ஸ்கூபி-டூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஸ்கூபி-டூ (Scooby-Doo) என்பது ஒரு அமெரிக்க இயங்குபடத் தொடராகும். இது 1969 இல் இருந்து தற்போது வரை வெளியான பல்வேறு படத்தொடர்களின் கருப்பொருளாகும். முதலில் வெளியான ஸ்கூபி-டூ வேர் ஆர் யூ எனும் தொடர் ஹன்னா-பார்பரா இயக்ககத்திற்காக ஜோ ரூபி மற்றும் கென் ஸ்பியர்ஸ் என்போரால் உருவாக்கப்பட்டது. இதில் சித்தரிக்கப்படுவது - பிரெட் ஜோன்ஸ், டாப்னே ப்ளேக், வெல்மா டின்க்லீ, ஷேகி ராஜர்ஸ், மற்றும் இவர்களது ஸ்கூபி-டூ என்னும் பேசும் பழுப்பு கிரேட் டேன் நாய். இவர்கள் தங்கள் மர்ம-இயந்திரம் எனும் வாகனத்தில் மேற்கொள்ளும் சாகசங்கள் இந்த தொடரின் மத்திய அம்சமாகும்.

இத்தொடர் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரிடமும் வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து பல்வேறு இணைத்தொடர்கள் வெளியாகின. மேலும் சில கதாபாத்திரங்கள் சேர்க்கப்பட்டு பல ஆண்டுகளாக வெற்றிகரமாக வெளியான ஸ்கூபி-டூ பல பரிசுகளையும் விருதுகளையும் வென்றுள்ளது.

2013 இல் வெளியான கருத்துக்கணிப்பில் ஸ்கூபி-டூ சித்திரப்பட வரிசையில் 5ஆம் இடத்தைப் பிடித்தது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "TV Guide Magazine's 60 Greatest Cartoons of All Time". TV Guide. பார்க்கப்பட்ட நாள் October 27, 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்கூபி-டூ&oldid=3855320" இலிருந்து மீள்விக்கப்பட்டது