ஸ்ரீ சாஸ்தா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி

ஆள்கூறுகள்: 13°02′16″N 80°03′14″E / 13.037746°N 80.053822°E / 13.037746; 80.053822
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்ரீ சாஸ்தா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
வகைதனியார்
உருவாக்கம்1999
தலைவர்முனைவர் ஏ. எம். கே. ஜம்புலிங்கம்
முதல்வர்முனைவர் பி. ஜனர்த் பி.இ., எம்.டெக்., பிஎச்.டி
அமைவிடம், ,
13°02′16″N 80°03′14″E / 13.037746°N 80.053822°E / 13.037746; 80.053822
சேர்ப்புஅண்ணா பல்கலைக்கழகம்
இணையதளம்http://www.sreesasthainstitutions.edu.in./

ஸ்ரீ சாஸ்தா பொறியியல் மற்றும் தொழிலுநுட்பக் கல்லூரி ( Sree Sastha Institute of Engineering and Technology ) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், செம்பரம்பாக்கத்தில் சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரி ஆகும். இந்த கல்லூரியானது அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரி 1999 செப்டம்பர் 9 அன்று நிறுவப்பட்டது. [1]

கல்வி[தொகு]

இந்தக் கல்லூரியியல் ஏழு இளநிலை பொறியியல் படிப்புகள் (பி.இ.) வழங்கப்படுகின்றன. இரு இளங்கலை தொழில்நுட்ப (பி.டெக்.) படிப்புகள், எட்டு முதுநிலை படிப்புகளையும் வழங்கப்படுகிறது.

இக்கல்லூரியில் உள்ள கல்வித் துறைகள் [2]

1. இயந்திர பொறியியல்

2. மின்னணு மற்றும் தொடர்புப் பொறியியல்

3. மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல்

4. கணினி அறிவியல் மற்றும் பொறியியல்

5. எம்.இ. (அப்ளைடு எலக்ட்ரானிக்ஸ்).

சேர்க்கை[தொகு]

இளங்கலைக்கு சேர்க்கப்படும் மாணவர்கள் அவர்களின் 12 ஆம் வகுப்பு (உயர்நிலை பள்ளி) மதிப்பெண்களின் அடிப்படையில் சேர்க்கப்படுகிறார்கள். சேர்க்கையானது தமிழக அரசின் விதிமுறைகளின்படி மாநில அரசு ஆலோசனை மற்றும் நடைமுறைகள் மூலம் செய்யப்படுகிறது.

குறிப்புகள்[தொகு]

  1. Sree Sastha overview, January –28, 2015, TNEA Anna university, archived from the original on 2015-03-21, பார்க்கப்பட்ட நாள் 2015-01-28
  2. Sree Sastha Institute overview, January –28, 2015, TNEA Anna university, archived from the original on 2014-12-30, பார்க்கப்பட்ட நாள் 2015-01-28