உள்ளடக்கத்துக்குச் செல்

ஸ்ரீநாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்ரீநாத்
பிறப்பு18 சூலை 1973 (1973-07-18) (அகவை 53)
சென்னை, தமிழ்நாடு
பணிநடிகர், இயக்குநர் (திரைப்படம்)
செயற்பாட்டுக்
காலம்
1992-தற்போதுவரை
தந்தைமரு. அல்நாத்

ஸ்ரீநாத் (Srinath பிறப்பு: சூலை 18,1973) ஓர் இந்திய நடிகர், இயக்குநர், அரசியல்வாதிஆவார். இவர் மணப்பாட்டைப் பூர்விகமாகக் கொண்ட திரு இரிச்சர்ட் பர்னாந்து அவர்களின் மகன் திரு ஆல்நாத் பர்ணாந்து அவர்களின் மூத்த மகன்.

கூடுதல் தகவலாக ஸ்ரீநாத்தின் தாத்தா திரு ரிச்சர்ட் பர்னாந்து தூத்துக்குடியில் பாய்மரக்கப்பல் ( தோணி) (TN.30 எரிக் ஆல்நாத்) வைத்து நடத்திக் கொண்டிருந்தார்.

திரைப்பட வாழ்க்கை

[தொகு]

கல்லூரி நாட்களில் இருந்தே தமிழ் நடிகர் விஜய் நண்பரான இவர் பல படங்களில் அவருடன் பணியாற்றியுள்ளார்.[1][2]

இயக்குனர் ஜீவாவுடன் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். அவரது இயக்கத்தில் இவர் நடித்த உள்ளம் கேட்குமே (2005) மற்றும் உன்னாலே உன்னாலே (2007) போன்ற படங்களில் நடித்ததன் மூலம் இவர் பரவலாக அறியப்படுகிறார்.[3]

சந்தோஷ் சுப்பிரமணியம் (2008), மாசிலாமணி (2009), வேட்டைக்காரன் (2009) போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படும் இவர், முத்திரை (2009) என்ற திரைப்படத்தில் இயக்குநராக அறிமுகமானார்.[4][5]

அரசியல் வாழ்க்கை

[தொகு]

2026ஆம் ஆண்டில், தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் த. வெ. க. சார்பில் போட்டியிட்டார்.[6] சுமார் 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.[7]

அரசியல் செயல்பாடு

[தொகு]
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: தூத்துக்குடி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
த.வெ.க. ஸ்ரீநாத் 1,00,536 49.11 புதியது
தி.மு.க. கீதா ஜீவன் 62,805 30.68 ▼18.32
அ.இ.அ.தி.மு.க. எஸ். டி. செல்ல பாண்டியன் 26,213 12.80 ▼9.49
நாதக ஜேக்கப் தேவதாசு அபிசேக் ஆர் 11,752 5.74 ▼10.68
நோட்டா நோட்டா 853 0.42
வெற்றி வாக்கு வேறுபாடு 37,731
பதிவான வாக்குகள் 2,04,712
பதிவு செய்த வாக்காளர்கள் 248,300
தி.மு.க. கட்சியிடமிருந்து த.வெ.க. பெற்றது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Vijay's friends Sanjeev, Sriman and Srinath join Thalpathy 64". சினிமா எக்ஸ்பிரஸ். Retrieved 2019-10-05.
  2. ↑ "Unseen: 'Master' actor Srinath shares Vijay's school days picture". The Times of India. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/unseen-master-actor-srinath-shares-vijays-school-days-picture/articleshow/82495358.cms.
  3. ↑ "Jeeva's blue-eyed boy: Srinath". Times of India. 14 January 2017. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Jeeas-blue-eyed-boy-Srinath/articleshow/4535211.cms?referral=PM.
  4. ↑ "When 'Muthirai' fails to impress". The new Indian Express. https://www.newindianexpress.com/entertainment/review/2009/Jul/02/muthirai-fails-to-impress-64485.html.
  5. ↑ "Review: Vallavanukku Pullum Aayudham is a forgettable film". Rediff. https://www.rediff.com/movies/report/review-vallavanukku-pullum-aayudham-is-a-forgettable-film-south/20140512.htm.
  6. ↑ https://www.thehindu.com/elections/candidates/Tamilnadu2026/srinath-763/
  7. ↑ ITN, India Today News (2026-05-04). "Thoothukkudi Election Result 2026 Live: TVK's Srinath defeats DMK's P. Geetha Jeevan with 26772 votes". India Today (in ஆங்கிலம்). Retrieved 2026-05-04.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ரீநாத்&oldid=4597538" இலிருந்து மீள்விக்கப்பட்டது