அட் யாய்
அட் யாய் | |
---|---|
Hat Yai | |
தாய்லாந்து | |
அட் யாய் நகரின் மையப் பகுதி | |
ஆள்கூறுகள்: 7°1′N 100°28′E / 7.017°N 100.467°E | |
நாடு | ![]() |
மாநிலம் | சொங்கலா |
மாவட்டம் | அட் யாய் |
துணை மாவட்டம் நகராட்சி | 10 டிசம்பர் 1935 |
ஊராட்சி | 16 மார்ச் 1949 |
நகராட்சி | 24 செப்டம்பர் 1995 |
அரசு | |
• வகை | நகர நகராட்சி |
• மாநகர முதல்வர் | சகோர்ன் தோங்முனி |
பரப்பளவு | |
• Hat Yai | 21.00 km2 (8.20 sq mi) |
• நிலம் | 20.50 km2 (8.00 sq mi) |
• நீர் | 0.50 km2 (0.20 sq mi) 2.38% |
• Metro | 852.79 km2 (329.26 sq mi) |
பரப்பளவு தரவரிசை | 21-ஆவது |
மக்கள்தொகை (2019)[1] | |
• Hat Yai | 156,802 |
• தரவரிசை | 4th |
• அடர்த்தி | 7,467/km2 (19,340/sq mi) |
• பெருநகர் | 404,004 |
நேர வலயம் | தாய்லாந்து நேரம் ஒ.ச.நே +7 |
அஞ்சல் குறியீடு | 90110 |
தாய்லாந்து தொலைபேசி எண்கள் | 074 |
வானூர்தி நிலையம் | (ஐசிஏஓ: HDY) Airport information for VTSS at Great Circle Mapper. |
இணையதளம் | hatyaicity.go.th |
அட் யாய் (மலாய்: Haad Yai; ஆங்கிலம்: Haad Yai அல்லது Had Yai; தாய்: หาดใหญ่); என்பது தெற்கு தாய்லாந்தில், மலேசியா-தாய்லாந்து எல்லைக்கு அருகில் உள்ள ஒரு நகரமாகும். இந்த நகரம் பாங்காக்கிற்கு தெற்கே 946 கி.மீ. (588 மைல்) தொலைவில் உள்ளது. மேலும் 156,802 (2019) மக்கள் தொகையைக் கொண்டுள்ளது[2].
அட் யாய் என்பது சொங்கலா (Songkhla province) மாநிலத்தின் மிகப்பெரிய நகரமாகும். மேலும் இது கிரேட்டர் அட் யாய்-சோங்க்லா பெருநகரப் பகுதியின் (Greater Hat Yai-Songkhla Metropolitan Area) ஒரு பகுதியாகும்.
சொங்கலா நகரம் பெரும்பாலும் மாநிலத் தலைநகராக தவறாக கருதப்படுகிறது. உண்மையில், சொங்கலா என்பது நிர்வாகம் மற்றும் கலாசார மையமாக உள்ளது; அதே நேரத்தில் அட் யாய் நகரம் ஒரு வணிக மையமாக உள்ளது.
வரலாறு[தொகு]
அட யாய் நகருக்கு முதலில் கோக் சாமெட் சுன் (Khok Samet Chun) என்று பெயரிடப்பட்டது, தெற்கு தொடருந்து நிலையம் அங்கு கட்டப்படும் வரை அட் யாய் ஒரு சிறிய கிராமமாக இருந்தது.
போக்குவரத்து[தொகு]
அட் யாய் தொடருந்து நிலையம்[தொகு]
தொடருந்து பாதை கட்டப்பட்டதில் இருந்து அட் யாய் சந்திப்பு தெற்கு தாய்லாந்தின் போக்குவரத்து மையமாக மாறியுள்ளது. தெற்கு தாய்லாந்தில் உள்ள மிகப்பெரிய தொடருந்து நிலையங்களில் ஒன்றான அட் யாய் தொடருந்து நிலையம் (Hat Yai Railway Station) ஒரு பன்னாட்டு தொடருந்து நிலையமாகும்.
இது தாய்லாந்து மாநில தொடருந்து நிறுவனத்தின் (State Railway of Thailand) மூலம் சேவையாற்றும் 26 தொடருந்துகள்; மற்றும் மலாயா தொடருந்து நிறுவனம் (KTMB) மூலம் சேவையாற்றும் 2 தொடருந்துகள் உட்பட ஒரு நாளைக்கு 28 பயணிகள் தொடருந்துகளைக் கையாளுகிறது. அட் யாய் தெற்கு தாய்லாந்தில் உள்ளூர் தொடருந்து சேவைகளுக்கான மையமாகவும் உள்ளது.
அட் யாய் பேருந்து நிலையம்[தொகு]
இரயில் பாதைக்கு இணையாக ஆசிய நெடுஞ்சாலை 2 (Asian highway 2); ஆசிய நெடுஞ்சாலை 18 (Asian highway 18) அட் யாயில் இருந்து தெற்கே தீபகற்ப மலேசியாவின் கிழக்கு கடற்கரையில் செல்கிறது.
