ஸ்மால்ஃபுட் (திரைப்படம்)
ஸ்மால்ஃபுட் Smallfoot | |
---|---|
இயக்கம் | கேரி கிர்க்பாட்ரிக் |
தயாரிப்பு | போனே ராட்ஃபோர்ட் கிளென் ஃபிகாரா ஜான் ரெக்கா |
மூலக்கதை | எட்டி டிராக்ஸ படைத்தவர் செர்ஜியோ பபோஸ்[1] |
திரைக்கதை | கேரி கிர்க்பாட்ரிக் கிளேர் செரா |
இசை | ஹெய்டியோ பெரேரா[2] |
நடிப்பு |
|
படத்தொகுப்பு | பீட்டர் எட்டிங்கர் |
விநியோகம் | வார்னர் பிரதர்ஸ் பிக்சர்ஸ் |
வெளியீடு | செப்டம்பர் 28, 2018 |
ஓட்டம் | 109 நிமிடங்கள்[3] |
நாடு | அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஸ்மால்ஃபுட் (Smallfoot) என்பது 2018 ஆண்டு வெளியாக உள்ள அமெரிக்க முப்பரிமான சலன இசை நகைச்சுவை-அதிரடி திரைப்படமாகும். செர்ஜி பபோஸ் எழுதிய எட்டி டிராக்ஸ் என்ற புத்தகத்தின் அடிப்படையில் இந்த படத்தை கேரி கிர்க்பாட்ரிக் இணைந்து எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தை வால்டர் அனிமேஷன் குழு தயாரித்துள்ளது.[4] படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரங்களுக்கு சானிங் டேட்டம், ஜேம்ஸ் கோர்டன், ஜெனியா, காமன், இலெப்ரோன் ஜேம்சு, ஜினா ரோட்ரிக்ஸ், டேனி டிவிடோ, யாரா ஷாஹிதி, எலி ஹென்றி மற்றும் ஜிம்மி டாட்ரோ ஆகிய திரை நட்சத்திரங்கள் பின்னணி குரல் கொடுத்துள்ளனர். இப்படத்தை 2018 செப்டம்பர் 28 அன்று வெளியிட வார்னர் பிரதர்ஸ் பிக்சர்ஸ் திட்டமிடப்பட்டுள்ளது.
கதை
[தொகு]ஓரு பனிமலை முகட்டில் ஓர் எட்டி சமூகம் வசிக்கிறது. அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த மைகோ என்ற சிறுவயது எட்டி, மனித ஜீவராசிகளை அறிந்துகொள்ளும் ஆவல் கொண்டதாக இருக்கிறான். ஒரு நாள் அந்தப் பகுதிக்குமேலே கடந்துசெல்லும் வானூர்தி ஒன்று விபத்துக்கிறது அப்போது அதிலிருந்து பாராசூட்டில் குதிக்கும் மனிதப் பிறவியைப் பார்க்கிறான்.
தான் மனித ஜீவராசியைப் பார்த்ததாக அவன் தன் சமூகத்தில் வந்து சொல்கிறான். ஆனால் அந்த எட்டி சமூகத்தில் யாரும் மனிதரைக் காண்டதில்லை என்பதால் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது ஒரு கட்டுக்கதை என்று கூறி அதை நம்ப மறுக்கிறார்கள். இதனால் மனிதனைக் காணும் ஆவலில் அந்த எட்டி இரகசியமாக புறப்படுகிறான். மலைச் சரிவில் உள்ள ஊர் ஒன்றில் மனித ஜீவராசிகளை அவன் காண்பதும் அதனால் ஏற்படும் சிக்கல்களுமே இதன் கதை.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Smallfoot". www.warnerbros.com.
- ↑ "Heitor Pereira to Score 'Smallfoot' - Film Music Reporter". filmmusicreporter.com.
- ↑ "Free Screening--Smallfoot". Los Angeles County Museum of Art. பார்க்கப்பட்ட நாள் 26 August 2018.
- ↑ "'Smallfoot' First Full Trailer - The SPA Studios Blog". Archived from the original on 2018-09-02. பார்க்கப்பட்ட நாள் 2018-09-02.
- ↑ எஸ்.எஸ்.லெனின் (31 ஆகத்து 2018). "எட்டி'யும் மனிதக் குட்டியும்". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 2 செப்டம்பர் 2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)