ஸ்ரீ பெனுசில நரசிம்ம வனவிலங்கு சரணாலயம்
ஸ்ரீ பெனுசில நரசிம்ம வனவிலங்கு சரணாலயம் | |
---|---|
ஐயுசிஎன் வகை IV (வாழ்விடம்/இனங்களின் மேலாண்மைப் பகுதி) | |
அமைவிடம் | ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
அருகாமை நகரம் | நெல்லூர், இந்தியா |
ஆள்கூறுகள் | 14°0.55′N 79°27.83′E / 14.00917°N 79.46383°E[1] |
பரப்பளவு | 1,030.85 சதுர கிலோமீட்டர்கள் (254,730 ஏக்கர்கள்) |
வலைத்தளம் | Official website |
ஸ்ரீ பெனுசில நரசிம்ம வனவிலங்கு சரணாலயம் என்பது தென்னிந்தியாவில் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதி ஆகும். இதன் பரப்பளவு 1030.85 km² ஆகும். இது தனித்துவமான, அருகிய வன வகைகளைக் கொண்டுள்ள பகுதியாகும்.[2][3]
நிலவியல்
[தொகு]ஸ்ரீ பெனுசில நரசிம்ம வனவிலங்கு சரணாலயம் ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது 1030.85 சதுர கிலோமீட்டர் பரப்பளவை உள்ளடக்கியது. ஆந்திர மாநில வனத்துறையால் பாதுகாக்கப்படும் பகுதியாகும்.[2] இது தனித்துவமான மற்றும் அருகிய வன வகைகளைக் கொண்டுள்ளது. வறண்ட பசுமையான காடுகள் இங்குள்ளன. இந்த வனவிலங்கு சரணாலயம் மலைப்பாங்கான சரிவுகள், படரும் காடுகள் நிறைந்த மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளால் ஆனது.
தாவரங்கள்
[தொகு]பசுமைமாறா காடு காணப்படும் இச்சரணாலயத்தில் அகேசியா, கேசியாசு, புங்கை, கரிஸ்ஸா மரங்கள் காணப்படுகின்றன.[சான்று தேவை]
விலங்குகள்
[தொகு]பெரும் பூனை, புள்ளிமான், நீலான், நாற்கொம்பு மான், தேன் கரடி, குள்ள நரி, காட்டுப்பன்றி, ஏராளமான ஊர்வன மற்றும் பறவை இனங்கள் இந்த வனவிலங்கு சரணாலயத்தில் காணப்படுகின்றன.[சான்று தேவை]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sri Penusila Narasimha Wildlife Sanctuary". BirdLife International. Archived from the original on 4 மார்ச் 2016. Retrieved 2 August 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 2.0 2.1 "Sri Penusila Narashimawamy Wildlife Sanctuary". Andhra Pradesh Forest Department. Retrieved 2 August 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Sri Penusila Narasimha Wildlife Sanctuary". Globalspecies.org. Archived from the original on 5 மார்ச் 2016. Retrieved 2 August 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)