ஸ்டார் ஆப்பிள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்டார் ஆப்பிள்

இப்பழமரத்தின் தாவரப்பெயர் (Chrysophyllum cainito) என்பதாகும். இதன் தாயகம் வெப்ப மண்டல அமெரிக்கா ஆகும். இதன் பழம் ஆப்பிள் வடிவத்திலும் வழவழப்பாகவும் 5 முதல் 10 செ.மீ விட்டம் உடையதாகவும் இருக்கும். பழச்சதை மென்மையானதாகவும், இனிப்பாகவும் இருக்கும். இதன் பழம் பச்சை அல்லது இளஞ்சிவப்பு நிறமாக இருக்கும். இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள நீலகிரி மலைப்பகுதியில் விளைகிறது. பழங்கள் பிப்ரவரி – மார்ச் மாதங்களில் கிடைக்கும். ஒரு மரத்தலிருந்து ஒரு ஆண்டில் 70 கிலோ பழங்கள் அறுவடை செய்யலாம். இம்மரம் விதைமூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. விதைகள் 6 வாரங்களில் முளைக்கின்றன.

மருத்துவ பண்புகள்[தொகு]

இதன் இலை, பழம் மருந்துக்கு உதவுகின்றன. இதன் பழத்தை மணப்பாகு செய்து சுர நோயாளிகளுக்கு புளிப்பு பானமாகத் தரலாம். மருந்துகளுக்கு சாயம் ஏற்ற இம்மரத்தின் பழங்களைப் பயன்படுத்தலாம். அம்மரத்தின் இலை, வேப்பிலை, ஓரிரண்டு வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்துப் படுக்கை புண்களுக்குப் போட அவை உலர்ந்து குணம் தெரியும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. அர்ச்சுணன், கோ, (2008), மருத்துவத்தில் காய்கனிகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, ப. 125.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டார்_ஆப்பிள்&oldid=2385587" இருந்து மீள்விக்கப்பட்டது