ஹசன் அப்தால்

ஆள்கூறுகள்: 33°49′10″N 72°41′20″E / 33.819487°N 72.689026°E / 33.819487; 72.689026
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹசன் அப்தால்
حسَن ابدال
மாநகரம்
பஞ்சா சாகேப் குருத்துவாரா நகரத்தின் வானத்தை நோக்கி உயர்ந்து நிற்கிறது
ஹசன் அப்தால் is located in பஞ்சாப், பாக்கிஸ்தான்
ஹசன் அப்தால்
ஹசன் அப்தால்
ஹசன் அப்தால் is located in பாக்கித்தான்
ஹசன் அப்தால்
ஹசன் அப்தால்
ஆள்கூறுகள்: 33°49′10″N 72°41′20″E / 33.819487°N 72.689026°E / 33.819487; 72.689026
நாடு பாக்கித்தான்
மாகாணம்பஞ்சாப்
மாட்டம்அட்டோக் மாவட்டம்
ஏற்றம்308 m (1,010 ft)
மக்கள்தொகை (1998)
 • மொத்தம்37,789
 • Estimate (2007)54,200
நேர வலயம்பாகீத்தன் சீர் நேரம் (ஒசநே+5)
தொலைபேசி இணைப்பு எண்057
நகரங்களின் எண்னிக்கை1
ஒன்றியக் குழுக்களின் எண்ணிக்கை2

ஹசன் அப்தால் (Hasan Abdal) என்பதுபாக்கித்தானில் பஞ்சாப் மாகாணத்தின் அட்டோக் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது நாட்டின் தலைநகரான இஸ்லாமாபாத்திலிருந்து வடமேற்கே 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. மேலும், இது ஹசன் அப்தால் வட்டத்தின் தலைமையகமாகும்.

சீக்கிய மதத்தின் மிக புனிதமான தளங்களில் ஒன்றான பஞ்சா சாகேப் குருத்துவாராவின் இல்லமாக, ஹசன் அப்தால் ஒரு முக்கியமான யாத்திரை தலமாக இருக்கிறது. 16 ஆம் நூற்றாண்டின் முகலாயப் பேரரசர் அக்பருடனான தொடர்பால் இந்த நகரம் குறிப்பிடத்தக்கதாகும் - அக்பர் காலத்திற்கு முந்தைய நகரத்தின் பல நினைவுச்சின்னங்கள், இதில் முகலாயத் தோட்டமான வா தோட்டங்கள், ஹக்கீம்களின் கல்லறை மற்றும் இலாலா ருக் கல்லறை ஆகியவை அடங்கும் . ஹசன் அப்தால் தக்சசீல நகருக்கு அருகிலும் உள்ளது - யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான இது அதன் பண்டைய இந்திய பல்கலைக்கழக சகாப்தமான இந்து மற்றும் பௌத்த இடிபாடுகளுக்கு பிரபலமானது.

இடம்[தொகு]

ஹசன் அப்தால் வடக்கு பஞ்சாபின் ஒரு மூலோபாய பகுதியில் அமைந்துள்ளது. மேலும் முகலாயப் போர்க் குழுவினர் வடமேற்கு எல்லைக்கு அனுப்பப்பட்ட இடமுமாகும். [1] நவீன காலங்களில், இந்நகரம் காரகோரம் நெடுஞ்சாலை மற்றும் எம் 1 மோட்டார்வே சந்திப்பில் அமைந்துள்ளது. பல பில்லியன் டாலர் மதிப்புள்ள சீனா-பாக்கித்தான் பொருளாதார பாதையின் (சிபிஇசி) ஒரு பகுதியாக, இப்பகுதி அத்திட்டத்தின் மேற்கு சீரமைப்புக்கான முனையமாக செயல்படுகிறது. [2] அதே நேரத்தில் ஹக்லா-தேரா இஸ்மாயில் கான் மோட்டார் பாதை இங்கிருந்து தொடங்குகிறது.

வரலாறு[தொகு]

ஹசன் அப்தாலில் 1589 இல் கட்டப்பட்ட ஹக்கீம்களின் கல்லறை.
இலாலா ருக் கல்லறை 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இது பாரம்பரியமாக அக்பர் பேரரசரின் மகளின் கல்லறை என்று நம்பப்படுகிறது.

