ஹண்டிங்டன் விலங்கு வன்கொடுமையை நிறுத்து
நோக்கம் | ஹண்டிங்டன் லைஃப் சயின்சஸ் ஆய்வகத்தை எதிர்த்தும் மூடக்கோரியும் விலங்குரிமை பிரசாரம் விலங்குப் பரிசோதனைகளுக்கான எதிர்ப்புப் பிரசாரம் |
---|---|
தலைமையகம் | |
மூலம் | இங்கிலாந்து |
ஹண்டிங்டன் விலங்கு வன்கொடுமையை நிறுத்து (Stop Huntingdon Animal Cruelty, SHAC) என்பது ஐரோப்பாவின் மிகப்பெரிய ஒப்பந்த விலங்குப் பரிசோதனை ஆய்வகமான ஹண்டிங்டன் உயிர் அறிவியல் நிறுவனத்தை மூடுவதற்கான ஒரு பன்னாட்டு விலங்குரிமை பிரச்சார அமைப்பாகும். எலிகள் முதல் முதனிகள் வரையிலாக பல்வேறு விலங்கினங்களின் மீதும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 75,000 விலங்குகளில் மருத்துவ மற்றும் பலதரப்பட்ட பொருட்களை HLS ஆய்வகம் பரிசோதித்தது.[1][2][3][4] இது 1989 முதல் விலங்குரிமை ஆர்வலர்கள், நிருபர்கள் உள்ளிட்டோரது செயற்பாடுகளால் பெரிய அளவில் கசியவிடப்பட்டும் இரகசிய விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டும் வந்திருந்தது.[5]
1997-ம் ஆண்டு HLS ஆய்வக ஊழியர்கள் தங்கள் பராமரிப்பில் இருந்த பீகல் வகை நாய்களை உலுக்குவதையும், குத்துவதையும், அவற்றிடம் கத்துவதையும் பீட்டா அமைப்பினர் அவ்வாய்வகத்திற்குள்ளே ரகசியமாக படமெடுத்து வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மூன்று பிரித்தானிய விலங்குரிமை ஆர்வலர்களான கிரெக் அவேரி, ஹீதர் ஜேம்ஸ், மற்றும் நடாஷா டெல்மேக்னே ஆகியோரால் ஸ்டாப் ஹண்டிங்டன் அனிமல் க்ரூயல்டி அமைப்பு தொடங்கப்பட்டது.[6] இந்தக் காணொளிகள் ஐக்கிய இராச்சியத்தில் சேனல் 4 என்ற தொலைக்காட்சி நிறுவனத்தால் ஒளிபரப்பப்பட, அக்காட்சிகளில் இருந்த HLS ஆய்வக ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. மேலும் விலங்குப் பரிசோதனைகளைச் செய்வதற்கான HLS ஆய்வகத்தின் உரிமம் ஆறு மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டது. HLS ஆய்வகம் சட்ட நடவடிக்கை எடுப்பதாக பீட்டா நிறுவனத்தை அச்சுறுத்தியதைத் தொடர்ந்து பீட்டா தனது போராட்டங்களை நிறுத்தியது. இதனைத் தொடர்ந்து ஸ்டாப் ஹண்டிங்டன் அனிமல் க்ரூயல்டி அமைப்பு ஒரு தலைமையற்ற அமைப்பாக உருவெடுத்தது.[7]
இவற்றையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "A controversial laboratory", BBC News, 18 January 2001.
- ↑ "New bill clamps down on animal activist activity" பரணிடப்பட்டது 12 சூலை 2007 at the வந்தவழி இயந்திரம், Drug Researcher, 17 November 2006.
- ↑ "SPLCenter.org: From Push to Shove". 2003-10-19. Archived from the original on 19 October 2003. Retrieved 2021-12-30.
- ↑ Townsend, Mark. "Exposed: secrets of the animal organ lab", The Observer, 20 April 2003.
- ↑ "The First Investigation" பரணிடப்பட்டது 27 ஆகத்து 2008 at the வந்தவழி இயந்திரம்; "It's a Dog's Life" பரணிடப்பட்டது 27 ஆகத்து 2008 at the வந்தவழி இயந்திரம் (Zoe Broughton for Channel Four in 1996); "HLS busted again" பரணிடப்பட்டது 27 ஆகத்து 2008 at the வந்தவழி இயந்திரம் (Michelle Rokke for PETA in 1997); and Johnstone, Lucy and Calvert, Jonathan. "Terrible despair of animals cut up in name of research" பரணிடப்பட்டது 27 ஆகத்து 2008 at the வந்தவழி இயந்திரம் (Lucy Johnston for The Daily Express in 2000).
- Also see Mann, Keith. From Dusk 'til Dawn: An insider's view of the growth of the Animal Liberation Movement. Puppy Pincher Press, 2007, pp. 198–199.
- "Undercover video footage of HLS employees apparently dissecting a live monkey", filmed at the HLS Princeton Research Center, New Jersey, accessed 20 June 2009.
- ↑ Alleyne, Richard. "Terror tactics that brought a company to its knees", The Daily Telegraph, 19 January 2001.
- Also see "It's a Dog's Life", Countryside Undercover, Channel Four Television, 1997.
- ↑ Doward, Jamie and Townsend, Mark. "Beauty and the beasts", The Observer, 1 August 2004.
மேலும் படிக்க
[தொகு]- வெளியிணைப்புகள்
- Indymedia UK SHAC topic page
- The Shac 7
- The footage shot undercover inside HLS by PETA; see the same footage on YouTube.
- "Inside HLS", describes five undercover investigations into HLS between 1989 and 2001
- Diaries of Despair, Uncaged Campaigns, accessed 17 January 2011.
- "Hit 'Em Head On", SHAC, 9-minute video on YouTube, 2006.
- "Time for Action 3", SHAC, 4-minute video on YouTube, 2005.
- புத்தகங்களும் ஆய்வுக் கட்டுரைகளும்
- Bhattacharya, Shaoni. Scientists demand law against animal rights extremism, New Scientist, 22 April 2004.
- British Home Office. "Animal Welfare—Human Rights: protecting people from animal rights extremists", July 2004.
- Cox, Simon and Vadon, Richard. "How animal rights took on the world", BBC Radio 4, retrieved 18 June 2006.
- CrimethInc. Ex-Workers Collective (Fall 2006). "The SHAC Model: A Critical Assessment". Rolling Thunder (6): 11–28. http://www.crimethinc.com/texts/rollingthunder/shac.php. பார்த்த நாள்: 28 March 2009.
- Gibson, Ian. Statement by Dr. Ian Gibson (Norwich, North) Hansard, 19 March 2003.
- Robbins, John. "Red in Tooth and Law", The Lawyer, 16 August 2004.
- Lennard, Natasha. How the Prosecution of Animal Rights Activists as Terrorists Foretold Today’s Criminalization of Dissent The Intercept. 12 December 2019