ஸ்ரீ கிருஷ்ணதேவராயார் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்ரீ கிருஷ்ணதேவராயார் பல்கலைக்கழகம்
குறிக்கோளுரைஅறிவின் மூலம் ஒருவன் அழியாத ஞானத்தை அடைகிறான்
வகைபொது
உருவாக்கம்1981
வேந்தர்ஆளுநர் ஆந்திரப் பிரதேசம்
துணை வேந்தர்மச்சீர்ரெட்டி இராம கிருஷ்ண ரெட்டி[1]
அமைவிடம், ,
வளாகம்கிராமம்
சேர்ப்புபல்கலைக்கழக மானியக் குழு
இணையதளம்www.skuniversity.ac.in

ஸ்ரீ கிருஷ்ணதேவராயார் பல்கலைக்கழகம் (Sri Krishnadevaraya University) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள அனந்தபூரில் உள்ள ஒரு பொதுப் பல்கலைக்கழகமாகும். இது 25 ஜூலை 1981-ல் நிறுவப்பட்டது. 16ஆம் நூற்றாண்டின் விஜயநகரப் பேரரசின் கற்றல் மற்றும் கலைகளின் புரவலரான ஸ்ரீ கிருஷ்ணதேவராயரின் நினைவாக இந்தப் பல்கலைக்கழகம் பெயரிடப்பட்டது.[2]

வரலாறு[தொகு]

அனந்தபூர் ஸ்ரீ கிருஷ்ணதேவராயா பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணதேவராயர் சிலை

இப்பல்கலைக்கழகம் 1968-ல் தொடங்கப்பட்ட ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தின் முந்தைய முதுகலை மையத்தின் ஒரு பகுதியாகும். பின்னர், 1976-ல், இந்த முதுகலை மையம் தன்னாட்சி நிலையை அடைந்தது. 1981 முதல் பல்கலைக்கழகமாகச் செயல்படத் துவங்கியது. இதன் முதல் இரண்டு தவணைகளுக்குத் துணைவேந்தர் பதவியினை எம். ஏ. பெல் (1981–87) வகித்தார்.

1987-ல், ரூ. 1.2 கோடியில், பல்கலைக்கழக மானியக்குழுவின் நிதியுதவியுடன் ஸ்ரீ கிருஷ்ணதேவராயா நிர்வாகவியல் நிறுவனம் தொடங்கப்பட்டது. 1988-ல், முதலில் ஒரு ஒற்றையாட்சி நிறுவனமாக இருந்த பல்கலைக்கழகம், பின்னர் முழு அளவிலான இணைப்புப் பல்கலைக்கழகமாக மாறியது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட நிறுவனங்களாக கர்னூலில் உள்ள முதுகலை மையம் 1993-ல் ஸ்ரீ கிருஷ்ணதேவராயா பல்கலைக்கழகத்தின் கீழ் மாற்றப்பட்டது. ஸ்ரீ கிருஷ்ணதேவராயா பல்கலைக்கழக பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி 2006-ல் தொடங்கப்பட்டது.

வளாகம்[தொகு]

482 ஏக்கர்கள் (1.95 km2) நிலப்பரப்பில் கிராமப்புற சூழலில் அமைந்துள்ள, இப்பல்கலைக்கழகத்தில் அறிவியல் எந்திர மையம், மத்திய நூலகம், கணினி மையம், சுகாதார மையம், உடற்பயிற்சி கூடம், வெளிப்புற அரங்கம், கலையரங்கம் மற்றும் ஆய்வுத் துறைகள், ஆய்வகங்கள், வங்கி உள்ளிட்ட வசதிகளுடன் 24*7 தன்னியக்க வங்கி இயந்திரம், தங்கும் விடுதிகள் மற்றும் ஊழியர்களுக்கான குடியிருப்புகளும் உள்ளன.

வசதிகள்[தொகு]

நூலகத்தில் 13,600 எண்ணிக்கையிலான தொகுதிகள் உள்ளன. ஒரு புத்தக வங்கி, இன்ப்ளிப் வலை வசதி மற்றும் பல்கலைக்கழக நூலகங்களுக்கான மென்பொருள் வசதியும் உள்ளது.

ஸ்ரீ கிருஷ்ணதேவராயா பல்கலைக்கழகம் பல்கலைக்கழகத்தைத் தவிர இணைந்த கல்லூரிகள் மூலம் முனைவர், ஆய்வியல் நிறைஞர், முதுநிலை மற்றும் இளநிலை கலை/அறிவியல் படிப்புகளை வழங்கி வருகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Vice Chancellor". www.skuniversity.ac.in. பார்க்கப்பட்ட நாள் 21 August 2017.
  2. https://www.shiksha.com/university/sri-krishnadevaraya-university-anantapur-50986

வெளி இணைப்புகள்[தொகு]