ஸ்ரீபிருந்தன் சண்முகராகவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்ரீபிருந்தன் சண்முகராகவன்
பிறப்பு07.05.1979
யாழ்ப்பாணம், இலங்கை
தேசியம்இலங்கைத் தமிழர்
அறியப்படுவதுஇசையமைப்பாளர், இசை தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர்
பெற்றோர்சண்முகராகவன், தர்மகுலராணி
வாழ்க்கைத்
துணை
கௌரி
பிள்ளைகள்ஹரிநிகேஷ், ஹரிநிஷா
வலைத்தளம்
https://www.youtube.com/user/sbrunthan

ஸ்ரீபிருந்தன் சண்முகராகவன் (பிருந்தன் ராகவ், யாழ்ப்பாணம்) ஈழத்துப் பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், இசைத் தயாரிப்பாளர் என அறியப்பட்டவர். இவர் 2004 ஆம் ஆண்டில் தனது முதல் இசை இறுவெட்டான "துளிகள்" இசைத்தொகுப்புக்கு இசையமைத்ததன் மூலம் கலை உலகில் பிரவேசித்தவர்.

வாழ்க்கைக்குறிப்பு[தொகு]

இவர் இசைக்குடும்பத்தில் பிறந்தவர். இவரது தாத்தா கர்நாடக சங்கீத வித்வான் 'இசைப் புலவர்' என்.சண்முகரத்தினம் அவர்கள் ஆவார். இவரது தந்தை கர்நாடக சங்கீத வித்துவான் 'கலாசூடாமணி' திரு. எஸ் .சண்முகராகவன் ஆவார்.

கல்விப்புலம்[தொகு]

இவர் தனது ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் உடுவில் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியிலும் மேற்படிப்பை கொழும்பு இரத்மலானை இந்து கல்லூரியிலும் கற்றவர்.

இசையமைத்த பாடல்கள்[தொகு]

  • காதல் பிசாசே[1][2][3]
  • கடலம்மா கடலம்மா...

இசைத்தொகுப்புகள்[தொகு]

  • துளிகள் (12 பாடல்கள் ) - 2004
  • நதியே (12 பாடல்கள் ) - 2005
  • நக்க்ஷத்ரா (15 பாடல்கள் ) - 2009
  • அஞ்சனா (11 பாடல்கள் ) - 2011
  • கிரிக்கெட் ஆல்பம்

´துளிகள்` இசைத்தொகுப்பு[தொகு]

துளிகள் இசைத்தொகுப்பு இவரால் இசையமைக்கப்பட்ட 12 பாடல்களுடன் 2004 இல் வெளிவந்த இசைத்தொகுப்பு ஆகும். பாடல்வரிகளை ஸ்ரீவிஜெய் ராகவன் எழுதியிருந்தார்.

துளிகள் இசைத்தொகுப்பில் இடம்பெற்ற பாடல்கள்[தொகு]

  • ஒரு பொய் சொல்லாயோ நீ
  • உன்னில் என்னை கண்டேனடா
  • மேகம் இடம் மாறும்போது
  • பெண் பூவே
  • இனி எங்கள் பூமியில் யுத்தம் இல்லை
  • நெஞ்சோடு நீ நுழைந்து
  • தீண்டும் தீண்டும்


விருதுகள்[தொகு]

  • அரச விருது 2013 - கயல்விழி என் கயல்விழி... என்ற பாடலுக்கு சிறந்த பாடலுக்கான விருது)[4] [5]
  • அரச விருது 2013 - `அஞ்சனா´ இறுவெட்டுக்கு சிறந்த இறுவெட்டுத் தயாரிப்புக்கான விருது[6][7]
  • இளமை எப் எம் விருது 2016 - (சிறந்த இசையமைப்பாளர்)


மேற்கோள்கள்[தொகு]

  1. Tamilsongslyrics Brunthan Composed Tamil Movies
  2. THE HINDU - Music director Brunthan
  3. Behind Wood - KADHAL PISASE MUSIC REVIEW
  4. "அரச இசை விருது வழங்கல் விழா 2013" (PDF). நூலகம். March 12, 2016. p. 98.
  5. "ஸ்ரீபிருந்தன் சண்முகராகவன் அவர்கள் `கயல் விழி என் கயல் விழி ...` என்ற பாடலுக்காக அரசவிருது பெற்றுக் கொண்டமைக்கான சான்றிதழ்".
  6. "அரச இசை விருது வழங்கல் விழா 2013" (PDF). நூலகம். March 12, 2016. p. 105.
  7. "ஸ்ரீபிருந்தன் சண்முகராகவன் அவர்களுக்கு ´அஞ்சனா` என்னும் தலைப்பிலான சிறந்த இறுவெட்டுத் தயாரிப்புக்காக அரசவிருது சான்றிதழ்".