ஸ்க்ரீமர் பறவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கிரீமர் பறவை[தொகு]

நீர்க்கரை பறவை இனங்களில் ஒன்று ஸ்க்ரீமர் பறவை . இந்த அலறலொலிப் பறவைகள் , தாரா  வாத்து ,அன்னப்பறவை வகைகளை சேர்ந்தது . தென் அமெரிக்காவில் காணப்படும் இப்பறவையின் கத்தல் அலறுவது போல் இருப்பதால் இப்பெயர் வந்தது . 

இவைகளின் இறக்கைகளின் முன் புறத்தில் முள் போல் இரண்டு புடைப்புகள் துருத்திக்கொண்டிருக்கும் . குட்டையான வளைந்த அலகுகள் உடையவை . இவைகளின் உணவு , நீர் தாவரங்கள் . இவைகளின் உடலின் அடிப்பகுதியில் காற்றுப்பை இருப்பதால் நீரில் நன்றாக மிதந்து செல்லும் . இவைகளுக்கு விரலிடை சவ்வுப்படலம் கிடையாது . இவைகளில் கொம்புடைய ஒரு இனமும் உள்ளது . தலையின் முன் பகுதியில் 15 சென்டிமீட்டர் நீளத்திற்கு முன்புறமாக வளைந்த முள் போல் கொம்புடையது .

[1]

  1. மேற்கோள் : பறவைகள் - என் . ஸ்ரீனிவாசன் , வித்யா பப்ளிகேஷன்ஸ் , டிசம்பர் 2000
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்க்ரீமர்_பறவை&oldid=2361715" இருந்து மீள்விக்கப்பட்டது