உள்ளடக்கத்துக்குச் செல்

ஹபாங் டா யு தூபி

ஆள்கூறுகள்: 20°28′28″N 96°53′25″E / 20.47444°N 96.89028°E / 20.47444; 96.89028
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹபாங் டா யு தூபி
ஹபாங் டா யு தூபி
அடிப்படைத் தகவல்கள்
புவியியல் ஆள்கூறுகள்20°28′28″N 96°53′25″E / 20.47444°N 96.89028°E / 20.47444; 96.89028
சமயம்தேரவாத பௌத்தம்

ஹபாங் டா யு தூபி ஒரு புத்த மதக்கோவிலாகும். இந்தத் தூபி மியான்மரில் உள்ள இன்லே ஏரியின் அருகில் ஷான் மாநிலத்தில் அமைந்துள்ளது.

தூபியை சுற்றியுள்ள, அடித்தளத்தில் ஷான் மற்றும் பர்மிய வணிகப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை இருக்கின்றன.

தூபியில் புத்தரின் ஐந்து சிறிய உருவங்கள் உள்ளன. அவை தங்க இலைகளால் மூடப்பட்டிருக்கின்றன, அவற்றின் அசல் வடிவங்கள் காணப்பட முடியாத நிலையில் இருக்கிறது. இத்தகைய அதிகப்படியான தங்க இலை பயன்பாடு ஒப்பீட்டளவில் சமீபத்தில் அமைக்கப்பட்டதாய் உள்ளது. மடாலய சுவர்களில் தொங்கும் பழைய புகைப்படங்கள் சில சிறப்பம்சமாக உருவங்களைக் காட்டுகின்றன. அதன் எடையை குறைப்பதற்கு சில தங்கம் அகற்றப்பட்டுவிட்டது என்று கூறப்படுகிறது. வழிபடுவதற்காக எப்போதும் கோவில் திறந்துவைக்கப்பட்டாளும், தங்க இலை வைத்து பூஜை செய்ய ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். யாத்ரீகர்களின் சடங்கின் மற்றொரு பகுதி, படங்களைச் சுற்றியுள்ள ஒரு சிறிய மேலங்கியை அல்லது உருவத்தில் வைத்து, அங்கியை மீண்டும் தங்கள் வீடுகளுக்கு எடுத்துச்சென்று, புத்தர் மற்றும் அவரது போதனைகளை மதிக்கும் ஒரு அடையாளமாக தங்கள் வீடுகளில் வைத்து வழிபடுவர்.

இந்த உருவங்கள் ஒன்பது முதல் பதினெட்டு அங்குல உயரத்திற்கு இடையே வெவ்வேறு அளவுகளில் உள்ளன. அடிப்படையில் இந்த உருவங்கள் தங்கத்தால் இருப்பதால், மிக அதிகமான எடையில் இருக்கின்றன. இந்தப் புத்தரின் படங்கள் அரசர் அலாங்சிதுவால் இன்லே ஏரிக்கு எடுத்துவரப்பட்டதாக நம்பப்படுகிறது.


வரலாறு

[தொகு]

புத்தரின் உருவங்கள் அனைத்தும் மன்னர் அலங்சித்துவால் கொண்டுவரப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த உருவங்கள் 800 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது. [1] இவர் பாகன் வம்சாவழியை சேர்ந்தவர் என்றும் பாகன் வம்சத்தில் நீண்ட காலம் கி.மு 1112 முதல்-1167 வரை ஆட்சிப் புரிந்தவர் என்றும் நம்பப்படுகிறது. இவர் சிறந்த கொடையாளராகவும் மற்றும் சிறந்த கட்டுமானராகவும் இருந்திருக்கிறார். மேலும் இவர் நீர் வழிப் பயணத்தில் அதீத ஈடுபாடுள்ளவராக இருந்திருக்கிறார். அதனால் தனது ஓய்வு நேரங்களை உள்நாடு மற்றும் வெளி நாடுகளை சுற்றிப்பார்ப்பதற்கு செலவிட்டுள்ளார். அப்படி ஒரு நாள் படகில் பயணம் செய்து இன்லே ஏரிக்கு வந்த போது அவரது படகு ஒரு இடத்தில் தானாக சென்ரு நின்றுள்ளது. அந்த இடம் தான் தற்போது உள்ள ஹபாங் டா யு கோவில் இருக்கும் இடமாக தேர்வு செய்யப்பட்டு பின் மன்னரால் கோவில் எழுப்பட்டது.[2]

ஆண்டுதோறும் செப்டம்பர் முதல் அக்டோபர் வரையிலான பர்மிய மாதமான தாடிங்கியுட் மாதத்தில் 18 நாள்களுக்கு தூபித் திருவிழா விமர்ச்சையாக நடைபெறுகிறது. இந்த சமயத்தில் அங்குள்ள ஐந்தில் நான்கு புத்தர் படங்கள் அல்லது உருவங்களை ஒரு ஹிந்தா பறவைப் போல வடிவமைக்கப்பட்ட படகில் வைத்து இன்லே ஏரி முழுவதும் ஊர்வலமாக படகு சுற்றி வரும். ஒரு புத்தர் உருவம் மட்டும் எப்போதும் கோவிலில் உள்ளது. மற்ற நான்கும் அல்ங்கரிக்கப்பட்ட படகில் ஏற்றி மற்ற படகுகள் இந்தப் படகோடு இணைக்கப்பட்டு, அனைத்து படகோட்டிகளும் ஒரு சேர துடுப்பை செழுத்தி புத்தரின் உருவங்களை ஏரிகரை ஓரம் உள்ள கிராமங்களுக்கு எடுத்து சென்று அங்குள்ள கோவிலில் வைக்கப்பட்டு வழிபடப்படுகிறது. இந்தப் பதினெட்டு நாட்களும் பெரும் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு கிராமத்திற்கு புத்தரின் திரு உருவச் சிலைகள் எடுத்துச் செல்லப்படும்.

மேலும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. https://www.renown-travel.com/burma/inlelake/phaungdawoo.html
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-11-16. பார்க்கப்பட்ட நாள் 2017-11-20.

வெளிப்புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹபாங்_டா_யு_தூபி&oldid=3573662" இலிருந்து மீள்விக்கப்பட்டது