ஸ்ரீமதி பிரதிமா பந்தோபாத்யாய்
| ஸ்ரீமதி பிரதிமா பந்தோபாத்யாய் | |
|---|---|
শ্রীমতী প্রতিমা বন্দ্যোপাধ্যায় | |
| பின்னணித் தகவல்கள் | |
| இயற்பெயர் | பிரதிமா சட்டோபாத்யாய் |
| பிறப்பு | 21 திசம்பர் 1934 கொல்கத்தா, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா |
| இறப்பு | 29 சூலை 2004 (அகவை 69) கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா |
| இசை வடிவங்கள் | பின்னணிப் பாடல் |
| தொழில்(கள்) | பாடகி |
பிரதிமா பந்தோபாத்யாய் (வங்காளம்: প্রতিমা বন্দ্যোপাধ্যায়; 21 திசம்பர் 1934 – 29 சூலை 2004; இயற்பெயர் பிரதிமா சட்டர்ஜி அல்லது பிரதிமா சட்டோபாத்யாய்) கொல்கத்தாவைச் சேர்ந்த வங்காள மொழிப் பின்னணிப் பாடகி ஆவார். குறிப்பாக 1940கள், 1950கள், 1960கள் மற்றும் 1970களில் வங்காள மொழித் திரைப்படங்களிலும் திரைப்படம் சாராத பாடல்களிலும் பல பாடல்களைப் பாடியுள்ளார்.[1] இவர் பிரதிமா பானர்ஜி என்ற பெயராலும் அறியப்பட்டார்.
ஆரம்ப வாழ்க்கை
[தொகு]பிரதிமா பந்த்யோபாத்யாயின் முன்னோர்கள் டாக்கா அருகிலுள்ள பிக்ராம்பூர் பகுதியின் பாஹெராக் (வங்காளம்: বাহেরক) கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இப்பகுதி தற்போது வங்காளதேசம் நாட்டின் முன்சிகஞ்ச் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
தனது ஒன்றாம் வயதிலேயே தனது தந்தை மணி பூசண் சட்டோபாத்யாயை இழந்தார். இவரது தாயார் கமலா சட்டோபாத்யாய், பவானிபூர் பகுதியில் உள்ள தங்களது இல்லத்தில் இவரை வளர்த்தார். சிறு வயதிலிருந்தே ஸ்ரீ பிரகாஷ் காலி கோசாலிடம் இசைப் பயிற்சி பெறத் தொடங்கினார்.[2]
பணிவாழ்க்கை
[தொகு]பிரதிமா பந்த்யோபாத்யாயின் முதல் இசைத்தட்டு 1945ஆம் ஆண்டு செனோலா ரெக்கார்ட்ஸ் மூலம் வெளியிடப்பட்டது. 1940களின் இறுதியில் அனைத்திந்திய வானொலியின் பிரபல நிகழ்ச்சியில் அமலா கிரணே என்ற பாடல் ஒலிபரப்பப்பட்டது. பின்னர் 1952ஆம் ஆண்டு திவிஜேன் முகோபாத்யாய் உடன் இணைந்து பாடிய ஹே சாருபூர்ணோ சோமோசிகோரிணி என்ற பாடலின் மூலம் பரவலாக அறியப்பட்டார்.
1951ஆம் ஆண்டு சுனந்தர் பியே திரைப்படத்தில் சுதிர்லால் சக்ரவர்த்தியின் இசையில் தோடினி ஆமி, துமி சுதூரேர் சாந்த் என்ற பாடலைப் பதிவு செய்து வங்காளத் திரைப்படங்களில் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார்.
இறப்பும் மரபும்
[தொகு]1986ஆம் ஆண்டு இவரது கணவர் அமியோ குமார் பந்தோபாத்யாய் மறைந்த பின்னர், இவரது உடல்நலக் குறைவு ஏற்பட்டது. 2004ஆம் ஆண்டு சூலை 29 அன்று இவர் மரணமடைந்தார். இவருக்கு மகள் ராய்கிசோரி பந்தோபாத்யாய், மகன் அமர்நாத் பந்தோபாத்யாய் உள்ளனர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "Outlook 30 July 2004". http://www.outlookindia.com/newswire/story/legendary-bengali-singer-pratima-bandopadhyay-dead/238806. பார்த்த நாள்: 2017-09-06.
- ↑ "কাজলা দিদি". Retrieved 2017-09-06.