ஸ்பின் போல்டாக் மாவட்டம்
தோற்றம்

ஸ்பின் போல்டாக் மாவட்டம் (Spin Boldak District), ஆப்கானித்தான் நாட்டின் கந்தகார் மாகாணத்தில் அமைந்துள்ள மாவட்டம் ஆகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் ஸ்பின் போல்டாக் நகரம் ஆகும். ஸ்பின் போல்டக் நகரம் கந்தகார் நகரத்திற்கு தென்கிழக்கில் 103 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இம்மாவட்டத்தின் கிழக்கில் பாக்கித்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள கில்லா அப்துல்லா மாவட்டத்தின் எல்லையை ஒட்டியுள்ளது.
துப்பாக்கிச் சூடு
[தொகு]06 நவம்பர் 2025 அன்று ஸ்பின் போல்டாக் பகுதியில் ஆப்கானிய படைகளுக்கும், பாகிஸ்தான் படைகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பெண்கள் உள்பட 5 பேர் உயிர் இழந்ததாகவும் மற்றும் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.[1]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- Afghan Border Police station open for 24-hour operations in Spin Boldak, by Staff Sgt. Brendan Mackie, Combined Task Force Arrowhead (July 17, 2012)
- AIMS District Map
