உள்ளடக்கத்துக்குச் செல்

ஹம் காமாட்சி அம்பாள் ஆலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Hindu Shankara Sri Kamadchi Ampal Tempel Hamm, Deutschland (Europa)
பெயர்
பெயர்:Hinduistische Gemeinde Deutschlands (K.d.ö.R.)
தமிழ்:அருள்மிகு இந்து சங்கரர் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் ஹம், யெர்மனி (ஐரோப்பா)
அமைவிடம்
நாடு:யெர்மனி
கோயில் தகவல்கள்
தாயார்:ஸ்ரீ காமாட்சி அம்பாள்
சிறப்பு திருவிழாக்கள்:தேர் திருவிழா
வரலாறு
நிறுவிய நாள்:07.07.2002
அமைத்தவர்:சிவஸ்ரீ அருமுக பஸ்கரகுருக்கள்
கட்டடக் கலைஞர்:Heinz Rainer Eichhorst
இணையதளம்:https://kamadchi-ampal.de

ஹம் காமாட்சி அம்பாள் ஆலயம் (ஆங்கில மொழி: Hindu Kamadchi Ampal Temple, Hamm Germany) என்பது ஜெர்மனி நாட்டிலுள்ள ஹம் நகரில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் கோவிலாகும். ஐரோப்பிய கண்டத்திலேயே இரண்டாவது பெரிய இந்துக் கோயிலான இக்கோயில் திராவிடக் கட்டிடக்கலையில் கட்டப்பட்டு 2002 ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் நாள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.[1] இது காமாட்சி அம்மனுக்கு இந்தியா மற்றும் தென் ஆசியா பகுதிகளுக்கு வெளியே அமைந்துள்ள ஒரே கோயிலாகும். வடக்கு ரைன்-வெஸ்ட்பலியா மாகாணத்தில் 3000 இந்துகள் உட்பட மொத்தம் 45,000 இந்துக்கள் ஜெர்மனியில் வசிக்கிறார்கள்.

காஞ்சி காமாட்சியம்மன் கோயில் வடிவில் பதினைந்து ஏக்கர் பரப்பளவில் கிழக்கு பார்த்த கோயிலாக அமைந்துள்ளது.[2] இக்கோயிலில் சிவன், விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், லட்சுமி நாராயணர், நவக்கிரகம், ஐயப்பன் மற்றும் பைரவர் சந்நிதிகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் நிகழும் தேர்த்திருவிழா மிகவும் புகழ்பெற்றதாகும்.[3]

படக் காட்சியகம்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sri-Kamadchi-Ampal-Tempel
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Hindu temple in the Ruhr". dw.com. https://www.dw.com/de/hindu-tempel-im-ruhrpott/a-587631. பார்த்த நாள்: 8 July 2019. 
  2. "ஜெகத்தை ஆளும் ஜெர்மனி காமாட்சி அம்மன் கோவில்". மாலைமலர். https://www.maalaimalar.com/devotional/temples/2017/09/20154148/1108992/Germany-Kamatchi-Amman-Temple.vpf. பார்த்த நாள்: 8 July 2019. 
  3. "ஜெர்மனியில் காமாட்சி அம்மன் கோயிலில் தேர்த் திருவிழா". தினகரன் இம் மூலத்தில் இருந்து 8 ஜூலை 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190708052147/http://www.dinakaran.com/NRI_Detail.asp?Nid=1349. பார்த்த நாள்: 8 July 2019.