கி.பி 7 ஆம் நூற்றாண்டில் இந்த இடத்தைப் பார்வையிட்ட பிரபல சீனப் பயணி சுவான்சாங், தட்சசீலத்தின் வடமேற்கில் 70 மைல் சீன மைல் தூரமுள்ள எலாபத்ராவின் புனித நீரூற்று பற்றி குறிப்பிடுகிறார், இது பஞ்சா சாகேப்பின் குருத்வாரா என அடையாளம் காணப்பட்டுள்ளது. [3] அயினி அக்பரியில் இந்த நகரம் குறிப்பிடப்பட்டுள்ளது. காஷ்மீரிலிருந்து திரும்பும் வழியில் அக்பர் இந்த ஊருக்கு வந்ததும் குறிப்பிடப்பட்டுள்ளது.

1608 மற்றும் 1611 க்கு இடையில் இந்தியா முழுவதும் பயணம் செய்த வில்லியம் பிஞ்ச் என்பவர், இந்நகரை ஒரு "ஒரு சிறிய நதி மற்றும் பல அழகான குளங்களைக் கொண்ட ஒரு இனிமையான நகரம்" என்று விவரிக்கிறார். அதில் பல மீன்கள் மூக்கில் தங்க மோதிரங்களைக் கொண்டுள்ளன ...; நீர் மிகவும் தெளிவாக காணப்படுகிறது" என்று விவரிக்கிறார். [4]

வடமேற்கு எல்லைக்கு முகலாயப் படைகளின் போரிடும் பயணங்களுக்கு இந்த நகரம் ஒரு முக்கிய இடமாக இருந்தது. [5] முகலாய பேரரசர் ஜஹாங்கீர் தனது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகமான துஸ்க்-இ-ஜஹாங்கிரியில் இந்த நகரத்தை பாபா ஹசன் அப்தால் என்ற பெயரில் குறிப்பிடுகிறார். அவர் மூன்று நாட்கள் இங்கு தங்கியிருந்தார். [4] ஹசன் அப்தாலை பல்வேறு முகலாய மன்னர்கள் காஷ்மீர் செல்லும் வழியில் பார்வையிட்டுள்ளனர். [6]

ராஜா மான் சிங் அக்பரின் ஆட்சிக் காலத்தில் அருகிலுள்ள வா தோட்டங்களை கட்டினார். இந்த மொட்டை மாடி தோட்டங்கள் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டன. [7] ஷாஜகான் காபூலுக்கான தனது நான்கு பயணங்களில் ஷாஜகான் காபூலுக்கான தனது நான்கு பயணங்களில் ஹசன் அப்தாலின் வா தோட்டங்களில் ஓய்வெடுத்து சென்றுள்ளார். "அஃப்ரிடி கிளர்ச்சியை" தணிக்கும் பொருட்டு பேரரசர் ஔரங்கசீப் 1674 ஆம் ஆண்டு தொடங்கி ஒரு வருடத்திற்கும் இங்கு மேலாக தங்கியிருந்தார்இந்தத் தோட்டங்களில் ஓய்வெடுத்து சென்றுள்ளார். [8] [9] தோட்டங்களில் பேரரசர் ஔரங்கசீப் இங்கு தங்கியிருந்தது பல உள்ளூர் பஷ்டூன் பழங்குடியினரை கிளர்ச்சியைக் கைவிட்டு, முகலாயர்களுடன் சேர்ந்து கொள்ளச் செய்தது. [10]

குருத்வாரா[தொகு]

1521 ஆம் ஆண்டில் சீக்கிய மதத்தின் நிறுவனர் குரு நானக் இந்த நகர்த்துக்கு வந்துள்ளார். அவரது கை அச்சு இருந்ததாக நம்பப்படும் ஒரு புனிதமான பாறையில் அவர் தங்கியிருந்த இடத்திலேயே ஒரு குருத்வாரா கட்டப்பட்டது. [6] கை அச்சின் தோற்றம் குறித்து வெவ்வேறு கதைகள் உள்ளன.

