ஹன்னா நியூமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோகன்னா (ஹன்னா) நியூமன்
பிறப்புஜோகன்னா வொன் கெம்மெரர்
(1914-02-12)பெப்ரவரி 12, 1914
லேங்க்விட்ஸ், ஸ்டெக்லிட்ஸ்- செலென்டார்ஃப்
இறப்புநவம்பர் 14, 1971(1971-11-14) (அகவை 57)
ஒட்டாவா
பெருங்குடல் அழற்சி
குடியுரிமைபிரித்தானியர்
தேசியம்ஜெர்மனி
துறைகணிதவியல்
பணியிடங்கள்ஹல் பல்கலைக்கழகம், ஸ்கூல் ஆஃப் மாத்தமாட்டிக்ஸ், மான்செஸ்டர் பல்கலைக்கழகம், ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்பெர்லின் பல்கலைக்கழகம், காட்டிங்கென் பல்கலைக்கழகம், ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்
ஆய்வேடுSub-group Structure of Free Products of Groups with an Amalgamated Subgroup
ஆய்வு நெறியாளர்ஓல்கா டாஸ்கி-டோட்
அறியப்படுவதுகுலக் கோட்பாடு
விருதுகள்(ஆஸ்திரேலியன் அகாதமி ஆஃப் சயின்ஸ்) (1969)இன் பெல்லோஷிப் விருது, ஆஸ்திரேலியன் கல்வியியல் கல்லூரியின் (1970) பெல்லோஷிப் விருது.
துணைவர்பெர்ன்ஹார்ட் நியூமன்
பிள்ளைகள்பீட்டர் எம். நியூமன்

ஜோஹன்னா (ஹன்னா) நியூமன் (Hanna Neumann) (நீ வொன் கெம்மெரர்) (பிப்ரவரி 12, 1914 – நவம்பர் 14, 1971), ஜெர்மனியைச் சேர்ந்த கணிதவியலாளர். இவர் கணிதத்தில் குலக் கோட்பாடு பிரிவில் பணிபுரிந்தமையால் அறியப்படுகிறார்.

சுயசரிதை[தொகு]

நியூமன் பெர்லினிலுள்ள லேங்க்விட்ஸ், ஸ்டெக்லிட்ஸ்- செலென்டார்ஃப் என்னுமிடத்தில் பிப்ரவரி 12, 1914இல் பிறந்தார். இவர், ஹீமான் மற்றும் கதாரினா வொன் கெம்மெரரின் மூன்றாவது குழந்தையாவார். முதலாம் உலகப் போர் நடைபெற்ற சமயத்தில் இவரது தந்தை இறந்ததினாலும், குடும்ப வருமானம் மிகவும் குறைவாக இருந்ததாலும் தன் 13வது வயதில் பள்ளிக் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து பொருளீட்டினார்.[1][2]

இரண்டு வருடம் தனியார் பள்ளியில் படித்த பின்னர், 'அகஸ்டே-விக்டோரியா-பெண்கள் பள்ளியில் 1922ம் ஆண்டு சேர்ந்தார். இவர் 1932இல் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் பெர்லின் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கணிதவியலுடன், பௌதிகம், உளவியல், இலக்கியம் மற்றும் சட்டம் ஆகியவற்றை கற்றுத் தேர்ந்தார். பல்கலைக் கழகத்தில் முதல் வருட படிப்பை முடித்தவுடன் இவருக்கு கணித நிறுவன நூலகத்தில் பகுதி நேர உதவியாளராக வேலை கிடைத்தது.[1][3]

1933, சனவரியில் பெர்ன்ஹார்ட் நியூமனுடன் ஹன்னாவுக்கு நட்பு ஏற்பட்டது. மார்ச்சு 1933இல் நாசிசம் ஆட்சிக்கு வந்தது. அதனால் யூதரான பெர்ன்ஹார்டு ஆகஸ்டு 1933இல் இங்கிலாந்திலுள்ள கேம்பிரிட்ச்சிற்குச் சென்றார். ஹன்னா, 1934இல் இலண்டன் சென்று பெர்ன்ஹார்டை ரகசியத் திருமணம் செய்து கொண்டார். பின்னர் ஜெர்மனி திரும்பி தன் படிப்பைத் தொடர்ந்தார்.[3] இவர் 1936இல் கணிதம் மற்றும் இயற்பியலில் முதல் வகுப்பில் தேர்ச்சிபெற்று பட்டம் பெற்றார். 1937இல் முனைவர் பட்டத்திற்காக, காட்டிங்கென் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்தார்.[3]

