ஸ்டீவன் ஹாக்கிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஸ்டீபன் ஹாக்கிங் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஸ்டீவன் ஹாக்கிங்
Stephen Hawking
Black & White photo of Hawking at NASA.
பிறப்பு இசுடீவன் வில்லியம் ஹாக்கிங்
சனவரி 8, 1942(1942-01-08)
ஆக்சுபோர்டு, இங்கிலாந்து
இறப்பு 14 மார்ச்சு 2018(2018-03-14) (அகவை 76)
கேம்பிரிட்ச், இங்கிலாந்து
துறை
பணியிடங்கள்
கல்வி செயிண்ட் அல்பான்சு பள்ளி, எர்ட்ஃபோட்சயர்
கல்வி கற்ற இடங்கள் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகக் கல்லூரி (இளங்கலை)
டிரினிட்டி மண்டபம், கேம்பிரிட்ச் (முதுகலை, முனைவர்)
ஆய்வேடு விரிவடையும் அண்டங்களின் இயல்புகள் (1966)
ஆய்வு நெறியாளர் டெனிசு இசுகியாமா[1]
Other academic advisors இராபர்ட் பெர்மன்[2]
அறியப்படுவது
 • ஆக்கிங் கதிர்வீச்சு
 • பென்ரோசு-ஆக்கிங் தேற்றங்கள்
 • கருங்குழி வெப்ப இயக்கவியல்
 • ஆக்கிங் ஆற்றல்
 • கிபன்சு-ஆக்கிங் விளைவு
 • கிபன்சு-ஆக்கிங் வெளி
விருதுகள்
 • ஆடம்சு பர்சு (1966)
 • எடிங்டன் பதக்கம் (1975)
 • மாக்சுவெல் பதக்கமும் பரிசும் (1976)
 • ஐன்மேன் பரிசு (1976)
 • இயூசு பதக்கம் (1976)
 • ஆல்பர்ட் ஐன்சுடைன் விருது (1978)
 • அரச வானியல் கழகப் தங்கப் பதக்கம் (1985)
 • திராக் பதக்கம் (1987)
 • ஊல்ஃப் பர்சு (1988)
 • கோலி பதக்கம் (2006)
 • அடிப்படை இயற்பியல் பரிசு (2012)
துணைவர்
 • ஜேன் வைல்டு (14 சூலை 1965–1995, முறிவு
 • எலைன் மேசன் (செப் 1995–2006, முறிவு
பிள்ளைகள் 3
கையொப்பம்
இணையதளம்
அதிகாரபூர்வ இணையதளம்

ஸ்டீவன் வில்லியம் ஹாக்கிங் (Stephen William Hawking, ஜனவரி 8 , 1942 -14 மார்ச்சு 2018)[3] ஆங்கிலேய கோட்பாட்டு அறிவியலாளரும், அண்டவியலாளரும், நூலாசிரியரும் ஆவார். இவர் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தின் கோட்பாட்டு அண்டவியல் மையத்தின் இயக்குநராகப் பணியாற்றினார்.[4][5] இவர் உரோசர் பென்ரோசுடன் இணைந்து பொதுச் சார்புக் கோட்பாட்டில் புவியீர்ப்பு அருநிலைத் தேற்றங்களை நிறுவியமை, ஆக்கிங்கு கதிரியக்கம் என அழைக்கப்படும் கருந்துளைகளின் கதிர்வீச்சு உமிழ்தலை எதிர்வுகூறியமை போன்ற அறிவியல் ஆய்வுகளுக்காகப் பெரிதும் அறியப்படுகிறார். இவரே முதன் முதலில் அண்டவியலுக்கான கோட்பாட்டை உருவாக்கி, பொதுச் சார்புக் கோட்பாடு, குவாண்டம் இயங்கியல் ஆகியவற்றின் மூலம் விளங்கப்படுத்தினார். குவாண்டம் இயங்கியலின் பல-உலகங்களுக்கான விளக்கத்திற்குத் தீவிர ஆதரவாளராக விளங்கினார்.[6][7]

ஆக்கிங்கு ஐக்கிய அமெரிக்காவின் உயர்ந்த குடிமகனுக்கான விருதைப் பெற்றார். 2002 ஆம் ஆண்டில், பிபிசி நடத்திய பிரித்தானியாவின் 100 பெரும் புள்ளிகள் கணிப்பில் 25வதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1979 முதல் 2009 வரை கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் கணிதவியல் பேராசிரியராகப் பணியாற்றினார். இவர் தான் உருவாக்கிய கோட்பாடுகளைப் பற்றியும், அண்டவியல் தொடர்பிலும் பிரபலமான அறிவியல் கட்டுரைகளை எழுதிப் புகழ் பெற்றார். இவரது காலத்தின் ஒரு வரலாற்றுச் சுருக்கம் என்ற புகழ்பெற்ற கட்டுரைத் தொடர் இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் சண்டே டைம்சு இதழில் 237 வாரங்களாக வெளிவந்து சாதனை புரிந்தது. சாதாரண மக்களும் வாசித்துப் பயனடையும் வகையில் இலகுவான மொழியில், அறிவியற் சமன்பாடுகளைத் தவிர்த்து எழுதப்பட்ட இவரது அறிவியல் நூல்கள் பலரையும் கவர்ந்தன.

