ஸ்கைரஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்கைரஸ்
Σκύρος
சோரா
சோரா
அமைவிடம்

No coordinates given

Location within the region
அரசாண்மை
நாடு: கிரேக்கம்
நிர்வாக வலயம்: நடு கிரேக்கம்
மண்டல அலகு: யூபோயா
மக்கள்தொகை புள்ளிவிவரங்கள் (as of 2011)[1]
நகராட்சி
 - மக்கள்தொகை: 2,994
 - பரப்பளவு: 223.10 km2 (86 sq mi)
 - அடர்த்தி: 13 /km2 (35 /sq mi)
Other
நேர வலயம்: EET/EEST (UTC+2/3)
உயரம் (min-max): 0–792 m ­(0–2598 ft)
அஞ்சல் குறியீடு: 340 07
தொலைபேசி: 22x0
வாகன உரிமப் பட்டை: ΧΑ

ஸ்கைரஸ் (Skyros, கிரேக்கம்: Σκύρος‎, சில வரலாற்றுச் சூழல்களில் லத்தீன்மயமாக்கப்பட்டு Scyros ( பண்டைக் கிரேக்கம்Σκῦρος என அழைக்கப்படுகிறது) என்பது கிரேக்கத்தில் உள்ள ஒரு தீவு ஆகும். இது ஸ்போரேட்சின் தெற்கே, ஏஜியன் கடலில் உள்ள ஒரு தீவுக்கூட்டத்தைச் சேர்ந்தது. கிமு 2ஆம் ஆயிரமாண்டு மற்றும் சிறிது காலத்திற்குப் பிறகும், இந்த தீவு காந்தத் தீவு என்று அறியப்பட்டது. இங்கு காந்தங்கள் இருந்தன. பின்னர் இத்தீவானது பெலாஸ்கியா மற்றும் டோலோபியா என்றும் பின்னர் ஸ்கைரோஸ் என்றும் அழைக்கப்பட்டது. 209 சதுர கிலோமீட்டர்கள் (81 sq mi) பரப்பளவு கொண்ட இது ஸ்போரேட்சின் மிகப்பெரிய தீவாகும். இத்தீவானது சுமார் 3,000 மக்கள் தொகையைக் (2011 இல்) கொண்டுள்ளது. இது யூபோயாவின் பிராந்திய அலகின் ஒரு பகுதியாகும்.

எலெனிக் விமானப்படையின் முக்கிய தளமானது ஸ்கைரோசில் அமைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த தீவானது பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த இடமாக ஏஜியன் கடலின் நடுவில் அமைந்துள்ளது.

நகராட்சி[தொகு]

இந்த நகராட்சியானது ஸ்கைரோஸ் யூபோயாவின் பிராந்திய அலகின் ஒரு பகுதியாகும்.[2] இந்த நகராட்சியில் ஸ்கைரோஸ் தீவைத் தவிர, மக்கள் வசிக்கும் சிறிய தீவுகளான ஸ்கைரோபூலா மற்றும் சில மக்கள் வசிக்காத சிறிய தீவுகளை உள்ளடக்கியதாக உள்ளது. நகராட்சியின் மொத்த பரப்பளவு 223.10 சதுர கிலோமீட்டர்கள் (86 sq mi) [3]

நிலவியல்[தொகு]

தீவின் வடக்குப் பகுதி காடுள் நிறைந்ததாக உள்ளது. அதே சமயம் தெற்கே கொச்சிலா (792 மீ) என்று அழைக்கப்படும் மிக உயரமான மலையும், வெற்றுப் பாறைகள் கொண்ட பகுதியாக உள்ளது. தீவின் தலைநகரம் ஸ்கைரோஸ் (அல்லது, உள்நாட்டில், சோரா ) என்றும் அழைக்கப்படுகிறது. மேற்கு கடற்கரையில் உள்ள முக்கிய துறைமுகம் லினாரியா ஆகும். தீவில் ஒரு கோட்டையகம் உள்ளது. இது (13 முதல் 15 ஆம் நூற்றாண்டு வரை வெனிசின் ஆக்கிரமிப்பிலிருந்த காலத்தில் கட்டப்பட்டது.ஆங்கிலக் கவிஞர் ரூபர்ட் ப்ரூக்கின் கல்லறை, டிரிஸ் பூக்ஸ் துறைமுகத்திற்குச் செல்லும் சாலையில் ஆலிவ் தோப்பில் உள்ளது. தீவில் பல கடற்கரைகள் உள்ளன. இந்தத் தீவைச் சேர்ந்த தனித்த இனமான ஸ்கைரியன் குதிரைகளைக் கொண்ட குதிரைவண்டிகள் உள்ளன.

காலநிலை[தொகு]

ஸ்கைரோஸ் மிதமான குளிர்காலம் மற்றும் இனிமையான கோடைகாலத்தைக் கொண்டதாக மத்திய தரைக்கடல் காலநிலையைக் கொண்டுள்ளது.

தட்பவெப்ப நிலைத் தகவல், Skyros airport
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 12.3
(54.1)
12.7
(54.9)
14.1
(57.4)
17.7
(63.9)
22
(72)
26.3
(79.3)
27.9
(82.2)
27.6
(81.7)
24.7
(76.5)
20.8
(69.4)
17.2
(63)
13.9
(57)
19.77
(67.58)
தாழ் சராசரி °C (°F) 7.4
(45.3)
7.4
(45.3)
8.7
(47.7)
11.4
(52.5)
15
(59)
19.3
(66.7)
21.7
(71.1)
21.7
(71.1)
18.8
(65.8)
15.5
(59.9)
12
(54)
9.1
(48.4)
14
(57.2)
பொழிவு mm (inches) 70.6
(2.78)
55.3
(2.177)
49.9
(1.965)
24.3
(0.957)
15.4
(0.606)
6.5
(0.256)
5.9
(0.232)
8.4
(0.331)
19.4
(0.764)
36.7
(1.445)
54.6
(2.15)
81.1
(3.193)
428.1
(16.854)
ஆதாரம்: http://www.hnms.gr/emy/en/climatology/climatology_city?perifereia=Sterea&poli=Skyros (1955-2010 averages)

சொற்பிறப்பியல்[தொகு]

ஒரு தரவானது ஸ்கைரோஸ் என்ற பெயரை ஸ்கைரான் அல்லது ஸ்கைரோனுடன் தொடர்புபடுத்துகிறது, அதாவது "கற்குவியல்".[4] (இந்தத் தீவு அதன் அணியான கற்களுக்குப் புகழ் பெற்றது. )

குறிப்புகள்[தொகு]

  1. Detailed census results 2011 (கிரேக்கம்)
  2. "ΦΕΚ A 87/2010, Kallikratis reform law text". Government Gazette.
  3. "Population & housing census 2001 (incl. area and average elevation)" (PDF). National Statistical Service of Greece. Archived from the original (PDF) on 21 September 2015. பார்க்கப்பட்ட நாள் 11 November 2016.
  4. "History of Skyros Island". 2016. Archived from the original on 8 February 2021. பார்க்கப்பட்ட நாள் 9 November 2018. "Skiron" or "Skyron" means "stone debris".
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்கைரஸ்&oldid=3476556" இலிருந்து மீள்விக்கப்பட்டது