ஸ்கந்தகிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கலவர துர்கா எனவும் அழைக்கப்படும் ஸ்கந்தகிரி, பெங்களூரிலிருந்து தோராயமாக 50கி.மீ. தொலைவிலும் இந்திய மாநிலம் கர்நாடகாவில் உள்ள சிக்பல்லபூர் என்ற இடத்திலிருந்து 3 கி.மீ. தொலைவிலும் உள்ள ஒரு பழமைவாய்ந்த மலைக்கோட்டை[1] ஆகும். அது பெல்லாரி சாலை (NH-7 ஹைத்ராபாத்-பெங்களூர் நெடுஞ்சாலை)யிலிருந்து சற்று தொலைவிலும் நந்தி ஹில்ஸ்(குன்றுகள்), முட்டென்னஹல்லி, மற்றும் கனிவெனராயனபுரா ஆகியவற்றை விட உயரத்திலும் அமைந்துள்ளது. மலை உச்சி 1350 மீட்டர் உயரம் கொண்டது. அது "வீரதீரச் செயல்புரிவோரின் சொர்க்கம்" எனப்படுகிறது. அழகான இரவுநேர மலையேற்றம், மலை உச்சியில் முகாமிடுதல், மெய்மறக்கச் செய்யும் அளவு அழகான சூரியோதயம் மற்றும் அமைதியான, கடல்போல் தோற்றமளிக்கும் மேகங்கள் ஆகியவை அதன் சிறப்பம்சங்களாகும்.

ஸ்கந்தமலை பற்றி[தொகு]

இந்த மலையின் அடிவாரத்தில் உள்ள கிராமம் கந்தவரா ஹல்லி எனப்படுகிறது. அக்குன்று கந்தவரஹல்லி பெட்டா என்றழைக்கப்படுகிறது. (ஸ்கந்தகிரி எனவும் கலவரஹல்லி பெட்டா எனவும் அழைக்கப்படுகிறது) அது கர்நாடகாவில் சிக்கபல்லபுரா மாவட்டத்தில் உள்ளது.

ஸ்கந்தகிரி நந்தி குன்றுகளில் உள்ள மலைக் கோட்டைகளில் ஒன்றாகும். திப்பு சுல்தானின் கோட்டையின் பாழடைந்த சுவர்களை இன்றும் இங்கு காணலாம். இது மிக உறுதியானதாகவும் சுயதேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதாகவும் கட்டப்பட்டது. இது பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் திப்பு சுல்தானால் கட்டப்பட்டது. பிரிட்டிஷாரை எதிர்த்து போர்புரிந்தபோது, திப்பு இக்கோட்டையை இராணுவத்தளமாகப் பயன்படுத்தினார். 1791 ஆம் ஆண்டு அக்டோபர் 19 அன்று அது பிரிட்டிஷ் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது. பின்பு அது அழிக்கப்பட்டது. மூன்றாம் ஆங்கிலோ-மைசூர் போரை முடிவுக்கு கொண்டுவந்த 1792 ஆம் ஆண்டின் அமைதி ஒப்பந்தம் வரை அது பிரிட்டிஷார் வசம் இருந்தது.

மலையில் 2 குகைகள் உள்ளன. ஒன்று அடிவாரத்திலிருந்து தொடங்குகிறது. மேலும் உள்ளூர்வாசிகளின் கூற்றுப்படி, அது கோவிலுக்கும் உச்சியில் உள்ள கோட்டைக்கும் செல்கிறது. மற்றொன்று இடையில் ஏதோவொரு இடத்தில் சுமார் 30 அடி அளவே உள்ளது. இரண்டுமே, குறிப்பாக முதலாவது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. உள்ளூர்வாசிகள், குகைகளில் மலைப் பாம்புகள் இருப்பதாகவும் குகைகளில் திரியும் அவர்களது ஆடுகளை அவைகள் விழுங்கியுள்ளன எனவும் கூறுகின்றனர். அக்குகையில் 6 சமாதிகள் இருப்பதாகக் கருதப்படுகிறது. எனவே அந்த இடம் புனிதமானதாகக் கருதப்படுகிறது.

