ஸ்வெத்லானா சவீத்ஸ்கயா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஸ்வெத்லானா யெவ்கேனியெவ்னா சவீத்ஸ்கயா
Svetlana Yevgenyevna Savitskaya
விண்வெளி வீரர்
தேசியம் சோவியத் / ரஷ்யர்
பிறப்பு ஆகஸ்ட் 8, 1948 (1948-08-08) (அகவை 67)
மாஸ்கோ, ரஷ்யா
வேறு தொழில் வானோடி பொறியாளர்
விண்பயண நேரம் 19நாள் 17மணி 06நிமி
தெரிவு 1980
பயணங்கள் சோயுஸ் டி-7, சல்யூட் 7, சோயுஸ் டி-5, சோயுஸ் டி-12

ஸ்வெத்லானா யெவ்கேனியெவ்னா சவீத்ஸ்கயா (Svetlana Yevgenyevna Savitskaya, ரஷ்ய மொழி: Светла́на Евге́ньевна Сави́цкая; பிறப்பு: ஆகஸ்ட் 8, 1948), என்பவர் முன்னாள் சோவியத் விண்வெளி வீராங்கனை ஆவார். இவர் சல்யூட் டி-7 விண்கலத்தில் 1982 இல் முதற் தடவையாகப் பயணித்தார். இவரே விண்ணுக்குச் சென்ற இரண்டாவது பெண்ணாவார். (வலண்டீனா டெரெஷ்கோவா முதலாவதாகச் சென்றார்).

சல்யூட் 7 விண்வெளி நிலையத்தில் ஜூலை 25, 1984 இல் விண்ணில் நடந்து சாதனை படைத்தார். இவரே விண்ணில் நடந்த முதலாவது பெண் என்ற பெருமையையும் பெற்றார். இவர் விண்வெளி நிலையத்துக்கு வெளியே 3 மணி 35 நிமிடங்கள் நேரம் நின்றிருந்தார்.

இரண்டு தடவைகள் சோவியத் வீரர் என்ற நாட்டின் உயர் விருதினையும் பெற்றார். சவீத்ஸ்கயா விண்வெளித் திட்டப் பணிகளில் இருந்து 1993 இல் ஓய்வு பெற்றார்.

ரஷ்யக் கூட்டமைப்பின் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ரஷ்ய நாடாளுமன்றத்தில் இவர் உறுப்பினராக உள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]

]