உள்ளடக்கத்துக்குச் செல்

ஸ்வப்னவஸவதத்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

'ஸ்வப்னவாசவதத்தம் ( சமஸ்கிருதம் : स्वप्नवासवदत्तम् , Svapnavāsavadattam ) ( ஆங்கிலம் : The dream of Vasavadatta ) என்பது பண்டைய இந்தியக் கவிஞர் பாஸாவால் எழுதப்பட்ட ஒரு சமஸ்கிருத நாடகம் ஆகும். இதன் காலம் பொ.வ.மு மூன்றாம் நூற்றாண்டு ஆகும்.

கதை

[தொகு]

கௌசாம்பி நாட்டு மன்னன் உதயணன் மற்றும் அவந்தி இளவரசி வாசவதத்தை ஆகியோரின் காதல், பிரிவு மற்றும் மீண்டும் இணைவதே இதன் கதைக்களம்.உதயணனின் மந்திரி யௌகந்தராயணன், நாட்டின் இழந்த பகுதிகளை மீட்கவும் அரசியல் பலத்தை அதிகரிக்கவும், வாசவதத்தை தீ விபத்தில் இறந்துவிட்டதாக ஒரு பொய்யான செய்தியைப் பரப்புகிறார். இதற்காக வாசவதத்தையைத் தலைமறைவாக இருக்கச் செய்கிறார். மன்னன் உதயணன் தன் மனைவியின் பிரிவால் வாடினாலும், அரசியல் காரணங்களுக்காக மகத இளவரசி பத்மாவதியை மணக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.தூக்கத்தில் இருக்கும் மன்னன் உதயணன் தன் கனவில் வாசவதத்தையைச் சந்தித்துப் பேசுகிறான். நிஜத்தில் அருகில் இருக்கும் வாசவதத்தை அவனது பேச்சிற்குப் பதில் கூறுகிறாள். இந்த 'கனவு' (ஸ்வப்னம்) காட்சியே நாடகத்தின் பெயருக்குக் காரணமாக அமைந்தது. இறுதியில் வாசவதத்தை உயிரோடு இருப்பதை மன்னன் அறிகிறான். அவர்களின் காதல் மீண்டும் மலர்வதுடன் நாடகம் மகிழ்ச்சியுடன் நிறைவடைகிறது.[1]

கதாப்பாத்திரங்கள்

[தொகு]

உதயணன்: வத்ச நாட்டின் மன்னன்.

வாசவதத்தை: உதயணனின் முதல் மனைவி.

பத்மாவதி: மகத நாட்டு இளவரசி, உதயணனின் இரண்டாவது மனைவி.

யௌகந்தராயணன்: உதயணனின் விசுவாசமிக்க மந்திரி.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்வப்னவஸவதத்தம்&oldid=4509384" இலிருந்து மீள்விக்கப்பட்டது