ஹபீப் மியான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஹபீப் மியான் (Habib Miyan, மே 20, 1869[1] - ஆகஸ்ட் 19, 2008[2]) இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஒரு முதியவர். இவர் தான் 1869 இல் பிறந்தவராக அறிவித்தார்[3]

ஹபீப் மியான் முன்னர் தான் 1878, 1872 இல் பிறந்தவராகவும் அறிவித்திருக்கிறார். இவரது சரியான வயது அறியப்படவில்லை.

அரசினரின் ஓய்வூதியப் புத்தகத்தில் இவர் மே 20, 1878 இல் பிறந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது[4]. இது சரியான தகவல் எனின் 1997 இல் இறந்த பிரெஞ்சுப் பெண் ஜியான் கால்மெண்ட் என்பவரை அடுத்து ஹபீப் உலகின் வயதில் கூடிய மனிதர் ஆவார். அத்துடன் இவரே 1993 இல் இருந்து உலகில் வாழும் வயதில் கூடிய மனிதர் என்ற பெயரையும் தனது 123வது பெற்றிருந்தார்.

கின்னஸ் மற்றும் தனிப்பட்ட ஆய்வாளர்கள் இதுவரை மியானின் வயதை கண்டறியவில்லை. 1938 ஆம் ஆண்டில் ரஹீம் கான் என்பவர் 1878 இல் பிறந்ததாக தரவுகள் தெரிவித்ததை அடுத்தே[1] தானே அந்த ரஹீம் கான் என ஹபீப் அறிவித்தார். பின்னர் அவர் தான் 1872 இல் பிறந்ததாகவும், பின்னர் 1869 இல் பிறந்ததாகவும் அறிவித்தார்[3]. எனினும், இவர் 1938 ஆம் ஆண்டில் இருந்து ஓய்வூதியம் பெற்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது[5].

முஸ்லிம் சமயத்தவரான மியான் 2004 ஆம் ஆண்டில் மெக்காவுக்கு ஹஜ் பயணம் மேற்கொண்டார்.

மறைவு[தொகு]

ஹபீப் மியான் 2008, ஆகஸ்ட் 19 காலையில் அவரது வீட்டில் வாந்தி-பேதி ஏற்பட்டு சிறிது நேரத்தில் இறந்தார்[6]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹபீப்_மியான்&oldid=2711788" இருந்து மீள்விக்கப்பட்டது