ஸ்டோரிகார்ப்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
StoryCorps
நிறுவப்பட்டதுஏப்ரல் 13, 2002; 22 ஆண்டுகள் முன்னர் (2002-04-13)[1]
தலைமையகம்புரூக்ளின், நியூயார்க் நகரம், நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா

ஸ்டோரிகார்ப்ஸ் (StoryCorps) என்பது ஐக்கிய அமெரிக்காவில் இயங்கும் ஓர் இலாப நோக்கற்ற அமைப்பு ஆகும். இதன் நோக்கம், அமெரிக்காவின் அனைத்து பின்புலம் சாா்ந்த நம்பிக்கைகள் அடிப்படையிலான கதைகளை பதிவு செய்வது, பாதுகாப்பது, பகிர்வது ஆகும். ஸ்டோரிகார்ப்ஸ் அமைப்பை 2003-ஆம் ஆண்டில் வானொலி உற்பத்தியாளர் டேவிட் இசாய் என்பவர் செயல்திட்டம் அமைத்து நிறுவினார். இதன் தலைமைச்செயலகம் அமெரிக்காவின் நியூயாா்க்கில் புரூக்ளினுக்கு அருகில் உள்ள கிரீன் கோட்டையில் அமைந்துள்ளது.

1930களில் சிறந்த உணர்வும், நோக்கமும் கொண்ட ஒரு நல்ல அமைப்பாக விளங்கியது. அமெரிக்காவில் வாய்மொழி வரலாற்று நோ்காணல்களின் மூலமாக பதிவு செய்கின்றன. சிறப்பு மத்திய முனையத்தில் அமைந்துள்ள இதன் முதல் பதிவுக்கூடத்தை வாய்மொழி வரலாற்று அறிஞரான ஸ்டட்ஸ் டெர்க்கெல் என்பவரால் திறந்து வைக்கப்பட்டது. இந்த அமைப்பானது அமெரிக்காவில் உள்ள 50 மாநிலங்களில், 1 இலட்சம் பங்கேற்பாளா்களிடம் இருந்து 60 ஆயிரம் நேர்காணல்களை பதிவு செய்துள்ளது.

நேர்காணல்கள்[தொகு]

நண்பர்கள், குடும்பத்தினர்கள், நன்கு அறிமுகமானவர்களிடையே நோ்காணல்கள் நடத்தப்படுகிறது. நன்கு பயிற்சி பெற்ற இவ்வமைப்பின் ஊக்கவிப்பாளர், பங்கேற்பாளர்களின் நேர்காணல்களை செயல்படுத்துவார். நோ்காணலின் இறுதி 40 நிமிடங்கள் பதிவு செய்வதற்கான அமர்வு, பங்கேற்பாளா்களிடமிருந்து 50 டாலா்கள் பதிவிற்கான கட்டணமாக பெற்றுக்கொண்டு, நேர்காணலின் முழுமையான பதிவுப்பேழை வழங்கப்படுகிறது. பங்கேற்பாளா்களின் அனுமதியோடு மற்றொரு பதிவு செய்யப்பட்ட ஒலிப்பேழை, நூலக குழுமத்தின் அமெரிக்க நாட்டுபுறவியல் அமைப்பினரால் ஆவணப்படுத்தப்பட்டு, எதிர்கால சந்ததியினர் கேட்டு பயன்பெற வழிசெய்கிறது.

ஒலிப்பதிவு முறைகள்[தொகு]

  • கதை சாவடி: பொதுப்பகுதிகளில் பங்கேற்பாளர்கள் எளிதில் அணுகக்கூடிய வகையில் சிறிய அளவில் கதைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. முதல் கதைச்சாவடி நியூயார்க்கில் உள்ள சிறப்பு மத்திய முனையத்தில் 2003ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் 23-ந்தேதி திறக்கப்பட்டது. பின்பு ஜூலை 2005-ல் இது அடித்தள மான்காட்டன் சதுக்கத்திற்கு மாற்றப்பட்டது. பின்னர், இரண்டாவது கதைச்சாவடியானது பிரான்சிஸ்கோவில் உள்ள சமகால ஜூயிஸ் அருங்காட்சியகத்தில் திறக்கப்பட்டுள்ளது. மூன்றாவது கதைச்சாவடி 2009-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அட்லாண்டா பொது வானொலி நிலையத்தில் திறக்கப்பட்டது.
  • நடமாடும் சாவடி: 2005 மே மாதம் இரண்டு நடமாடும் சாவடிகள் அமைக்கப்பட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு ஆண்டு முழுவதும் பயணம் செய்து பல்வேறு கதைகளை பதிவு செய்கின்றனர்.

விருதுகள்[தொகு]

  • பீபொடி விருதுகள் (2007)[2] It won another Peabody Award in 2011 for StoryCorps' 9/11 Initiative.[3]
  • 2015 டெட் பரிசு[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "StoryCorps.org WHOIS, DNS, & Domain Info - DomainTools". WHOIS. பார்க்கப்பட்ட நாள் 2016-10-27.
  2. 66th Annual Peabody Awards, May 2007.
  3. 71st Annual Peabody Awards, May 2012.
  4. "StoryCorps founder Dave Isay reveals his wish at TED2015". பார்க்கப்பட்ட நாள் 2016-09-12.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டோரிகார்ப்ஸ்&oldid=2707293" இலிருந்து மீள்விக்கப்பட்டது