ஸ்ரீ நடராஜன்
தோற்றம்
(ஸ்ரீ (நடிகர்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஸ்ரீ | |
|---|---|
| பிறப்பு | ஸ்ரீராம் நடராஜன் சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
| இருப்பிடம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
| படித்த கல்வி நிறுவனங்கள் | ஆல்பா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. சென்னை லயோலா கல்லூரி |
| பணி | நடிகர் |
| செயற்பாட்டுக் காலம் | 2012 –தற்போது |
ஸ்ரீ என்கிற ஸ்ரீராம் நடராஜன் ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளிவந்த வழக்கு எண் 18/9 (2012) இல் முதன்முதலாக நடிகரானார்.
மிஷ்கின் இயக்கத்தில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் (2013) லோகேஸ் இயக்கத்தில் மாநகரம் (திரைப்படம்) (2017) போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றார்.
இவர் விஜய் தொலைக்காட்சியில் கனா காணும் காலங்கள் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்துள்ளார். பின்பு விஜய் தொலைக்காட்சி நடத்திய பிக் பாஸ் தமிழ் 1 நிகழ்ச்சியில் பங்குபெற்றார்.[1]
திரைப்படங்கள்
[தொகு]| ஆண்டு | படம் | கதாபாத்திரம் | குறிப்பு |
| 2012 | வழக்கு எண் 18/9 | வேலு | விஜய் விருதுகள் (சிறந்த திரைப்படம்) |
| 2013 | ஓநாயும் ஆட்டுக்குட்டியும் | சந்துரு | |
| 2015 | சோன் பப்டி | சிவா | |
| 2016 | வில் அம்பு | கார்த்திக் | |
| 2017 | மாநகரம் | பரணி | |
| 2023 | இறுகப்பற்று | அர்ஜுன் |
- தொலைக்காட்சி
- கனா காணும் காலங்கள் (2006)
- பிக் பாஸ் தமிழ் 1 (2017)