ஸ்ரீசுப்பிரமணியத் தேசிகர் நெஞ்சுவிடு தூது
காதல் உணர்வை வெளிப்படுத்த நிலைக்களமாக உள்ள இலக்கிய வகை தூது. அவ்விலக்கிய மரபைக் கையாண்டு குருபக்தியை வெளிப்படுத்தும் விதமாகத் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை எழுதிய நூல் ஸ்ரீசுப்பிரமணிய தேசிகர் நெஞ்சுவிடு தூது.
நூல் வரலாறு[தொகு]
திருவாவடுதுறை ஆதீனத்து 16-ஆவது சந்நிதானமாக விளங்கியவர் சுப்பிரமணிய தேசிகர்.இவர்பால் அன்பு கொண்டு வாழ்ந்தவர் மீனாட்சி சுந்தரம்பிள்ளை.அவர் தம் குருவாகிய சுவாமிகள் மீது தம் நெஞ்சத்தைத் தூது விடுப்பதாக எழுதப் பெற்ற நூல் இதுவாகும்.இந்நூலில் காப்புச் செய்யுள் ஒன்றும்,311 கண்ணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்நூலுக்கு 1960-ஆம் ஆண்டு த.ச.மீனாட்சிசுந்தரம் குறிப்புரை ஒன்று எழுதி வெளியிட்டுள்ளார்.
நூலாசிரியர்[தொகு]
ஆதீனத்தில்,மகாவித்வான் பட்டம் பெற்றவர்.தல புராணங்கள் பல பாடியுள்ளார்.சுப்பிரமணிய தேசிகர் மாலை எனும் நூலையும்,15-ஆவது பட்டத்து சுவாமிகள் மீது கலம்பகம்,பிள்ளைத் தமிழ் ஆகிய இரு நூல்களையும் இயற்றியுள்ளார்.
நூற் சிறப்புகள்[தொகு]
- இறைவன் உயிர்களுக்கு அருளும் திறம்
- இம்மண்ணில் பிறந்து துன்பப்படும் உயிர்களைப் புழுவால் அரிக்கப்படும் பயிருக்கு உவமையாகப் பாடியுள்ளார். (விரவுபுழு மென் பயிர் போல)
- தேவர்கள் மந்தர மலையை மத்தாகக் கொண்டு பாற்கடல் கடைந்தது,ஒரு காலத்தில் இந்திரன் வச்சிராயுதத்தால் மலைகளின் சிறகுகளை அரிந்தது,மைந்நாக மலை இந்திரனுக்குப் பயந்து கடலிடை ஒளிந்து கொண்டது,அகத்தியர் விந்தியமலையைப் பூமியில் அழுத்தியது முதலான புராணச் செய்திகள் சொல்லப்பட்டுள்ளன.
- 63 நாயன்மார்கள் வரலாறு சுருக்கமாகச் சொல்லப்பட்டுள்ளது.
- ஆதீனத்து சந்நிதானங்களைத் தரிசிக்கும் முறைகளும் நூலில் இடம்பெற்றுள்ளன.
- இறுதியாக நெஞ்சத்தினை அவரிடம் அனுப்பி மாலையைப் பெற்று வருமாறுக் கூறி நூலை முடிக்கின்றார் ஆசிரியர்.
= உசாத்துணை[தொகு]
திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை இயற்றிய," ஸ்ரீசுப்பிரமணியதேசிகர் நெஞ்சுவிடு தூது"- திருவாவடுதுறை ஆதீனம்-2015.