ஸ்ரீ மஹா வல்லப கணபதி தேவஸ்தானம்.

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஶ்ரீ மஹா வல்லப கணபதி தேவஸ்தானம் வட அமெரிக்காவில் உள்ளது. அமெரிக்காவில் நியூயார்க் நகரத்தில் உள்ள குயின்ஸ் 45-57 போவ்ன் தெருவில் ஶ்ரீ மஹா வல்லப கணபதி தேவஸ்தானம் அமைந்துள்ளது.[1] நியூயார்க் நகரில் பல கோயில்கள் இருப்பினும் இந்த கணபதி கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்த கோயிலாக கருதப்படுகிறது. கோவில் கட்டிடக்கலை மற்றும் சடங்குகள் தென்னிந்திய பாரம்பரியத்தை பின்பற்றி அமைந்துள்ளது. ஶ்ரீ மகா வல்லப கணபதி அமெரிக்காவில் முதல் சமண கோவிலாக கருதப்படுகிறது. [2]


வரலாறு[தொகு]

ஶ்ரீ மஹா வல்லப கணபதி தேவஸ்தானம், சாஸ்திரங்கள் படி 1977ஆம் ஆண்டு கட்டமைக்கப்பட்டது. அதே ஆண்டு சூலை 4ஆம் தேதி இக்கோயில் புனிதப்படுத்தப்பட்டது. சென்னையைச் சேர்ந்த ஶ்ரீ லா ஶ்ரீ பத்ரிமலை சுவாமிகள், கோயிலுக்கு இருபத்து மூன்று யந்திரங்களைத் தயாரித்து, அவற்றை நிறுவுவதற்கு முன்பு ஐந்து ஆண்டுகளாக பூஜை செய்தார். இது 2009ல் மறுபரிசீலனை செய்யப்பட்டது.

கட்டிடக்கலை[தொகு]

கோயில் கிராடைட் கற்களைப் பயன்படுத்திக் கட்டப்பட்டுள்ளது. கோபுர நுழைவாயில் வழியாக கோயிலுக்கு செல்லும் படி அமைந்துள்ளது. ஶ்ரீ மஹா வல்லப கணபதி சன்னதியில் பாலாஜி, ஹனுமான், மகாலட்சுமி மற்றும் ஶ்ரீநாகேந்திர சுவாமிகள் சிலைகளும் உள்ளன. உயர்ந்த கோபுரங்களையும் கொண்டுள்ளது.

அற்புதங்கள்[தொகு]

1995 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஶ்ரீ மஹா வல்லப கணபதி ஆலயத்தில் உள்ள விநாயகர் பால் குடிக்கும் அதிசயம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Alagappa Alagappan, 88, Dies; Founded Hindu Temples Across U.S." பார்க்கப்பட்ட நாள் 9 July 2018.
  2. Reconsecration, With Bells, Saffron and Elephant, ANNE BARNARD July 13, 2009, New York Times https://www.nytimes.com/2009/07/14/nyregion/14temple.html