ஸ்னோ வைட் அண்ட் த செவன் டுவார்ப்ஸ் (1937 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்னோ வைட் அண்ட் த செவன் டுவார்ப்ஸ்
தயாரிப்புவால்ட் டிஸ்னி
கலையகம்வால்ட் டிஸ்னி புரடக்சன்ஸ்
ஓட்டம்83 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவுஐஅ$1.49 மில்லியன் (10.7 கோடி)[1]
மொத்த வருவாய்ஐஅ$418 மில்லியன் (2,989.4 கோடி)[2]

ஸ்னோ வைட் அண்ட் த செவன் டுவார்ப்ஸ் என்பது 1937 ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க இயங்குபடம் ஆகும். இந்த திரைப்படத்தை வால்ட் டிஸ்னி திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருந்தது. 1812 ஆம் ஆண்டு எழுதப்பட்ட ஜெர்மானிய தேவதை கதையை அடிப்படையாக கொண்டு இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டது. டிஸ்னி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட முதல் முழுநீள இயங்குபடம் இதுவேயாகும்.

1938 ஆம் ஆண்டின் ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் இந்த திரைப்படம் சிறந்த இசைக்காக பரிந்துரைக்கப்பட்டது. அடுத்த ஆண்டு தயாரிப்பாளர் வால்ட் டிஸ்னிக்கு இந்த திரைப்படத்திற்காக கௌரவ ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது. இந்த விருது தனித்துவமானதாக இருந்தது. ஏனெனில் ஒரு பொதுவான ஆஸ்கர் சிலையும் 7 சிறிய ஆஸ்கர் சிலைகளும் இந்த விருதிற்காக வழங்கப்பட்டன.[3]

அமெரிக்க திரைப்பட நிறுவனமானது இந்த திரைப்படத்தை 100 சிறந்த அமெரிக்க திரைப்படங்களில் ஒன்றாக தரப்படுத்தியுள்ளது. 2008ஆம் ஆண்டு எக்காலத்திலும் வெளிவந்த சிறந்த அமெரிக்க இயங்கு திரைப்படமாக இத்திரைப்படத்திற்கு பெயரிட்டது.

உசாத்துணை[தொகு]

  1. Barrier 1999, ப. 229.
  2. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; gross என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  3. Disney's special Oscars

Streaming audio