உயரம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1350 மீட்டர் உயரத்தில் உள்ளது.
தொலைவு பெங்களூரிலிருந்து 70 கி.மீ.
மிக அருகில் உள்ள நகரம்/மருத்துவ உதவி சிக்பல்லபூர், 5 கி.மீ.
மிக அருகில் உள்ள விமான நிலையம்/ இரயில் நிலையம் தேவனஹல்லி(பெங்களூரு பன்னாட்டு விமான நிலையம்)
அச்சுத் தூரங்கள் 13°25′3″வ 77°40′58″கி

இவ்விடத்திற்குச் செல்ல[தொகு]

ஸ்கந்தகிரிக்கு செல்ல இரண்டு வழிகள் உள்ளன:

  • NH-7 இலிருந்து, நந்தி குன்றுகளை நோக்கி திரும்புங்கள். நந்தி குன்றுகளின் அடிவாரத்தில் வலப் பக்கம் திரும்பி முட்டெனஹல்லி(பாரத் ரத்னாவின் பிறப்பிடம்) வழியாக கலவரா கிராமத்திற்கு செல்லலாம்
  • சிக்பல்லபுராவிலிருந்து நேராக கலவரா கிராமத்திற்குச் செல்லலாம்

திசைகள்:

  • பெல்லாரி ரோட் என பிரபலமாக அறியப்படும் பெங்களூர் பன்னாட்டு விமான நிலைய வழியில் சென்றால், பெ.ப.விமான நிலையத்தைக் (BIA) கடந்தபின், நீங்கள் சிக்கபல்லபுரா சாலையில் இருப்பீர்கள். உங்களது இடப்பக்கத்தில் ஒரு சிலையைக் காணும்வரை அதே சாலையில் செல்லவேண்டும். இது ஒரு சிறிய அழிந்துபோன சிலை என்பதால், சிலையைக் கவனிக்காமல் போகலாம் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். இடது திருப்பத்தின் பக்கத்திலேயே ஒரு சிறிய கணபதி ஆலயம் இருக்கும்.
  • இந்த இடத்தில் இடது பக்கம் திரும்பி, சிறிது தூரம் சென்று, சிட்டி முனிசிபல் கவுன்சில் உள்ள இடத்தில் வலது பக்கம் திரும்பவேண்டும். இவ்வழி, ஸ்கந்தகிரிக்கு மூலாதாரமான பாப்பக்னி மடத்திற்குச் செல்லும்.

கலவரா கிராமத்தில் ஓங்கார ஜ்யோதி ஆஸ்ரமா / பாபக்னி மடம்(13°25′ 26.6″வ 77°41′28″கி) எங்குள்ளது எனக் கேட்டு செல்லலாம். வண்டிகள் நிறுத்துமிடமான சிவன் கோவில் குன்றின் அடிவாரத்திற்கு அருகில் உள்ளது.

  • நந்தியிலிருந்து கலவரா, கலவராவிலிருந்து பாபக்னி மடம் செல்ல மொத்தம் 6 கி.மீ. தூரமாகும்.
  • சிக்கபல்லபூரிலிருந்து பாபக்னி மடத்திற்கு 3 கி.மீ. தூரம் உள்ளது.

கடினமான மலையேற்றப் பயணம்[தொகு]

மலையேற்றப் பயண அளவு : சாதாரணமானது

தண்ணீர், முதலுதவிப் பெட்டி, தின்பண்டங்கள் அல்லது கொஞ்சம் உணவு ஆகியவற்றை எடுத்துச் செல்லவேண்டும். உள்ளூர்வாசிகள் மலை உச்சியில் முகாமிட்டு, சுவையான ஆம்லெட்டுகள் (முட்டை), குளிர்பானங்கள், தேனீர் மற்றும் வேறு உணவுப்பொருள்களை விற்கின்றனர். நீங்கள் தீமுகாம் நடத்த விரும்பினால், அதற்கான விறகினையும் அவர்கள் சேகரித்துத் தருகிறார்கள். மேலும் அந்த இடத்தைப்பற்றி விளக்கிக்கூறும் வழிகாட்டிகளாகவும் பணியாற்றுகிறார்கள்.

