ஸ்ரீகிருஷ்ணா அறிவியல் மையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறீகிருஷ்ணா அறிவியல் மையம்
Map
நிறுவப்பட்டது1978 (1978)
அமைவிடம்காந்தி மைதானத்தின் மேற்கு பகுதி, பாட்னா, பீகார்
ஆள்கூற்று25°36′40″N 85°08′38″E / 25.611°N 85.144°E / 25.611; 85.144
வகைஅறிவியல் அருங்காட்சியகம்
வருனர்களின் எண்ணிக்கை158822 (2007-08), 212440 (09-10), 223300 (10-11)[1]
இயக்குனர்அமிதாப் (திட்ட இயக்குநர்)
மேற்பார்வையாளர்இராம் சுவரூப்
வலைத்தளம்sksciencecentre.org

சிறீகிருஷ்ணா அறிவியல் மையம் (Shrikrishna Science Centre) என்பது இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவில் உள்ள ஒரு அறிவியல் அருங்காட்சியகம் ஆகும்.

வரலாறு[தொகு]

பாட்னாவில் அமைந்துள்ள சிறீகிருஷ்ணா அறிவியல் மையம், பீகாரின் முதல் முதலமைச்சர் சிறீ கிருட்டிணா சின்கா நினைவாகப் பெயரிடப்பட்டது. இது 1978ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி கல்வி அமைச்சர் சிறீ தாக்கூர் பிரசாத் சிங்கால் திறந்து வைக்கப்பட்டது. சிறீகிருஷ்ணா அறிவியல் மையம், இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பான தேசிய அறிவியல் அருங்காட்சியகங்கள் சபையின் ஒரு பிரிவாகும். இது பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தின் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ளது. பொதுமக்கள் குறிப்பாக மாணவர்கள் பயன்பெறும் வகையில் அறிவியல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. அறிவியலில் செயல்பாடுகள் மூலம் விமர்சன சிந்தனையை ஊக்குவிக்க புதிய கண்டுபிடிப்பு மையமும் அமைக்கப்பட்டுள்ளது. முப்பரிணாம அச்சு, அகன்ற அலைவரிசை வசதிகள் உள்ளிட்ட மேம்பட்ட ஆய்வகங்கள் போன்ற பல்வேறு வசதிகள் உள்ளன.

காட்சியகங்கள்[தொகு]

சிறீகிருஷ்ணா அறிவியல் மையம் பல்வேறு அறிவியல் பிரிவுகளைக் கற்பிக்கும் காட்சியகங்களால் ஆனது. இதில் வேடிக்கையாக அறிவியலைக் கற்கும் வகையில் தொகுப்புகளைக் கொண்ட இயற்பியல் மற்றும் கணிதப் பிரிவு 50 கண்காட்சிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இங்குக் கண்ணாடிகள் மற்றும் படங்களின் தொகுப்பும், முப்பரிணாம நிகழ்ச்சி வசதியும் உள்ளது. உலகின் தோற்றம் மற்றும் மனிதன் உட்பட வாழ்க்கை வடிவங்களை விளக்கும் 60 ஊடாடும் காட்சிகளைக் கொண்ட பரிணாம காட்சியகம் உள்ளது. குழந்தைகள் விளையாடக்கூடிய 40 கண்காட்சிகளுடன் அறிவியல் பூங்கா; நகரும் டைனோசர்களுடன் ஜுராசிக் பூங்கா; மற்றும் பெருங்கடல்கள் மற்றும் இந்திய விஞ்ஞானிகளின் கண்காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

படங்கள் மற்றும் கண்ணாடிகள் பற்றிய புதிய காட்சியகத்தில் சுமார் 60 கண்காட்சிகள் உள்ளன. இக்காட்சியகங்களில் பிரதிபலிப்பு தத்துவம், மாயையான படங்கள், முப்பரிணாம படங்கள், மருத்துவ காட்சி பிரதிபலிப்பு, வண்ணங்களின் கருத்து மற்றும் எண்ணிம மற்றும் மெய்நிகர் காட்சியாக்கம் ஆகிய வசதிகளுடன் கூடியது. பல மூழ்கிய மெய் நிகர் கண்காட்சிகள் இந்த காட்சியகத்தின் பகுதியாக உள்ளது.

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]