உள்கட்டமைப்பு[தொகு]

ஹசன் அப்தால் வடமேற்கு நோக்கிச் செல்லும் காரகோரம் நெடுஞ்சாலையின் சந்திப்புக்கு அருகில் அமைந்துள்ளது. மேலும் நகரை வடமேற்கு மற்றும் தென்கிழக்கு புள்ளிகளுடன் இணைக்கும் எம் 1 மோட்டார் பாதையிலும் உள்ளது. பல பில்லியன் டாலர் மதிப்புக் கொண்ட சீனா-பாக்கித்தான் பொருளாதாரப் பாதையின் (சிபிஇசி) ஒரு பகுதியாக, காரகோரம் நெடுஞ்சாலை புனரமைக்கப்படவுள்ளது. அதே நேரத்தில் நகரத்தின் ஒரு பகுதி இந்தத் திட்டத்தின் மேற்கு சீரமைப்புக்கான முனையமாக செயல்படும். [11] அருகிலுள்ள ஹக்லா கிராமத்திலிருந்து, ஹக்லா -தேரா இஸ்மாயில் கான் மோட்டார் பாதை நகரிலிருந்து தென்மேற்கே ஓடி, கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள தேரா இஸ்மாயில் கானுடன் நகரை இணைக்கும்.

சுற்றுச்சூழல்[தொகு]

படிகம் போன்ற தெளிவான நீர் மற்றும் லக்கோட்டா பழத்தோட்டங்களுடன் கூடிய புதிய நீரூற்றுகளால் சூழப்பட்ட இந்த நகரம் சமீப காலம் வரை ஒரு அழகிய இடமாக இருந்தது. ஆரம்பகால கணக்குகளில் குறிப்பிடப்பட்டுள்ள அதன் அழகு [4] எப்படியாவது அதன் மக்கள் தொகையில் அதிவேக அதிகரிப்புக்கு காரணமான தவறான திட்டமிடலில் இருந்து தப்பித்துள்ளது.

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

 1. Moon, Farzana (2015). The Moghul Saint of Insanity. Cambridge Scholars Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781443883429. https://books.google.com/books?id=_o_WCgAAQBAJ&q=%22hasan+abdal%22&pg=PA66. பார்த்த நாள்: 2 June 2017. 
 2. "China to finance 90% of Sukkur-Multan Motorway". 12 May 2016. http://dailytimes.com.pk/pakistan/12-May-16/china-to-finance-90-of-sukkur-multan-motorway. பார்த்த நாள்: 13 May 2016. 
 3. Prasad, Ram Chandra (1980). Early English Travellers in India: A Study in the Travel Literature of the Elizabethan and Jacobean Periods with Particular Reference to India. Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788120824652. https://books.google.com/books?id=4nUx8ZzIHBsC&q=%22hasan+abdal%22&pg=PA224. பார்த்த நாள்: 2 June 2017. 
 4. 4.0 4.1 4.2 Early English Travellers in India by Ram Chandra Prasad
 5. Moon, Farzana (2015). The Moghul Saint of Insanity. Cambridge Scholars Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781443883429. https://books.google.com/books?id=_o_WCgAAQBAJ&q=%22hasan+abdal%22&pg=PA66. பார்த்த நாள்: 2 June 2017. 
 6. 6.0 6.1 Archaeological & Historical Sites -Pakistan government
 7. Asher, Catherine Blansha (1992). Architecture of Mughal India, Part 1, Volume 4. Cambridge University Press. https://books.google.com/books?id=3ctLNvx68hIC&q=%22hasan+abdal%22+mughal&pg=PA81. பார்த்த நாள்: 2 June 2017. 
 8. Gandhi, Surjit Singh (2007). History of Sikh Gurus Retold: 1606-1708 C.E. Atlantic Publishers & Dist. https://books.google.com/books?id=vZFBp89UInUC&q=%22hasan+abdal%22&pg=PA683. பார்த்த நாள்: 2 June 2017. 
 9. "The Roads Beyond Lahore: The Wah Garden at Hasan Abdal". http://www.mughalgardens.org/html/roads-wah.html. 
 10. Moon, Farzana (2015). The Moghul Saint of Insanity. Cambridge Scholars Publishing. https://books.google.com/books?id=_o_WCgAAQBAJ&q=%22hasan+abdal%22&pg=PA66. பார்த்த நாள்: 2 June 2017. 
 11. . 12 May 2016. http://dailytimes.com.pk/pakistan/12-May-16/china-to-finance-90-of-sukkur-multan-motorway. 

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Hasan Abdal
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹசன்_அப்தால்&oldid=3081890" இருந்து மீள்விக்கப்பட்டது