ஸ்ரீ வடுகா அருங்காட்சியகம், பண்டுங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஸ்ரீ வடுகா அருங்காட்சியகம்
Museum Sri Baduga
Sri Baduga Museum.JPG
ஸ்ரீ வடுகா அருங்காட்சியகம்
நிறுவப்பட்டது5 சூன் 1980
அமைவிடம்ஜலான் பிகேஆர். 185 டெகல்லேகா, பண்டுங்
வகைபண்பாடு
உரிமையாளர்மேற்கு ஜாவாப்பகுதி அரசு
அருகிலுள்ள கார் நிறுத்துமிடம்வசதி உள்ளது
வலைத்தளம்Museum Sri Baduga Website


ஸ்ரீ வடுகா அருங்காட்சியகம் (Sri Baduga Museum) (இந்தோனேசிய அருங்காட்சியகம் ஸ்ரீ வடுகா ) இந்தோனேசியாவின் பண்டுங்கில் அமைந்துள்ள ஒரு மாநில அருங்காட்சியகம் ஆகும். ஒரு மாநில அருங்காட்சியகமாக, இந்த அருங்காட்சியகத்தில் மேற்கு ஜாவா மாகாணத்துடன் தொடர்புடைய பல்வேறு பொருட்கள் காட்சியில் வைக்கப்பட்டு உள்ளன. அவற்றில் சூடானிய கைவினைப்பொருட்கள், அலங்காரப் பொருட்கள், புவியியல் வரலாறு மற்றும் இயற்கை பன்முகத்தன்மை வளம் உள்ளிட்டவை காணப்படுகின்றன.

வரலாறு[தொகு]

ஸ்ரீ வடுகா அருங்காட்சியகம் முதன்முதலில் 1974 ஆம் ஆண்டில் பண்டுங்கிற்குள் இருந்த முன்னாள் நிர்வாகப் பிரிவான கவேதானன் தெகலேகாவின் அரசாங்க அலுவலகமாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு கட்டிடத்திற்குள் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜூன் 5, 1980 ஆம் நாளன்று, அருங்காட்சியகம் அதிகாரப்பூர்வமாக அருங்காட்சியகம் நெகேரி புரோபின்சி ஜாவா பாரத் ("மேற்கு ஜாவா மாகாணத்தின் மாநில அருங்காட்சியகம்") என்ற பெயரில் கல்வி மற்றும் பண்பாட்டு அமைச்சகத்தால் டாக்டர் தாவுத் யூசுப் அவர்களால் நிறுவப்பட்டது. 1990 ஆம் ஆண்டில், இந்த அருங்காட்சியகத்திற்கு 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சூடானிய மன்னர் ஸ்ரீ வடுக மகாசாவின் நினைவாக அருங்காட்சியகம் நெகேரி புரோபின்சி ஜாவா பாரத் ஸ்ரீ பதுகா (மேற்கு ஜாவா மாகாணத்தின் ஸ்ரீ வடுகா மாநில அருங்காட்சியகம்") அல்லது ஸ்ரீ வடுகா அருங்காட்சியகம் என்று மறு பெயர் சூட்டப்பட்டது.[1]

சேகரிப்புகள்[தொகு]

ஸ்ரீ வடுகா அருங்காட்சியகத்தில் 5,367 பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவை பல வகையைச் சார்ந்தவையாக உள்ளன. அவற்றில் நிலவியல், உயிரியல், இனவியல், தொல்லியல், வரலாறு, நாணயவியல், கலை, தொழில் நுட்பவியல் போன்றவை அடங்கும். ஹெரால்டிகா தொகுப்பு எனப்படுகின்ற பணிக்கான அடையாளம், அலுவலக முத்திரை போன்றவையும் உள்ளன. இங்குள்ள காட்சிப் பொருள்களில் பெரம்பாலானவை அறிவியல் தொடர்பான உள்ளூர் மக்களின் இனவியல், பண்பாடு சார்ந்த பொருள்களும் உள்ளன.[2] ஸ்ரீ வடுகா அருங்காட்சியகத்தில் மேற்கு ஜாவா மாகாணத்துடன் தொடர்புடைய பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அந்த சேகரிப்புகள் மூன்று தளங்களில் உள்ளன.

முதல் தளம்[தொகு]

முதல் தளத்தில் மேற்கு ஜாவாவின் இயற்கை வரலாறு மற்றும் பண்பாட்டின் ஆரம்ப நிலை தொடர்பான பொருள்கள் காட்சியில் உள்ளன. மேற்கு ஜாவாவின் வரலாறானாது அதன் வரலாற்றுக்கு முந்தைய காலம் தொடங்கி இந்து-பௌத்த சகாப்தம் வரையிலான பாரம்பரிய பொருட்களைக் கொண்டு அமைந்துள்ளது.

இரண்டாவது தளம்[தொகு]

இரண்டாவது தளத்தில் பாரம்பரிய பண்பாட்டுப் பொருட்களான, வாழ்க்கை, வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்குத் தொடர்பான காட்சிப்பொருள்கள் உள்ளன. அத்துடன் இஸ்லாம் மற்றும் ஐரோப்பிய பண்பாட்டுத் தாக்கத்தைக் கொண்டவையும் உள்ளன. மேலும் தேசிய போராட்டத்தின் வரலாறு மற்றும் மேற்கு ஜாவாவில் உள்ள நகரங்களின் பல்வேறு முத்திரைகள் ஆகியவையும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

மூன்றாவது தளம்[தொகு]

மூன்றாவது தளத்தில் இனவியல் சேகரிப்புகளான துணிகள், கலைப்பொருள்கள் மற்றும் பீங்கான் பொருள்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

கண்காட்சிகள்[தொகு]

இந்த அரங்காட்சியகத்தில் அவ்வப்போது பார்வையாளர்களுக்காகப் பல விதமான கண்காட்சிகள் நடத்தப்பெறுகின்றன. அவற்றுள் தற்காலிகக் கண்காட்சிகள், பயணக் கண்காட்சிகள், இந்தோனேசியாவின் பிற பகுதிகளோடு இணைந்து நடத்தப்பெறுகின்ற அருங்காட்சியகக் கண்காட்சிகள் போன்றவை அடங்கும். மேலும் மாணவர்களுக்க்ன போட்டிகள் நிகழ்த்தப் பெறுகின்றன. இவற்றைத் தவிர சொற்பொழிவுகள், கருத்தரங்குகள், பணிப்பட்டறைகள் போன்றவையும் நடத்தப் பெறுகின்றன.[2]

குறிப்புகள்[தொகு]

  1. "Museum Sri Baduga" (id). Bandung Tourism.
  2. 2.0 2.1 Sri Baduga Museum