அட் யாய் பேருந்து நிலையம் (Hat Yai Bus Terminal) தெற்கு தாய்லாந்தில் உள்ள ஒரு முக்கிய போக்குவரத்து மையமாகும். இந்த நிலயம் அட் யாய் நகரத்தின் தெற்கு பிராந்தியத்தில் உள்ள ஒவ்வொரு நகரத்தையும் இணைக்கிறது. மற்றும் பாங்காக்; நாகோன் இரட்சசிமா (Nakhon Ratchasima) மாநகரங்கள் உள்ளிட்ட பிற நகரங்களுடன் இணைக்கும் பேருந்து சேவைகளை வழங்குகிறது.
அட் யாய் பன்னாட்டு வானூர்தி நிலையம்[தொகு]
அட் யாய் பன்னாட்டு வானூர்தி நிலையம் (Hat Yai International Airport) (டிசம்பர் 1972-இல் பன்னாட்டு வானூர்தி நிலையமாக மேம்படுத்தப்பட்டது. இந்த பன்னாட்டு வானூர்தி நிலையம், அட் யாய் நகரத்தில் இருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ளது. தாய்லாந்து முழுவதும் உள்ள இடங்களுக்குச் சேவை செய்கிறது. மற்றும் அட் யாய் நகரத்தை கோலாலம்பூர் மற்றும் சிங்கப்பூர் மாநகரங்களுடன் இணைக்கிறது.
மெக்காவிற்கு புனித யாத்திரை செல்லும் முசுலிம்களுக்கு இது ஒரு முக்கியமான வானூர்தி நிலையமாகும். இந்த வானூர்தி நிலையம் தாய்லாந்தின் ஐந்தாவது பரபரப்பான விமான நிலையமாக பட்டியலிடப்பட்டு உள்ளது, 2018-இல் 4,256,107 பயணிகளுக்குச் சேவை செய்து உள்ளது.
மக்கள்தொகையியல்[தொகு]
மக்கள்தொகை அடிப்படையில், தாய்லாந்து மலாய் மக்கள் (Thai Malays); தாய்லாந்து சீனர் மக்கள் (Thai Chinese); தாய்லாந்தின் மற்ற நகரங்களை விட அட் யாய் நகரில் அதிகமாய் வாழ்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அட் யாயில் பேசப்படும் முக்கிய மொழிகள் தெற்கு தாய்லாந்து (Southern Thai) பேச்சுவழக்கு மற்றும் சொங்கலா மலாய் (Songkhla Malay). அட் யாயின் மக்கள்தொகை 2019-ஆம் ஆண்டு நிலவரப்படி 156,802 ஆக இருந்தது. தாய்லாந்து நாட்டில் பாங்காக், நோந்தாபுரி (Nonthaburi) மற்றும் பாக் கிரெட்டு (Pak Kret) நகரங்களுக்குப் பிறகு மக்கள்தொகையில் நான்காவது இடத்தில் உள்ளது.
அட் யாய் சந்தைகள்[தொகு]
தாய்லாந்து நாட்டு மக்களுக்கும் மற்றும் வெளிநாட்டினருக்கும் கடை உலா இடமாக அட் யாய் புகழ் பெற்றுள்ளது. நகரம் முழுவதும் பல்பொருள் அங்காடிகள், வணிக வளாகங்கள் மற்றும் சந்தைகள் உள்ளன.
நிப்பாட் உ திட் (Nipat U-tid 1, 2 & 3) சாலைகளில் உள்ள சுந்திசுக் (Suntisook) சந்தை மிகவும் பிரபலமானது. இறக்குமதி செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவு, அழகுசாதனப் பொருட்கள், துணிகள், மின்சாதனங்கள் முக்கிய விற்பனைப் பொருள்களாக விளங்குகின்றன. நகரின் முக்கிய காய்கறிச் சந்தை தொடருந்து நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளது.
மற்றொரு புகழ்பெற்ற சந்தை சுபசார்ன் ருங்சன் சாலையில் (Supasarn Rungsan) உள்ள கிம் யோங் (Kim Yong) சந்தை. கிம் யோங் சந்தை என்பது அட் யாய், சொங்கலா மையத்தில் அமைந்துள்ள ஒரு பிரபலமான சந்தையாகும். இந்தச் சந்தை இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பாகம் முன்பு "சலோம்தாய்" சினிமா (Chaloemthai) என்று அழைக்கப்பட்ட 2 மாடி கட்டிடம். இரண்டாவது பகுதி சாலையோரமாக உள்ள ஒரு வெளிப்புற சந்தை.
குறிப்புகள்[தொகு]
- ↑ "Population and home statistics report for the year 2019" [Statistics, population and house statistics for the year 2019]. Registration Office Department of the Interior, Ministry of the Interior. 31 December 2019. 14 ஜூன் 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது. 10 March 2020 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Population". stat.bora.dopa.go.th. 2022-06-09 அன்று பார்க்கப்பட்டது.