ஹமீர்ப்பூர்
ஹமீர்ப்பூர் | |
---|---|
நகரம் | |
![]() ஹமீர்ப்பூர் நகரம் | |
ஆள்கூறுகள்: 31°41′N 76°31′E / 31.68°N 76.52°E | |
நாடு | ![]() |
மாநிலம் | இமாச்சலப் பிரதேசம் |
மாவட்டம் | ஹமிர்பூர் மாவட்டம் |
தோற்றுவித்தவர் | இராஜா ஹமீர் சந்த் கடோச் |
பெயர்ச்சூட்டு | இராஜா ஹமீர் சந்த் கடோச் |
சட்டமன்றத் தொகுதி | ஹமீர்ப்பூர் சட்டமன்றத் தொகுதி |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | ஹமீர்ப்பூர் நகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 5.2 km2 (2.0 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 17,604 |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | இந்தி, ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 177001 |
தொலைபேசி குறியீடு | +91- 01972 |
வாகனப் பதிவு | HP-21, HP-22, HP-55, HP-67, HP-74, HP-84 |
இணையதளம் | https://hphamirpur.nic.in/ |

ஹமீர்ப்பூர் (Hamirpur), இந்தியாவின் இமயமலையின் வெளிப்புறத்தில் அமைந்த சிவாலிக் மலையில் உள்ள இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள |ஹமீர்ப்பூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். இது சிவாலிக் மலையில் 785 மீட்டர் உயரத்தில் உள்ளது. ஹமீர்பூர் நகரம், மாநிலத் தலைநகரான சிம்லாவிற்கு வடமேற்கே 139.3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 11 வார்டுகளும், 4,350 குடியிருப்புகளும் கொண்ட ஹமீர்ப்பூர் நகரத்தின் மக்கள் தொகை 17,604 ஆகும். அதில் 9,056 ஆண்கள் மற்றும் 8,548 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 9.12 % வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 944 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 93.01 % வீதம் உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 16.29 % மற்றும் 0.82 % வீதம் உள்ளனர். இந்நகரத்தில் இந்து சமயத்தினர் 97.65%, இசுலாமியர் 1.55%, சமணர்கள் , பௌத்தர்கள் 0.39%, கிறித்தவர்கள் 0.10%, சீக்கியர்கள் 0.28% மற்றும் பிற சமயத்தினர் 0.04%% வீதம் உள்ளனர்.[1]
போக்குவரத்து
[தொகு]அமிர்தசரஸ் நகரத்திலிருந்து மணாலி வழியாக லே வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 3 ஹமீர்பூர் நகரம் வழியாகச் செல்கிறது.[2]