ஸ்மிருதி மொரார்கா
ஸ்மிருதி மொரார்கா | |
---|---|
![]() | |
கல்வி | சோஃபியா பெண்கள் கல்லூரி & லொரெட்டோ கல்லூரி, கொல்கத்தா |
பணி | சமூக ஆர்வலர் |
அறியப்படுவது | கைத்தறி நெசவு மற்றும் மனநல ம்ருத்துவம் |
வாழ்க்கைத் துணை | கௌதம் மொரார்கா [1] |
பிள்ளைகள் | 2 [1] |
ஸ்மிருதி மொரார்கா (Smriti Morarka) ஓர் இந்திய சமூக ஆர்வலர் ஆவார். இவர், கைத்தறி புடவை முன்னேற்றத்தில் மாற்றங்களை செய்தவராக அறியப்படுகிறார். மேலும், மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறார். 2019 ஆம் ஆண்டில், கைத்தறி நெசவாளர்களுக்காக இவர் செய்த முன்மாதிரியைப் பாராட்டி அனைத்துலக பெண்கள் நாள் அன்று இந்தியக் குடியரசுத் தலைவரால் நாரி சக்தி விருது இவருக்கு வழங்கப்பட்டது.
வாழ்க்கை
[தொகு]ஸ்மிருதி மொரார்கா வெல்ஹாம் பெண்கள் பள்ளி,[2] பெண்களுக்கான சோபியா கல்லூரி மற்றும் கொல்கத்தாவின் லொரேட்டோ கல்லூரியில் கல்வி பயின்றார், அங்கு இவர் வரலாறு மற்றும் அரசியல் அறிவியல் படித்தார்.[3] இவரது குடும்பத்தினர் கலைகளை சேகரித்தனர். இவரது தாயார் வாரணாசியில் இந்தியவியல், மதம் மற்றும் கலாச்சார ஆய்வுகளில் நிபுணத்துவம் பெற்ற தேசிய நிறுவனத்தை உருவாக்கினார். கர்சியில், தங்கள் கையால் நெய்யப்பட்ட கைத்தறி தயாரிப்புகளை விலை கொடுத்து வாங்குபவர்களைக் கண்டுபிடிப்பதில் மிகவும் சிரமப்பட்ட கைத்தறி நெசவாளர்களை இவர் சந்தித்தார்.[4]
இதனால், மொரார்கா 1998 இல் "தந்துவி" என்ற பெயரில் ஒரு பிராண்டைத் தொடங்கினார் [1] தொழில்துறையில் பொதுவான சரிவு இருந்தபோதிலும், இவர்களின் தயாரிப்புகளை விற்கும் லட்சியத்துடன் பணிபுரிந்தார்.[5][6] தத்ருவி என்ற் சமஸ்கிருத வார்த்தையின் அர்த்தம் "நெசவாளர்"என்பதாகும். இவர் தந்துவியை தனது மூன்றாவது குழந்தையாகக் கருதினார், மேலும் வேலை செய்யும் 80-100 நெசவாளர்களால் உருவாக்கப்பட்ட வேலை இவரது வாரத்தின் ஆறு நாட்களை ஆக்கிரமித்தது.
வியாபாரம் செய்யும் முறையை மேம்படுத்த வேண்டும் என்பதை இவர் உணர்ந்தார். கையால் நெய்யப்பட்ட பொருட்கள் விலை உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்பதை இவர் அறிந்திருந்தார், ஆனால் தொழில் "நூலில் தொங்கிக் கொண்டிருந்தாலும்" [7] தரம் சமமாக இருப்பதை இவர் கண்டார்.[8] முன்பு இந்த துணியை விற்பனை பிரதிநிதிகள் மிக மலிவாக வாங்கினார்கள், பிறகு அதிக விலைக்கு அவர்கள் விற்கிறார்கள் என்பதை உணர்ந்து நெசவாளர்களுக்கு லாபத்தில் நியாயமான பங்கு கிடைக்கும் மாதிரியை உருவாக்கியுள்ளார். [9] மேலும், 50,000 ரூபாய்க்கு விற்கப்படும் புடவைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்த முடிவு செய்தார்.
இவருக்கு 2019 இல் நாரி சக்தி புரஸ்கார் விருது வழங்கப்பட்டது [10] "2018" விருது இந்திய ஜனாதிபதியால் ஜனாதிபதி மாளிகையில் வழங்கப்பட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.[11] மொரார்கா மன ஆரோக்கியத்தில் அக்கறை கொண்ட மனோத்சவ் அறக்கட்டளையின் அறங்காவலராகவும் உள்ளார்.
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]இவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.ஆர்.மொரார்காவின் மகனான தொழிலதிபர் கெளதம் ஆர் மொரார்காவை மணந்தார்.[12] இவரது கணவர் துவரிகேஷ் சுகர் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தை நடத்தி வருகிறார். மேலும் அவர் தனது தந்தையின் நினைவாக ஒரு பள்ளியை நிறுவிய ஒரு பரோபகாரர் ஆவார்.[13] இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "Weaving a success story". The Financial Express (in அமெரிக்க ஆங்கிலம்). 2005-09-04. Retrieved 2020-05-22.
- ↑ "Weaving a success story". The Financial Express (in அமெரிக்க ஆங்கிலம்). 2005-09-04. Retrieved 2020-05-22.
- ↑ "Smriti G Morarka - trustee". Monotsav.com (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2020-05-21.
- ↑ "We should provide Indian crafts a secure environment to thrive: Smriti Morarka". The Indian Express (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-12-11. Retrieved 2020-04-28.
- ↑ WCD, Ministry of (2019-03-08). "Ms. Smriti Morarka - #NariShakti Puraskar 2018 Awardee in Individual category.pic.twitter.com/ymtdopI9Hq". @ministrywcd (in ஆங்கிலம்). Retrieved 2020-04-29.
- ↑ "In this documentary, Varanasi's sari weavers talk about their craft and its present state of decline" (in en-IN). 2018-05-05. https://www.thehindu.com/entertainment/movies/in-this-documentary-varanasis-sari-weavers-talk-about-their-craft-and-its-present-state-of-decline/article23774217.ece.
- ↑ WCD, Ministry of (2019-03-08). "Ms. Smriti Morarka - #NariShakti Puraskar 2018 Awardee in Individual category.pic.twitter.com/ymtdopI9Hq". @ministrywcd (in ஆங்கிலம்). Retrieved 2020-04-29.WCD, Ministry of (2019-03-08). "Ms. Smriti Morarka - #NariShakti Puraskar 2018 Awardee in Individual category.pic.twitter.com/ymtdopI9Hq". @ministrywcd. Retrieved 2020-04-29.
- ↑ "Hanging on a Thread". The Indian Express (in Indian English). 2018-08-08. Retrieved 2020-05-21.
- ↑ "Restoring the old Varanasi weave to its original glory". The Sunday Guardian Live (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-12-15. Retrieved 2020-04-28.
- ↑ LSChunav. "स्मृति मोरारका को नारी शक्ति पुरस्कार, बुनकरी कला को संकट से उबारने पर राष्ट्रपति ने किया सम्मानित". www.loksabhachunav.com (in இந்தி). Retrieved 2020-05-21.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Nari Shakti Puraskar - Gallery". narishaktipuraskar.wcd.gov.in. Retrieved 2020-04-11.
- ↑ "Weave will rock you in style - Times of India". The Times of India. Retrieved 2020-05-22.
- ↑ "About Sewajyoti". sewajyoti.com. Retrieved 2020-05-22.