ஸ்கொக் பரிசு
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஸ்கொக் பரிசு அல்லது ரோல்ஃப் ஸ்கொக் பரிசு (Rolf Schock Prize) , மெய்யியலாளரும், ஓவியருமான ரோல்ஃப் ஸ்கொக் என்பவர் இதற்கென விட்டுச்சென்ற சொத்துக்களின் வருமானத்தின் மூலம் நிறுவப்பட்டது. இது முதல் தவையாக சுவீடனில் உள்ள ஸ்டாக்ஹோம் நகரில் 1933 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது. பின்னர் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வருகிறது. பரிசுத்தொகை தற்போது 400,000 சுவீடிய குரோனா (59,000 அமெரிக்க டாலர்) ஆக உள்ளது. பரிசுகள் நான்கு வகைகளாக வழங்கப்படுவதுடன், மூன்று சுவீடிய ராயல் அக்கடமிகளைச் சேர்ந்த குழுக்கள் பரிசுக்குரியவர்களைத் தெரிவு செய்கின்றன.
- ஏரணமும், மெய்யியலும் (அறிவியல்களுக்கான ராயல் சுவீடிய அக்கடமியால் முடிவு செய்யப்படுகிறது)
- கணிதம் (அறிவியல்களுக்கான ராயல் சுவீடிய அக்கடமியால் முடிவு செய்யப்படுகிறது)
- காண்கலைகள் (கலைகளுக்கான ராயல் சுவீடிய அக்கடமியால் முடிவு செய்யப்படுகிறது)
- இசைக் கலைகள் (இசைக்கான ராயல் சுவீடிய அக்கடமியால் முடிவு செய்யப்படுகிறது)