இருட்டில் மலையேறுதல் என்பது பொதுவானதாக உள்ளது. அழகான பௌர்ணமி இரவில் செல்வது மகிழ்ச்சியூட்டுவதாகும். மலையேறுபவர்கள் மதியம் சுமார் 2:00 மணிக்கு பயணத்தைத் தொடங்கி, சூரியோதயத்தைக் காண மாலை 5:30 மணிக்கு உச்சியை அடைய திட்டமிடுவார்கள். பாதுகாப்பு காரணமாக சில நேரங்களில் இரவு நேர மலையேற்றம் தடுக்கப்படுகிறது. மலையேற்றத்திற்கு முன்னதாகவே இரவு நேர மலையேற்றம் அனுமதிக்கப்படுகிறதா என உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும்.

மலை அகன்றும் உயரமாகவும் இருப்பதால் மலையேற்றப் பயணம் சற்று கடினமானதாகும். மலையேற்ற பயணம் மலையடிவாரத்தில் உள்ள பாபக்னி கோவிலில் இருந்து தொடங்குகிறது. கடினமான மலையேற்றப் பயண நேரம் முழுக்க, கோட்டை பார்க்கும்படி உள்ளது. குழப்பமுள்ள அடர்ந்த புதர்கள் வழியாக, மிகச்சிறந்த செங்குத்தான இந்த மலையேற்றம் மிகவும் வியப்பூட்டுவதாக உள்ளது. ஸ்கந்தகிரி ஒரு மறைப்பான இடமாக உள்ளது. நீங்கள் கோட்டைச் சுவரை அடைந்தவுடன் மலை உச்சிக்கு சென்றதாகத் திருப்தியடையுங்கள், நீங்கள் கோட்டையின் மற்றொரு வளையத்தை காண்பீர்கள். அங்கு சென்றவுடன், வெற்றிகொள்ள மற்றொரு அழகான கோட்டைச் சுவரைக் காண்பீர்கள். இது போன்ற, வரிசையான ஆறு கல் சுவர்கள், மலை உச்சியில் கவனிப்பாரற்றுக் கிடக்கும் ஒரு புராதனக் கோவிலைப் பாதுகாக்கின்றன.

மக்கள் அடிக்கடி பார்வையிடுவதால், கர்நாடக காட்டுத் துறை சமீப காலமாக ஸ்கந்தகிரியில் கவனம் செலுத்தி, அங்கு வரும் எல்லா வண்டிகளையும் நிறுத்துவதற்கு ஒரு நிறுத்துமிடத்தை ஏற்படுத்தியுள்ளது. மலையை பார்க்க வரும் ஒவ்வொருவரிடமும் நுழைவுக்கட்டணமாக ரூ.15 வசூலிக்கப்படுகிறது. காயம்படுவதைத் தவிர்க்க அரசால் பாதுகாப்பு குறியீடுகள் வைக்கப்பட்டுள்ளன. மலையில் மேலும் முன்னேற்ற நடவடிக்கைகள் எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்கள் ஒரு நிலவியல் வல்லுநராக இருந்து, பயணத்தின்போது சில ஆராய்ச்சி மேற்கொள்ள விரும்பினால், ஒரு கோவிலின் அடிவாரத்திற்கு முன்னதாக 100 மீ. தூரத்தில் பழைய கற்களாலான ஒரு சில இந்து மத தெய்வச் சிலைகள் உள்ளன. 86 வயதுள்ள ஒரு கிராமவாசியைக் கேட்டபோது, சிற்பங்கள் 200-500 ஆண்டுகள் பழமை வாய்ந்தவையாக இருக்கலாம் என்கிறார். அந்த வயோதிகர் கூற்றுப்படி, இச்சிற்பங்கள் மிகப் பழைய கோவிலான சௌதேஷ்வரி தெய்வக் கோவிலின் எஞ்சியுள்ள சிற்பங்களாகும். கிராமத்தார் தற்காலக் கோவில் ஒன்றை சாலையில் கட்டியுள்ளனர்.

சுற்றியுள்ள 360 டிகிரி பார்வையில் மெய்மறக்கச் செய்யும் காட்சிகளைப் படம்பிடிக்க உங்களது படப்பிடிப்புக் கருவியை எடுத்துச் செல்ல மறந்துவிடாதீர்கள். அங்கிருந்து நீங்கள் நந்தி குன்றுகளையும் பார்க்க முடியும்.

குறிப்புதவிகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்கந்தகிரி&oldid=3199730" இருந்து மீள்விக்கப்பட்டது