ஹயாத் பக்சி பள்ளிவாசல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஹயாத் பக்சி பள்ளிவாசல்
Golconda, tombe qutb shahi, moschea grande 02.jpg
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்ஐதராபாத்து, தெலங்காணா, இந்தியா
சமயம்இசுலாம்
செயற்பாட்டு நிலைபயன்பாட்டில் உள்ளது
கட்டிடக்கலை தகவல்கள்
கட்டிடக்கலை வகைபள்ளிவாசலும் அதையடுத்த பயணிகள் ஓய்வறைகளும்
கட்டிடக்கலைப் பாணிஇந்திய-இசுலாமியக் கட்டிடக் கலை
நிறைவுற்ற ஆண்டுபொ.ச. 1672
அளவுகள்
பொருட்கள்கருங்கல்

ஹயாத் பக்ஷி மசூதி (Hayat Bakshi Mosque) ஹயாத் பக்சி பேகம் மஸ்ஜித் அல்லது ஹயாத்நகர் கிராண்ட் மசூதி என்பது இந்தியாவின் தெலங்காணாவின் ஐதராபாத்துக்கு அருகிலுள்ள ஹயாத்நகரில் அமைந்துள்ள ஒரு பள்ளிவாசல் ஆகும். [1] இது 1672ஆம் ஆண்டில் கோல்கொண்டாவின் ஐந்தாவது சுல்தானான அப்துல்லா குதுப் ஷாவின் காலத்தில் கட்டப்பட்டது.[2][3]

குதுப் ஷாஹி கல்லறைகளிலும் இதே பெயரில் ஒரு மசூதி உள்ளது.

கட்டமைப்பும் கட்டிடக்கலையும்[தொகு]

இந்த பள்ளிவாசல் வழக்கமான குதுப் ஷாஹி கட்டிடக்கலையில் சோர்வுற்ற பயணிகளுக்கான தங்குமிடமாகக் கட்டப்பட்டுள்ளது. முகப்பில் ஐந்து வளைவுகளும், இரண்டு மினாரெட்டுகளும், ஒரு அலங்கரிக்கப்பட்ட பகுதியும், பால்கனியும் உள்ளன. இது பன்னிரண்டு பக்க மேல்தளப் பகுதிகளைச் சுற்றி மூலையில் மினாரெட்டுகளில் இருந்து நீண்டுள்ளது. பிரார்த்தனை மண்டபம் உயர்த்தப்பட்ட மேடையில் அமைக்கப்பட்டுள்ளது. மேடையின் கிழக்குப் பக்கத்திலும், பள்ளிவாசலுக்குக் கீழேயும் ஒரு நீர்த் தொட்டி ஒன்று உள்ளது . பெரிய வளாகம் கிட்டத்தட்ட 5 ஏக்கர் அளவில் அமைந்துள்ளது. இந்த ஓய்வு இல்லம் 150 மீட்டர் 130 மீட்டர் முற்றத்தைக் கொண்டுள்ளது. இந்த விருந்தினர் மாளிகையில் 130 அறைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. பள்ளிவாசலின் வடகிழக்கில் ஹாதி பாவ்லி எனற ஒரு ( யானையின் கிணறு என்று பொருள்), மிகப் பெரிய கிணறு அமைந்துள்ளது. [2][4]

தொல்லியல்[தொகு]

இந்தியத் தொல்லியல் ஆய்வகம் இந்த பள்ளிவாசலின் 20 கட்டமைப்புகளை ஆராய்வதற்காக மே 2009 இல், பெருநகர ஐதராபாத்து மாநகராட்சியின் அனுமதியைக் கோரியது.[5]

ஹயாத் பக்சி பள்ளிவாசல் 07 - மிஹ்ராப்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Photo-docu of monuments begins". தி இந்து. 2010-10-22. Archived from the original on 9 நவம்பர் 2010. https://web.archive.org/web/20101109050911/http://www.hindu.com/2010/10/22/stories/2010102260750300.htm. 
  2. 2.0 2.1 "Hayat Bakshi Begum Mosque in Hayath Nagar India". India9.com. 2005-06-07. 2011-05-09 அன்று பார்க்கப்பட்டது.
  3. "hayat Bakshi begum masjid". gigapan. 2010-08-02. 2011-05-09 அன்று பார்க்கப்பட்டது.
  4. Gopalan, Madhumita (2016-04-23). "Photo essay: Hayath Bakshi Begum- The hand of the king, three times over". The News Minute. https://www.thenewsminute.com/article/photo-essay-hayath-bakshi-begum-hand-king-three-times-over-42086. 
  5. "Structures around mosque to be razed". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2009-05-25. 2011-09-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-05-09 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)