உள்ளடக்கத்துக்குச் செல்

ஸ்டார்டஸ்ட் (விண்கலம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்டார்டஸ்ட்
Stardust
டெம்பெல் 1 வால்வெள்ளியை அண்மிக்கும் ஸ்டார்டஸ்ட் விண்கலம்
இயக்குபவர்நாசா
திட்ட வகைவிண்பொருட்களை அணுகல், மாதிரிகளை பூமிக்கு அனுப்புதல்
அணுகிய விண்பொருள்5535 ஆன்பிராங்க், வைல்ட் 2, டெம்பெல் 1
செயற்கைக்கோள்சூரியன்
ஏவப்பட்ட நாள்1999-02-07 21:04:15 UTC
ஏவுகலம்டெல்ட்டா II 7426
ஏவு தளம்கேப் கேனவரல்
திட்டக் காலம்பறப்பில் உள்ளது
தே.வி.அ.த.மை எண்1999-003A
இணைய தளம்ஸ்டார்டஸ்ட் வலைத்தளம்
நெக்ஸ்ட் வலைத்தளம்
நிறை300 கிகி
திறன்330 W

ஸ்டார்டஸ்ட் (Stardust) என்பது நாசாவினால் விண்ணுக்கு அனுப்பப்பட்ட ஒரு தானியங்கி விண்கலம் ஆகும். 300 கிகி எடை கொண்ட இவ்விண்கலம் 1999, பெப்ரவரி 9 ஆம் நாள் 5535 ஆன்பிராங்க் என்ற சிறுகோளை ஆராயவும், வைல்ட் 2 என்ற வால்வெள்ளியையும் ஆராய்ந்து அவற்றிலிருந்து மாதிரிகளைச் சேகரித்து பூமிக்கு அனுப்புத் திட்டத்துடன் அனுப்பப்பட்டது. இதன் முதன்மைத் திட்டத்தை 2006 ஆம் ஆண்டு சனவரி 15 ஆம் நாள் நிறைவு செய்து, அது சேகரித்த மாதிரிகளைக் கொண்ட விண்கூடு பூமிக்குத் திரும்பியது[1]. 25 ஆண்டுகள், 8 மாதங்கள்,  4 நாட்கள் ஆக பறப்பில் உள்ள ஸ்டார்டஸ்ட் விண்கலம் டெம்பெல் 1 சிறுகோளை ஆராய்வதற்காக அதன் திட்டம் விரிவாக்கப்பட்டது. இதனை அடுத்து, அது 2011, பெப்ரவரி 11 ஆம் நாள் டெம்பெல் 1 ஐ அண்மித்தது[2].

மேற்கோள்கள்

[தொகு]
  1. "NASA Spacecraft Returns With Comet Samples After 2.9 Bln Miles". bloomberg.com. 
  2. "Stardust spacecraft makes comet flyby". பிபிசி. 

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டார்டஸ்ட்_(விண்கலம்)&oldid=3720484" இலிருந்து மீள்விக்கப்பட்டது