உள்ளடக்கத்துக்குச் செல்

ஸ்ரீதர் வெங்கடேஷ் கேட்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்ரீதர் வெங்கடேஷ் கேட்கர்
பிறப்பு(1884-02-02)2 பெப்ரவரி 1884
ராய்ப்பூர், மத்திய மாகாணங்கள், பிரிட்டிஷ் இந்தியா
இறப்பு10-04-1937
பணிவரலாற்றாசிரியர், சமூகவியலாளர்
வாழ்க்கைத்
துணை
ஷீலாவதி

ஸ்ரீதர் வெங்கடேஷ் கேட்கர் '(Shridhar Venkatesh Ketkar) (2 பிப்ரவரி 1884 – 10 ஏப்ரல் 1937) இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஒர் மராத்திய சமூகவியலாளர், வரலாற்றாசிரியர், புதின ஆசிரியர் ஆவார். மராத்தி மொழியின் முதல் கலைக்களஞ்சியமான 'மகாராஷ்டிரிய ஞானகோஷ்' -இன் முதன்மை ஆசிரியராக இவர் முக்கியமாக அறியப்படுகிறார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் பின்னணி

[தொகு]

கேட்கர் மத்தியப் பிரதேசத்தின் இராய்ப்பூரில் ஒர் மராத்திய இந்து குடும்பத்தில் பிறந்தார். மும்பையில் உள்ள வில்சன் கல்லூரியில் கல்வி பயின்றார். 1906-இல் அமெரிக்கா சென்ற இவர், 1911-இல் கார்னெல் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். இலண்டனில் ஓராண்டு காலம் தங்கியிருந்தபோது (சுமார் 1912) தனது வருங்கால மனைவியான எடித்து கோனைச் சந்தித்தார். பின்னர் இந்தியா திரும்பினார்.

பணி வாழ்க்கை

[தொகு]

இந்தியாவில் இவரது முதல் பணி நியமனம் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம், நிர்வாக அறிவியல், உலகளாவிய சட்டவியல் ஆகிய பாடங்களுக்கான பேராசிரியராக அமைந்தது.

1920-இல், கேட்கர் எடித்து கோனை (1886–1979) திருமணம் செய்துகொண்டார். எடித் இவருடன் புனேவில் குடியேறினார். திருமணத்திற்குப் பிறகு எடித்தின் பெயர் ஷீலாவதி கேட்கர் என்று மாற்றப்பட்டது. திருமதி கேட்கர், தனது கணவரின் தனித்துவமான பண்புகள், இவர்கள் தத்தெடுத்த இரு குழந்தைகள் மற்றும் குடும்ப வாழ்க்கை குறித்த நினைவுக் குறிப்புகளை எழுதியுள்ளார்.[1] ஜெர்மன் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட திருமதி கேட்கர், தனது கணவரின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக மோரிஸ் வின்டர்னிட்ஸின் 'இந்திய இலக்கிய வரலாறு' என்ற நூலை ஆங்கிலத்திலிருந்து ஜெர்மன் மொழிக்கு மொழிபெயர்த்திருந்தார். இருப்பினும், குடும்ப நண்பராகவும் இருந்த பேராசிரியர் வின்டர்னிட்ஸின் ஊக்கத்தால் இது பின்னர் வெளியிடப்பட்டது.

கேட்கர் இரண்டு மராத்திய இலக்கிய மாநாடுகளுக்குத் தலைவராகப் பணியாற்றினார்: 1926-இல் 'ஷாரதோபாசக் சம்மேளனம்' மற்றும் 1931-இல் மகாராஷ்டிர சாகித்ய சம்மேளனம் ஆகியனவாகும்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த கேட்கர், புனேவில் திசு அழுகல் பாதிப்புடன் கூடிய புண்ணால் காலமானார். டி. என். கோகலே என்பவரால் இவரது வாழ்க்கை வரலாறு எழுதப்பட்டுள்ளது.[2]

சமூகவியல் மற்றும் வரலாற்றுப் படைப்புகள்

[தொகு]

இவரது முனைவர் பட்ட ஆய்வறிக்கை பின்னர் 'இந்தியாவில் சாதி அமைப்பின் வரலாறு' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. இந்நூல் மனுஸ்மிருதியின் காலத்தைக் கணிக்கிறது மற்றும் அக்காலகட்டத்தில் நிலவிய சாதி உறவுகளின் தன்மையைப் பற்றியும் விவரிக்கிறது. பின்னர் இவர் இந்த படைப்பின் தொடர்ச்சியை எழுதினார், இந்து மதம் பற்றிய ஒரு கட்டுரை, இது இந்தியாவில் சாதி அமைப்பின் தோற்றம் பற்றி விவாதிக்கிறது.

1914 ஆம் ஆண்டில், இவர் மேலும் இரண்டு கட்டுரைகளை வெளியிட்டார், அதாவது இந்தியப் பொருளாதாரம் மற்றும் இந்து சட்டம் மற்றும் அதன் வரலாற்று ஆய்வு முறைகள் மற்றும் கோட்பாடுகள் பற்றிய கட்டுரை.

கேட்கரின் அரசியல் கருத்துக்கள் இவரது நிஷாஸ்த்ராஞ்சே ராஜ்கரன் (நிராயுதபாணிகளின் அரசியல், 1926) மற்றும் வெற்றிகரமான இந்தியா (1937) ஆகியவற்றிலிருந்து பெறப்பட்டதாக இருக்கலாம். ஏறக்குறைய ஒரு பத்தாண்டு கால ஆய்வுக்குப் பிறகு, இவர் பிரச்சீன் மகாராஷ்டிரா என்ற வரலாற்றுப் படைப்பை எழுதினார்.

கலைக்களஞ்சியம்

[தொகு]

கேத்கர் கலைக்களஞ்சியப் பணியில் ஏறக்குறைய 1916 முதல் 1928 வரை ஈடுபட்டிருந்தார். அந்த முழுத் திட்டத்தின் மூலவர், பதிப்பாசிரியர் மட்டுமல்லாமல், கணக்காளர் மற்றும் பொது மேலாளராகவும் இருந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ Ketkar, Sheelavati (1990). 'Look Back With Me. Calcutta: Writers Workshop.
  2. ↑ Gokhale, D.N. (1959). Dr. Ketkar (in Marathi). Bombay.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)