ஸ்ரீ நாராயணகுரு தர்ம மடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஸ்ரீ நாராயணகுரு

ஸ்ரீ நாராயணகுரு தர்ம மடம் என்பது கன்னியாகுமரி மாவட்டம் மருத்துவாமலையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மடம் ஆகும். ஸ்ரீ நாராயணகுரு போதித்த சாதி, சமய வேறுபாடற்ற சமுதாயத்தை உருவாக்கும் பணியில் உருவாக்கப்பட்ட சதயபூஜா சங்கத்தின் நிர்வாகத்தில் 1992 ஆம் ஆண்டில் இம்மடம் அமைக்கப்பட்டுள்ளது.

மடத்தின் சில பணிகள்[தொகு]

  • ஒவ்வொரு மாதமும் ஸ்ரீ நாராயணகுரு பிறந்த சதய நட்சத்திரத்தன்று ஸ்ரீ நாராயணகுரு மெய்யறிவு பெற்ற மருத்துவாமலை பிள்ளைத்தடம் குகையில் சிறப்பு பூஜையும் அன்னதானமும் நடத்தப் பெறுகின்றன.
  • ஸ்ரீ நாராயணகுரு மேல் பற்றுடையவர்கள் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் கடைசி இரு நாட்கள் சிவகிரி தீர்த்தப் பயணத்தின் போது மருத்துவாமலைக்கும் வந்து செல்வதால் அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதுடன் ஆன்மிக வழிகாட்டுதலும் செய்யப்படுகின்றன.