ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவின் முகப்புத் தோற்றம்

ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்கா இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள திருச்சி மாவட்டத்தின் ஸ்ரீரங்கத்தில் மேலூர் அருகே அமைந்துள்ள வண்ணத்துப்பூச்சிகளுக்கான பூங்கா ஆகும்[1]. தமிழ்நாடு அரசு வனத்துறையின் கண்காணிப்பு மற்றும் பராமரிப்பில் உள்ள இந்த வண்ணத்துப்பூச்சி பூங்கா வெப்ப மண்டல வண்ணத்துப் பூச்சிகளுக்கான காப்பகமாகும் (Tropical Butterfly Conservatory). வண்ணத்துப்பூச்சி இனங்களை பாதுகாக்கவும் அவற்றின் எண்ணிக்கையை பெருக்கும் நோக்கிலும் இயற்கை சூழலில் இப்பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது[2][3] [4]. இங்கு நட்சத்திர வனமும் அமைக்கப்பட்டுள்ளது[5].இது ஆசியாவின் மிகப்பெரிய வண்ணத்தப்பூச்சி பூங்காவாகும்[6].

அமைவிடம்[தொகு]

ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவின் நுழைவுப்பகுதி

இந்த வண்ணத்துப்பூச்சி பூங்கா 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஸ்ரீரங்கத்திலிருந்து மேற்கே 6.கி.மீ தொலைவிலும், காவிரி ஆற்றிலிருந்து கொள்ளிடம் ஆறு பிரியும் இடமான முக்கொம்பிலிருந்து கிழக்கே 7 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. வண்ணத்துப்பூச்சி பூங்காவின் வடக்குப்புறத்தில் கொள்ளிடம் ஆறு தெற்குப்புறத்தில் காவிரி ஆறுகள் உள்ளன.

நட்சத்திர வனம்[தொகு]

இந்த வண்ணத்துப்பூச்சி பூங்காவில் 27 நட்சத்திரங்களுக்கு உரிய 27 வகை மரங்களை கொண்ட நட்சத்திர வனம் அமைக்கப்பட்டுள்ளது. ஆந்திரமாநிலம் ராஜமுந்திரியில் இருந்து சுமார் 30 அடி உயரம் வளரக்கூடிய 9 அடி உயரம் கொண்ட 5000 மரச் செடிகள் வரவழைக்கப்பட்டு நடப்பட்டுள்ளது[7].

பூங்காவின் முக்கியப் பகுதிகள்[தொகு]

வண்ணத்துப்பூச்சி இனப்பெருக்க மையம்[தொகு]

ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவிலுள்ள செயற்கை கல்மரம்- பின்னணியில் இனக்பெருக்க மையம்
ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவின் இனப்பெருக்க மையம்

ஒரு ஏக்கர் பரப்பளவில் வண்ணத்துபூச்சிகளின் உற்பத்தி பெருக்குவதற்கான நவீன வசதிகள் கொண்ட உள்ளரங்கு வண்ணத்துப்பூச்சி வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது. இங்கு வண்ணத்துப்பூச்சிகள் நவீன தொழில்நுட்ப முறையிலும் இயற்கை முறையிலும் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன.

வளர்க்கப்படும் தாவரங்கள்[தொகு]

இந்த பூங்காவில் வண்ணத்துப்பூச்சிகள் விரும்பி உண்ணும் தாவரங்களான சின்யா, பென்டாஸ், டிரைக்டரி, கோபி, அஸ்காப்பியா போன்றவையும் பல்வேறு வகையான மலர்ச்செடிகளும் குறுமரங்கள், குறுஞ்செடிகள், புற்கள் போன்றவையும் அது தவிர ஏராளமான மரங்களும் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.

