ஹனி சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஹனி சிங், இந்திய நாட்டு இசையமைப்பாளரும், பாடகரும் ஆவார். இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவரது இயற்பெயர் ஹிர்தேஷ் சிங். இவர் பல இந்தித் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

தொழில்[தொகு]

ஷகல் பே மத் ஜா என்ற இந்தி படத்திற்கு பாடல் உருவாக்கி புகழ் பெற்றார். இவர் தமிழிலும் பாடல்களை பாடியுள்ளார். எதிர்நீச்சல் திரைப்படத்திலும் எதிர்நீச்சலடி என்ற பாடலை பாடினார். 2005 இல் பேஷி என்ற பாடல் தொகுப்பின் மூலம் பாடகராகினார். கடைசியாக, 2013 ஆண்டில் புளூ ஐஸ் என்ற பாடலை வெளியிட்டார். பஞ்சாபியிலும் பாடல்களைப் பாடி விருதுகளைப் பெற்றுள்ளார். இதுவரை இரண்டு இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். `

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹனி_சிங்&oldid=1607317" இருந்து மீள்விக்கப்பட்டது