21 வயதிலேயே, முதலாவது திருமணத்துக்குச் சற்றுமுன்னர் தசையூட்டமற்ற பக்க மரப்பு நோய் எனவும் அழைக்கப்படும் இயக்கு நரம்பணு நோயால் தாக்குண்டார். இக் குணப்படுத்த முடியாத நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, படிப்படியாகக் கை, கால் முதலிய உடலியக்கங்களும் பாதிக்கப்பட்டு, பேச்சையும் இழந்த நிலையில்,[8][9] கணினியூடாகப் பேச்சுத் தொகுப்பி மூலம் மற்றவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளும் கட்டாயத்துக்குள்ளான இவர், இயற்பியல் ஆராய்ச்சிகளிலும், எழுத்துத்துறையிலும், பொதுவாழ்விலும் மிகவும் ஈடுபாடு உள்ளவராகவே இருந்தார். இவர் 2018 மார்ச் 14 இல் தனது 76-வது அகவையில் காலமானார்.[10][11]

அமெரிக்காவில் உள்ள அனென்பெர்க் அறக்கட்டளை இயற்பியல் கணிதத்தை மாணவர்களுக்குப் எளிய நடையில் புதிய கோணத்தில் வடிவமைப்பவர்களுக்கு 6 மில்லியன் டாலர் பரிசு என 1986-ல் அறிவித்தது. இந்தச் சவாலை ஏற்று, இயற்பியல் அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் அரை மணி நேரத்திற்கு ஒரு காட்சி விளக்கம் வீதம் 26 மணி நேரம் ஓடக் கூடிய ‘காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம்’ என்ற பாடத் திட்டத்தை உருவாக்கிக் கொடுத்துப் பரிசு பெற்றார். இந்தச் சிறந்த படைப்பு உலகத் தமிழ் மொழி அறக்கட்டளையால் 2000 ஆண்டு ஒரு கோடி ரூபாய் செலவில் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது.[12]

ஆரம்ப வாழ்வும் கல்வியும்[தொகு]

குடும்பம்[தொகு]

ஆக்கிங்கு 1942 சனவரி 8 இல்[13] இங்கிலாந்து, ஆக்சுபோர்டு நகரில் பிராங்கு (1905–1986), இசபெல் ஆக்கிங்கு (1915–2013) ஆகியோருக்கு,[14][15] கலீலியோ கலிலியின் 300வது நினைவு நாளில் பிறந்தார். ஆக்கிங்கின் தாயார் இசுக்கொட்லாந்தைச் சேர்ந்தவர்.[16] குடும்ப நிதி நெருக்கடியிலும், ஆக்கிங்கின் பெற்றோர் இருவரும் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள். தந்தை மருத்துவத்துறையிலும், தாயார் மெய்யியல், அரசியல் பொருளாதாரத்திலும் பட்டம் பெற்றார்கள்.[15] இருவரும் இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் மருத்துவ ஆய்வுக் கழகத்தில் சந்தித்துத் திருமணம் செய்து கொண்டனர்.[15][17] ஆக்கிங்கிற்கு பிலிப்பா, மேரி என இரண்டு தங்கையரும், எட்வர்டு எனும் ஒரு வளர்ப்புத் தம்பியும் உள்ளனர்.[18]

விண்வெளிப் பயண அறிவிப்பு[தொகு]

ஜனவரி 8, 2007 ல் இவருடைய 65 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் அன்று, தான் விண்வெளிப் பயணம் (செலவு) செய்யப் போவதாக அறிவித்தார். பில்லியனர் ரிச்சர்டு பிரான்சன் அவர்களுடைய செலவில் வர்ஜின் காலாக்டிக் விண்வெளிச் போக்குவரத்துச் சேவையின் துணையால் 2009 ஆண்டு ஈர்ப்பற்ற வெளியில் நிலவுருண்டையை சுற்றி வர இருப்பதாகக் கூறினார்.[19] இறக்கும் வரையிலும் என்றாவது ஒருநாள் விண்வெளிக்கு பயணம் செய்துவிடும் நம்பிக்கையோடுதான் இருந்தார்.[20]

மறைவு[தொகு]