இந்த சமயத்தில், ஹன்னா மற்றும் பெர்ன்ஹார்டு நண்பர்கள் மூலம் தகவல்களைப் பறிமாறிக் கொண்டனர். 1936இல் பெர்ன்கார்டு ஒசுலோவில் நடந்த அனைத்துலகக் கணித அறிஞர் பேரவையில் கலந்து கொண்டார். அப்போது ஹன்னாவும், பெர்ன்ஹார்டும் சந்தித்துக் கொண்டனர். பின்னர் 1938இல் ஹன்னா இங்கிலாந்து சென்றார். அங்கு கார்டிஃப் என்னுமிடத்தில் 1938, திசம்பரில் பெர்ன்ஹார்டை மணந்து கொண்டார். இவர்களுக்கு 5 குழந்தைகள் உள்ளனர். 1940இல் நியூமன்ஸ் குடும்பம் ஆக்சுபோர்டு சென்றது.1944இல் ஹன்னா நியூமன் டி.பில். பட்டம் பெற்றார்.[1]

ஆய்வு மற்றும் வெளியீடு[தொகு]

இவர் 'குலங்களின் வகைகள்' பற்றி ஆய்வு மேற்கொண்டு பல கட்டுரைகள் எழுதியுள்ளார். இவை 1967இல் வெளியிடப்பட்டன. மேலும், இவை ருஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன. இவர் எழுதிய 34 கட்டுரைகளும் சர்வதேச பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.[1]

போதனை மற்றும் மேற்பார்வை[தொகு]

ஆஸ்திரேலியன் பல்கலைக்கழகம், கணிதத்திற்கான 'ஹானர்ஸ்' பட்டப்படிப்பை அற்முகப்படுத்தியது. இதற்கான சிறந்த கணிதவியலாளரை தேர்வு செய்யும் போது அந்த வாய்ப்பு ஹன்னாவிற்கு கிடைத்தது. போதிய எடுத்துக்காட்டுகளுடன் கூடிய பயிற்சியை மாணவர்களுக்கு போதித்தார்.[3] ஹன்னா 10 மாணவர்களுக்கு முனைவர் பட்டம் பெற மேற்பார்வை செய்துள்ளார். மேலும், இவரின் வழித்தோன்றலாக 51 பேர் உள்ளனர்.[4]

அங்கீகாரம்[தொகு]

இவர் 1969 இல் ஆஸ்திரேலியன் அகாதமி ஆஃப் சயின்ஸ் இன் பெல்லோஷிப் விருதிற்கும், 1970இல் ஆஸ்திரேலியன் கல்வியியல் கல்லூரியின் பெல்லோஷிப் விருதிற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Fowler, Kenneth F.. "Neumann, Hanna (1914–1971)". Australian Dictionary of Biography (MUP). http://adb.anu.edu.au/biography/neumann-hanna-11224. பார்த்த நாள்: 3 December 2013. 
  2. "Hanna Neumann". MacTutor History of Mathematics Archive. http://www-history.mcs.st-andrews.ac.uk/Biographies/Neumann_Hanna.html. பார்த்த நாள்: 3 December 2013. 
  3. 3.0 3.1 3.2 3.3 Newman, Michael Frederick; Wall, Gordon Elliott. "Hanna Neumann 1914-1971". Australian Academy of Science Biographical Memoirs. https://www.science.org.au/fellowship/fellows/biographical-memoirs/hanna-neumann-1914-1971. பார்த்த நாள்: 3 December 2013. 
  4. "Hanna Neumann at Mathematics Genealogy". http://genealogy.math.ndsu.nodak.edu/id.php?id=53256. பார்த்த நாள்: 3 December 2013. 

வெளி இணைப்புகள்[தொகு]

  • கணித மரபியல் திட்டத்தில் ஹன்னா நியூமன்
  • O'Connor, John J.; Robertson, Edmund F., "ஹன்னா நியூமன்", MacTutor History of Mathematics archive, புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹன்னா_நியூமன்&oldid=2701524" இருந்து மீள்விக்கப்பட்டது