ஹஃபிசுல்லா அமீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அஃபிசுல்லா அமீன்
Hafizullah Amin
படிமம்:Hafizullah Amín.jpg
1979 இல் அமீன்
ஆப்கானித்தான் மக்கள் ஜனநாயகக் கட்சி
பதவியில்
14 செப்டம்பர் 1979[1] – 27 திசம்பர் 1979
முன்னையவர்நூர் முகம்மது தராக்கி
பின்னவர்பப்ராக் கர்மால்
புரட்சிப் பேரவைத் தலைவர்
பதவியில்
14 செப்டம்பர் 1979 – 27 திசம்பர் 1979
முன்னையவர்நூர் முகம்மது தராக்கி
பின்னவர்பப்ராக் கர்மால்
தேசியப் பாதுகாப்பு அமைச்சர்
பதவியில்
28 சூலை 1979 – 27 திசம்பர் 1979
பிரதமர்நூர் முகம்மது தராக்கி
இவரே
முன்னையவர்முகம்மது அசுலாம் வத்தஞ்சார்
பின்னவர்முகம்மது ராஃபி
அமைச்சரவைத் தலைவர்
பதவியில்
27 மார்ச் 1979 – 27 திசம்பர் 1979
தலைவர்நூர் முகம்மது தராக்கி
இவரே
முன்னையவர்நூர் முகம்மது தராக்கி
பின்னவர்பப்ராக் கர்மால்
வெளியுறவுத்துறை அமைச்சர்
பதவியில்
1 மே 1978 – 28 சூலை 1979
பிரதமர்நூர் முகம்மது தராக்கி
இவரே
முன்னையவர்முகம்மது தாவூத் கான்
பின்னவர்சா வாலி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1929-08-01)1 ஆகத்து 1929
பாக்மான், ஆப்கானித்தான் இராச்சியம்
இறப்பு27 திசம்பர் 1979(1979-12-27) (அகவை 50)
தாச்பெக் அரண்மனை, காபுல், ஆப்கானித்தான் சனநாயகக் குடியரசு
இளைப்பாறுமிடம்தாஜ்பெக் அரண்மனை
அரசியல் கட்சிஆப்கானித்தான் மக்கள் ஜனநாயகக் கட்சி
துணைவர்பத்மனா[2]
பிள்ளைகள்24[3]
கல்விகொலம்பியா பல்கலைக்கழகம் (முதுகலை)
தொழில்ஆசிரியர், குடிமைப் பணியாளர்
Military service
பற்றிணைப்புஆப்கானித்தான் ஆப்கானித்தான் சனநாயகக் குடியரசு
போர்கள்/யுத்தங்கள்சாவுட் புரட்சி
1979 எழுச்சி

ஹஃபிசுல்லா அமீன் (Hafizullah Amin, 1 ஆகத்து 1929 – 27 திசம்பர் 1979) ஆப்கானிஸ்தானின் கம்யூனிச ஆட்சியில் இருந்த இரண்டாவது அதிபர் ஆவார்.

அமீன் 104 நாட்கள் மட்டுமே ஆட்சியில் இருந்தார். அக்காலகட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளை ஆப்கானிய பாதுகாப்புக்குள் உட்படுத்த முனைந்தார். டிசம்பர் 27, 1979 இல் இவரது எதிர்ப்பாளர்கள் சோவியத் படைகளின் துணையுடன் இவரையும் இவரைச் சேர்ந்த 300 பேரையும் கொன்று சோவியத் சார்பான பப்ராக் கர்மால் என்பவரை பதவியிலமர்த்தினர்.

காபூல் பல்கலைக்கழகப் பட்டதாரியான அமீன் பட்டப்பின் படிப்புக்காக ஐக்கிய அமெரிக்கா சென்றார். பட்டம் பெற்றமலேயே நாடு திரும்பிய அமீன் அங்கு ஆசிரியத் தொழிலை மேற்கொண்டார்.

மக்கள் ஜனநாயகக் கட்சியில் இணைந்து அதன் மார்க்சிய மக்கள் பிரிவில் ஒரு முக்கிய உறுப்பினரானார். 1978 இல் முகமது டாவூட் கான் தலைமையிலான அரசுக்கெதிரான புரட்சிக்கு தலைமை தாங்கினார். ஏப்ரல் 28, 1978 இல் டாவூடும் அவரது குடும்பத்தினரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதன் பின்னர் மக்கள் ஜனநாயகக் கட்சி நூர் முகமது தராக்கி தலைமையில் ஆட்சியைப் பிடித்தது. அமீனும் பாப்ராக் கர்மாலும் துணைப் பிரதமர்களாயினர்.

கட்சியின் மார்க்சிய மக்கள் பிரிவு ஆட்சியில் மிகுந்த செல்வாக்குப் பெற்றது. இதனை அடுத்து கர்மால் ஐரோப்பாவுக்குத் தப்பி ஓடினார். மார்ச் 1979 இல் கட்சியில் அமீனின் செல்வாக்கு அதிகமாயிற்று.

அமீனின் அதிபர் மாளிகையில் வைத்து இடம்பெற்ற கொலைமுயற்சி ஒன்றிலிருந்து அவர் தப்பினார். இதனையடுத்து அமீன் தனது ஆதரவாளர்களுடன் அதிபர் மாளிகையைக் கைப்பற்றி அதிபர் தராக்கியை சிறைப்பிடித்தார்.

1979 செப்டம்பர் 14 அன்று, அமீன் அரசைத் தனது முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். சில நாட்களின் பின்னர் தராக்கி இனந்தெரியாத நோய் காரணமாக இறந்ததாக அறிவிக்கப்பட்டது. அமீனின் ஆட்சியின் போது அவருக்கெதிராக சுமார் 18,000 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவருக்கு கட்சியிலும் மக்களிடையேயும் செல்வாக்குச் சரிந்தது.

இவரது காலத்தில் பல ஆப்கானியர்கள் ஈரானுக்கும் பாகிஸ்தானுக்கும் தப்பிச் சென்றனர்.

சோவியத் தலையீடு[தொகு]

1979 திசம்பர் 27] இல் சோவியத் இராணுவம் அரச மாளிகையை முற்றுகையிட்டு அமீனையும் அவரது காவற்படையினர் 200 பேரையும் சுட்டுக் கொன்று காபூலைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அன்றிரவு 7:15 மணிக்கு அரச வானொலியில் பாப்ராக் கர்மாலின் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட குரல் மூலம் ஆப்கானிஸ்தான் அமீனிடம் இருந்து விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மாஸ்கோவில் இடம்பெயர்ந்திருந்த நிலையில் பாப்ராக் கர்மால் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Hafizullah Amin". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். Archived from the original on 20 May 2015. பார்க்கப்பட்ட நாள் 4 September 2012.
  2. Misdaq 2006, ப. 136.
  3. Afgantsy: The Russians in Afghanistan 1979–89, by Rodric Braithwaite, p104
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹஃபிசுல்லா_அமீன்&oldid=3799203" இலிருந்து மீள்விக்கப்பட்டது