ஸ்ரீ ஹரி நவசக்தி நாகம்மன் ஆலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஸ்ரீ ஹரி நவசக்தி நாகம்மன் கோயில் இலங்கையில் திருகோணமலையில் பாலையூற்று என்ற ஊரில் அமைந்துள்ள கோயில் ஆகும். இதன் கருவறையிலே ஏழு அடி உயர புற்று காணப்படுகிறது. இங்கு பூசை செய்பவர் ஒரு பெண். எல்லோரும் அவரை "கோவில் அம்மா" என்றே அழைக்கின்றனர். சிலவேளைகளில் பூசை செய்யும் போது பாம்பு வந்து பூவை இழுத்துச் செல்வதை நாம் காணலாம். அம்மா, புற்றில் வளரும் லிங்கத்துக்கே பூவை எடுத்துச் சென்று படைப்பதாகக் கூறுகின்றார்.