ஸ்டீபன் ஹோக்கிங் 14 மார்ச்சு 2018 அன்று தனது 76 ஆவது வயதில் காலமானார்.[21] அதிகாலையில் கேம்பிரிட்ஜில் உள்ள அவரது வீட்டில் மரணம் நிகழ்ந்தது.[22][23] அவரது குடும்பத்தினர் அவர் அமைதியாக உயிர் துறந்ததாக அறிவித்துள்ளனர்.[24][25][26]

நூல்கள்[தொகு]

இவர் எழுதிய சாதாரண மக்களுக்கானவை[தொகு]

இவரைப் பற்றிய தமிழ் நூல்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. ஸ்டீவன் ஹாக்கிங் at the Mathematics Genealogy Project
 2. Ferguson 2011, பக். 29.
 3. "பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங் மரணம்". ஒன் இந்தியா தமிழ். பார்த்த நாள் (மார்ச்சு 14, 2018)
 4. "Centre for Theoretical Cosmology: Outreach Stephen Hawking". Ctc.cam.ac.uk.
 5. "About Stephen – Stephen Hawking". Stephen Hawking Official Website. மூல முகவரியிலிருந்து 30 August 2015 அன்று பரணிடப்பட்டது.
 6. Gardner, Martin (September/October 2001). "Multiverses and Blackberries". "Notes of a Fringe-Watcher". Skeptical Inquirer. Volume 25, No. 5.
 7. Price, Michael Clive (February 1995). "THE EVERETT FAQ". Department of Physics, Washington University in St. Louis. Retrieved 17 December 2014.
 8. "Mind over matter: How Stephen Hawking defied Motor Neurone Disease for 50 years". Independent.co.uk. 26-11-2015. https://www.independent.co.uk/news/science/mind-over-matter-how-stephen-hawking-defied-motor-neurone-disease-for-50-years-6286313.html. 
 9. "How Has Stephen Hawking Lived to 70 with ALS?". சயன்டிஃபிக் அமெரிக்கன். 7-01-2012. http://www.scientificamerican.com/article/stephen-hawking-als/. 
 10. Dennis Overbye (14-03-2018). "Stephen Hawking Dies at 76; His Mind Roamed the Cosmos". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2018/03/14/obituaries/stephen-hawking-dead.html. 
 11. Henry, David (14-03-2018). ""Stephen Hawking, physicist who reshaped cosmology, passes away at 76"". தி எகனாமிக் டைம்ஸ். https://economictimes.indiatimes.com/magazines/panache/physicist-stephen-hawking-passes-away/articleshow/63294700.cms. பார்த்த நாள்: 15-03-2018. 
 12. "காட்சி வழி குறுந்தகடு வழங்கல்". தினமணி (மார்ச், 5, 2016). பார்த்த நாள் 6 ஏப்ரல் 2016.
 13. HAWKING, Prof. Stephen William. Who's Who. 2015 (online ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம் ). A & C Black, an imprint of Bloomsbury Publishing plc. http://www.ukwhoswho.com/view/article/oupww/whoswho/U19510.  (subscription required)
 14. Larsen 2005, பக். xiii, 2.
 15. 15.0 15.1 15.2 Ferguson 2011, பக். 21.
 16. "Mind over matter Stephen Hawking". தி எரால்டு.
 17. White & Gribbin 2002, பக். 6.
 18. Larsen 2005, பக். 2, 5.
 19. டெய்லி டெலிகிராஃவ், இங்கிலாந்து
 20. ஸ்டீபன் ஹாக்கிங்
 21. "Stephen Hawking dies aged 76". பிபிசி. பார்த்த நாள் மார்ச் 14, 2018.
 22. Penrose, Roger (14 March 2018). "Stephen Hawking obituary". The Guardian. https://www.theguardian.com/science/2018/mar/14/stephen-hawking-obituary. 
 23. Overbye, Dennis (14 March 2018). "Stephen Hawking, Who Examined the Universe and Explained Black Holes, Dies at 76". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2018/03/14/obituaries/stephen-hawking-dead.html. பார்த்த நாள்: 14 March 2018. 
 24. "Physicist Stephen Hawking dies aged 76". பிபிசி. 14 March 2018. http://www.bbc.com/news/uk-43396008. பார்த்த நாள்: 14 March 2018. 
 25. News, A. B. C. (2018-03-14). "Stephen Hawking, author of 'A Brief History of Time,' dies at 76" (en).
 26. "Physicist Stephen Hawking dies after living with ALS for 50-plus years". SFGate. https://www.sfgate.com/world/article/Physicist-Stephen-Hawking-dies-after-living-with-12751523.php. 
 27. http://www.udumalai.com/kalam-oru-varalatru-surakkam.htm

மூலங்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டீவன்_ஹாக்கிங்&oldid=2498229" இருந்து மீள்விக்கப்பட்டது