ஸ்
ஸ் | |
---|---|
தமிழில் பயன்படுத்தப்படும் கிரந்த எழுத்துகள் | |
ஸ் (s) என்பது கிரந்த எழுத்து முறையின் எழுத்துகளில் ஒன்று. தமிழ் மொழியில் ஆரம்பத்தில் மணிப்பிரவாள நடையில் எழுதுவதற்கு இவ்வெழுத்துப் பயன்படுத்தப்பட்டு, இன்று பிறமொழிச் சொற்களை எழுதுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றது.[1]
ஸகர உயிர்மெய்கள்
[தொகு]ஸகர மெய், 12 உயிரெழுத்துகளுடனும் சேர்ந்து உருவாகும் உயிர்மெய் எழுத்துகளையும் அவற்றின் பெயர்களையும் கீழுள்ள வரிசைப் பட்டியல் காட்டுகின்றது.
சேர்க்கை | உயிர்மெய்கள் | |
---|---|---|
வரிவடிவம் | பெயர் | |
ஸ் + அ | ஸ | ஸானா |
ஸ் + ஆ | ஸா | ஸாவன்னா |
ஸ் + இ | ஸி | ஸீனா |
ஸ் + ஈ | ஸீ | ஸீயன்னா |
ஸ் + உ | ஸு | ஸூனா |
ஸ் + ஊ | ஸூ | ஸூவன்னா |
ஸ் + எ | ஸெ | ஸேனா |
ஸ் + ஏ | ஸே | ஸேயன்னா |
ஸ் + ஐ | ஸை | ஸையன்னா |
ஸ் + ஒ | ஸொ | ஸோனா |
ஸ் + ஓ | ஸோ | ஸோவன்னா |
ஸ் + ஔ | ஸௌ | ஸௌவன்னா |
பயன்பாடு
[தொகு]மணிப்பிரவாள நடையில் எழுதும்போதும் பிற மொழிச் சொற்களை எழுதும்போதும் ஸகர உயிர்மெய்கள் பயன்படுத்தப்படுவதுண்டு. எடுத்துக்காட்டுகளாக, ஸரஸ்வதி, ஸாமவேதம், ஸிம்பாப்வே, ஸீமெய், ஸுசன, ஸூஜாஹூலி, ஸென்டர், ஸே, ஸைபுல், ஸொப்ட், ஸோங், ஸௌ, பஸ் முதலிய சொற்களைக் குறிப்பிடலாம்.
கிரந்தக் கலப்பற்ற தமிழ்
[தொகு]ஸகர உயிர்மெய்கள் வரும் சொற்களைத் தனித்தமிழ் நடையில் எழுதும்போது ஸகரத்தைச் சகரமாக எழுதுவது பெருவழக்கு. மொழிக்கு முதலில் ஸகர உயிர்மெய் வரும்போது தனித்தமிழ் நடையில் அதனைச் சகர உயிர்மெய்யாக எழுத வேண்டும் (எடுத்துக்காட்டுகள்: ஸரஸ்வதி-சரசுவதி, ஸிம்பாப்வே-சிம்பாப்வே).
சொல்லொன்றின் இடையில் அல்லது இறுதியில் ஸகர உயிர்மெய் வந்தால் அதனைச் சகரமாக எழுத வேண்டும் (எடுத்துக்காட்டு: நாஸா-நாசா). சில இடங்களில் தகரமாக எழுத வேண்டும் (எடுத்துக்காட்டு: வாசனை-வாதனை).
மொழிக்கு முதலில் ஸ் வந்தால் முன்னே ஓர் உயிரெழுத்தைச் சேர்த்து (அகரம், இகரம், உகரம், எகரம்) ஸ் எழுத்தைச் சு எழுத்தாக்கி எழுத வேண்டும் (எடுத்துக்காட்டுகள்: ஸ்பானியா-எசுப்பானியா, ஸ்க்கைப்-இசுக்கைப்பு). சில இடங்களில் சி எழுத்தாக்கியும் எழுதப்படும் (எடுத்துக்காட்டு: ஸ்நேகம்-சிநேகம்). முன்னே உயிரெழுத்துச் சேர்க்க வேண்டிய தேவையின்றியும் சில இடங்களில் வருவதுண்டு (எடுத்துக்காட்டு: ஸ்வாமி-சுவாமி). இலங்கை வழக்கின்படி ஸ் எழுத்தை நீக்கி விடுவதுமுண்டு (எடுத்துக்காட்டு: ஸ்டர்ம்-தேம்). இவை தவிர வேறு விதங்களிலும் திரிபு இடம்பெறுவதுண்டு (எடுத்துக்காட்டு: ஸ்வாமி-சாமி). சொல்லின் இடையில் ஸ் வந்தால் அதனைச் சு, சி ஆகியவற்றால் குறிப்பிடுவதுண்டு (எடுத்துக்காட்டு: அரிஸ்ட்டாட்டில்-அரிசுட்டாட்டில், அரிசிட்டாட்டில்). சில வேளைகளில் அதற்குப் பின்வரும் எழுத்தின் மெய்யெழுத்தை ஸ் எழுத்திற்குப் பதிலாக இடுவதுமுண்டு (எடுத்துக்காட்டு: கிறி்ஸ்தவம்-கிறித்தவம்). சில இடங்களில் ஸ் ஆனது ற் ஆகத் திரிவதுமுண்டு (எடுத்துக்காட்டு: சமஸ்கிருதம்-சமற்கிருதம்).[3] சொல்லொன்றின் இறுதியில் ஸ் வருமாயிருந்தால் அதனைச் சு என்று எழுத வேண்டும் (எடுத்துக்காட்டுகள்: விண்டோஸ்-விண்டோசு, பஸ்-வசு).
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 6.5 வரலாற்று நோக்கில் எழுத்துச் சீர்திருத்தம்
- ↑ "தமிழ் எழுத்துக்கள் + வடமொழி எழுத்துகள்". Archived from the original on 2012-05-27. பார்க்கப்பட்ட நாள் 2012-04-22.
- ↑ எழுத்தியல்