியல் பூங்கா மற்றும் காலிகட் ஆகியவை அருகில் உள்ள சுற்றுலாத்தலங்கள் ஆகும்.[3]

போக்குவரத்து வசதிகள்

[தொகு]

விடுதியில் இருந்து அருகில் அமைந்துள்ள போக்குவரத்து வசதிகள் பின்வருமாறு:

  • நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையம் : 13 கிலோ மீட்டர் (தோராயமாக)
  • ஹவுரா ரயில் நிலையம் : 7 கிலோ மீட்டர் (தோராயமாக)

விருதுகள் மற்றும் சிறப்புகள்

[தொகு]
  • டைம்ஸ் ஆஃப் இந்தியா மற்றும் நைட்லைஃப் விருதுகள் – கொல்கத்தா 2012
  • கிங்க்ஃபிஷர் எக்ப்ளோசிட்டி கிரே ஃபுட் கைடு – கொல்கத்தா 2012
  • டெலெகிராப் ஃபுட் கைடு விருது 2012
  • டிரிபட்வைசர் செர்டிஃபிகேட் ஆஃப் எக்செலன்ஸ் விருது 2012

மேற்கோள்கள்

[தொகு]
  1. January 14, 2014 The Venue: Hyatt Regency Kolkata, ASSICON India
  2. August 08, 2002 Hyatt Regency enters Kolkata பரணிடப்பட்டது 2012-08-23 at the வந்தவழி இயந்திரம், The Hindu
  3. "Hyatt Regency Kolkata Hotel Location". cleartrip.com. பார்க்கப்பட்ட நாள் 2015-09-03.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹயாத்_ரெஜன்ஸி_கொல்கத்தா&oldid=4062717" இலிருந்து மீள்விக்கப்பட்டது