ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு


இஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு (ஆங்கிலம்: Standard Chartered அல்லது Standard Chartered PLC) என்பது நுகர்வோர், பெருநிறுவன மற்றும் கருவூல சேவைகளில் செயல்படும் ஒரு பன்னாட்டு வங்கியாகும். ஐக்கிய இராச்சியத்தில் அதன் தலைமையகம் இருந்தாலும், அது இங்கிலாந்தில் சில்லறை வங்கியை நடத்துவதில்லை. மேலும் அதன் லாபத்தில் 90% ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வருகிறது.[1]
இஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு இலண்டன் பங்குச் சந்தையில் முதன்மைப் பட்டியலைக் கொண்டுள்ளது; மற்றும் இது மலேசிய பங்குச் சந்தையின் (FTSE 100 Index) 100 குறியீட்டின் ஓர் அங்கமாகும். இது ஆங்காங் பங்குச் சந்தை, இந்தியாவின் தேசிய பங்குச் சந்தை மற்றும் ஓடிசி சந்தைகள் குழு (OTC Markets Group) ஆகியவற்றில் இரண்டாம் நிலை பட்டியல்களைக் கொண்டுள்ளது.[2]
துமாசெக் ஓல்டிங்ஸ் நிறுவனம்
[தொகு]இதன் மிகப்பெரிய பங்குதாரர் சிங்கப்பூர் அரசுக்கு சொந்தமான துமாசெக் ஓல்டிங்ஸ் நிறுவனம் ஆகும்.[3][2]
இஸ்டாண்டர்ட் சார்ட்டர்டின் குழுமத் தலைவர் ஜோஸ் வினால்ஸ் ஆவார். பில் விண்டர்ஸ் குழுமத்தின் தற்போதைய தலைமை நிர்வாகி ஆவார்.
பெயர் சொற்பிறப்பியல்
[தொகு]இஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு என்ற பெயர் 1969-இல் இணைக்கப்பட்ட இரண்டு வங்கிகளின் பெயர்களிலிருந்து வந்தது: இந்தியா, ஆத்திரேலியா மற்றும் சீனாவின் பட்டய வங்கி; மற்றும் பிரித்தானிய தென்னாப்பிரிக்காவின் இஸ்டாண்டர்ட் வங்கி ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lin, Liza (25 November 2008). "Temasek Raises Bet on Financial Stocks With StanChart". Bloomberg L.P.. https://www.bloomberg.com/apps/news?pid=20601087&sid=aoXuC8OxIdAs&refer=home.
- 1 2 "Standard Chartered stake sold". BBC News. 28 March 2006. https://news.bbc.co.uk/2/hi/business/4852510.stm.
- ↑ "The Tan Sri Khoo Teck Puat Estate Agrees to Sell Shares in Standard Chartered to Temasek". prnewswire. 27 March 2006. Retrieved 8 January 2012.