ஹட்ஜா சரன் தாராபா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஹட்ஜா சரன் தாராபா (Hadja Saran Daraba) (பிறப்பு:1945, கினியா ) இவர் மனோ நதி மகளிர் அமைதிக்கான வலைப்பின்னலின் நிறுவனர் ஆவார். [1]

வாழ்க்கை[தொகு]

இவரது தந்தை கினியாவின் முதல் அதிபராக இருந்த கினிய அரசியல் தலைவரான அகமது சாகோ டூரின் கீழ் ஒரு சிப்பாயாக இருந்தார். இவர் லைப்சிக் மற்றும் ஹாலில் மருந்தியல் படித்தார். 1970ஆம் ஆண்டில், இவர் கினியாவுக்குத் திரும்பி, ஹட்ஜா மாஃபோரி பங்கௌரா கல்லூரியில் கற்பிக்கும் பணியில் ஈடுபட்டார். வெளிநாட்டு வர்த்தக அமைச்சகத்தில் துணை தேசிய ஏற்றுமதி இயக்குநராக நியமிக்கப்படுவதற்கு முன்பு. 1996 இல், இவர் சமூக விவகாரங்கள் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் மேம்பாட்டு அமைச்சராக இருந்தார். [2]

2010ஆம் ஆண்டில், கினியாவின் அதிபர் பதவிக்கு போட்டியிட்ட 24 வேட்பாளர்களில் ஒரே பெண்மணியாவார். [3] 2010 மற்றும் 2017க்கும் இடையில், அவர் மனோ நதி பிராந்தியத்தின் அமைதிக்கான வலைப்பின்னலின் பொதுச் செயலாளராக இருந்தார். [4]

மனோ நதி மகளிர் அமைதிக்கான வலைப்பின்னல்[தொகு]

மனோ நதி மகளிர் அமைதி வலைப்பின்னல் என்பது சியரா லியோனின் ஃப்ரீடவுனில் தலைமையகத்தைக் கொண்ட ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமாகும். இது மனோ நதி பிராந்தியத்தில் (லைபீரியா, சியரா லியோன் மற்றும் கினியா) அமைதி மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. 2000 மே மாதத்தில் மேற்கு ஆபிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகத்தின் (ஈகோவாஸ்) அனுசரணையின் கீழ் மனோ நதி மகளிர் அமைதிக்கான வலைப்பின்னல் உருவாக்கப்பட்டது. உள்ளூர் தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த பெண்கள் தலைவர்கள் குழு நைஜீரியாவின் அபுஜாவில் சந்தித்தபோது, ​​ஆப்பிரிக்காவில் அமைதியை மீட்டெடுக்கும் பணியில் தங்கள் பங்களிப்பை ஊக்குவித்தது. குறிப்பாக மனோ நதி பிராந்தியத்தில். சுவிட்சர்லாந்தை தளமாகக் கொண்ட ஃபெம்ம்ஸ் அஃப்ரிக் சோலிடரிட்டா (எஃப்ஏஎஸ்) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் பெருமளவில் உதவிய முயற்சிகளின் உச்சக்கட்டத்தை குறிக்கும் மனோ நதி மகளிர் அமைதிக்கான வலைப்பின்னல், சுமார் 30 குடை அமைப்புகளைக் கொண்டுள்ளது. [5]

குறிப்புகள்[தொகு]

  1. simodbt (2017-06-29). "Portrait. Hadja Saran Daraba Kaba, une dame de fer au parcours impressionnant (Par Ibrahima Diallo)". Mediaguinee.org (in பிரெஞ்சு). 2020-03-10 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Portrait de Hadja Saran Daraba Kaba: Une dame de fer au parcours impressionnant". guineesignal.com/. 2020-03-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Unknown parameter |= ignored (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  3. "Présidentielle en Guinée: la Cour suprême rend publique la liste des candidats". RFI (in பிரெஞ்சு). 2010-05-25. 2020-03-10 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Mano River : Hadja Saran Daraba présente son bilan à la tête de l'organisation". guineelive.com.
  5. [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹட்ஜா_சரன்_தாராபா&oldid=3331289" இருந்து மீள்விக்கப்பட்டது