படகுக்குளம் மற்றும் கல்மரம்[தொகு]

ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவிலுள்ள சிறுவர்கள் படகுக்குளம்

இந்த வண்ணத்துப்பூச்சி பூங்காவில் அரை ஏக்கர் பரப்பளவில் சிறுவர் படகுக்குளம் மற்றும் இரும்பு தகடுகளால் வண்ணத்துப்பூச்சி வடிவில் செயற்கையாக செய்யப்பட்ட உருவமும், கல்மரமும், வண்டுகள், வெட்டுக்கிளி, உள்ளிட்ட பூச்சி வகைகள் செயற்கை கல்மரத்தில் மொய்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது[8].

சிறுவர் விளையாட்டுப் பூங்கா[தொகு]

இப்பூங்காவில் சிறுவர்கள் விளையாடுவதற்கு தனிப்பூங்கா உள்ளது. இதில் ஊஞ்சல், சறுக்கு ஏணி, இராட்டினங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வசதிகள்[தொகு]

இந்த வண்ணத்துப்பூச்சி பூங்காவில் வாகன நிறுத்துமிடங்கள், குடிநீர் வசதிகள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கழிப்பி்டங்கள் இளைப்பாறும் குடில்கள் நிழற்குடைகள் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

செயற்கை குளம் மற்றும் நடைபாதைகள்[தொகு]

நீருற்றுகள், நீர்தாவரங்கள் கொண்ட குட்டைகள் அவற்றின் மீது மரப்பாலங்கள், பார்வையாளர்கள் சுற்றி வர 4 கி.மீ தூரம் நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. வண்ணத்துப்பூச்சியின் மாதிரி உருவங்களும் பெரிய அளவில் அமைக்கப்பட்டுள்ளன

கட்டணங்கள்[தொகு]

ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவை பார்வையிட பெரியவர்களுக்கு 10 ரூபாயும் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு 5 ரூபாயும் ஒளிப்படக் கருவிக்கு 20 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. வாகன நிறுத்தக்கட்டணமாக மிதிவண்டிக்கு 5 ரூபாயும் இருசக்கர வாகனங்கள், தானிக்கு 10 ரூபாயும், மகிழுந்துக்கு 20 ரூபாயும், சிற்றுந்து பேருந்துகளுக்கு 75 ரூபாயும் கட்டணமாக வனத்துறையால் வசூலிக்கப்படுகிறது[9].

ஒளிக்கோப்பு[தொகு]

ஒளிக்கோப்பு
ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவிலுள்ள சிறுவர் விளையாட்டுப்பகுதி  
ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவிலுள்ள பார்வையாளர் ஓய்வறை  
ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவிலுள்ள பார்வையாளர் குடில்  
ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவிலுள்ள பெரிய வண்ணத்துப்பூச்சி மாதிரி  
ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவிலுள்ள நடைபாதை  
ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவிலுள்ள வாகன நிறுத்தக் கட்டண விவரங்கள்  
ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவிலுள்ள வண்ணத்தப்பூச்சி வகைகளை விளக்கும் விளக்கத்தட்டிகள்  

மேற்கோள்கள்[தொகு]

  1. http://tamil.oneindia.com/news/tamilnadu/tropical-butterfly-park-project-enters-last-phase-213580.html
  2. "ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவில் தியேட்டர்:வன விலங்குகள் குறித்த குறும்படங்கள் ஒளிபரப்பப்படும்". http://news.tamilnaduonline.in. http://news.tamilnaduonline.in/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-1273057. பார்த்த நாள்: 16 மே 2017. 
  3. http://www.dinamalar.com/news_detail.asp?id=1206300
  4. http://tamil.thehindu.com/opinion/reporter-page/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/article6715283.ece
  5. http://www.dailythanthi.com/News/Districts/2015/04/09215724/Rs12-crore-made-in-the-Butterfly-Garden-at-Trichy.vpf
  6. http://tamil.thehindu.com/opinion/reporter-page/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/article6715283.ece
  7. http://tamil.oneindia.com/news/tamilnadu/tropical-butterfly-park-project-enters-last-phase-213580.html
  8. http://tamil.oneindia.com/news/tamilnadu/tropical-butterfly-park-project-enters-last-phase-213580.html
  9. https://commons.wikimedia.org/wiki/File:Srirangam_Butterfly_Park_-Fare_details.jpg