ஸேடி ஸ்மித்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸேடி ஸ்மித்
ஸேடி ஸ்மித்
ஸேடி ஸ்மித்
பிறப்புஸேடி ஸ்மித்
25 அக்டோபர் 1975 (1975-10-25) (அகவை 47)
இலண்டன் இங்கிலாந்து
தொழில்
 • எழுத்தாளர்
 • பேராசிரியர்
மொழிஆங்கிலம்
கல்வி நிலையம்கிங்ஸ் கல்லூரி கேம்பிரிட்ஜ்
காலம்2000–தற்சமயம் வரை
துணைவர்நிக் லார்ட்
பிள்ளைகள்2
இணையதளம்
www.zadiesmith.com

ஸேடி ஸ்மித் (Zadie Smith)(பிறப்பு: 1975) என்பவர் ஒரு ஆங்கில பெண் எழுத்தாளர் ஆவார். இவரது 24ம் வயதில் வெளிவந்த இவரது முதல் நாவலான வைட் டீத்' (White Teeth, 2000) பரவலான வாசக கவனத்தையும், விமர்சகர்களின் பாராட்டையும், சல்மான் ருஷ்டி போன்ற மூத்த எழுத்தாளர்களின் வரவேற்பையும் பெற்றது. அதிலிருந்து புதினங்கள், சிறுகதைகள், புத்தக விமர்சனங்கள், புனைவு கட்டுரைகள் என தொடர்ந்து எழுதி வருகிறார். இவரது மூன்றாம் புதினமான 'ஆன் பியூட்டி' (On Beauty, 2005) புக்கர் பரிசு இறுதிப் பட்டியலுக்கு தேர்வானது. பல கலாச்சாரங்கள் புழங்கும் தொட்டிலான லண்டன் மாநகரத்தை தொடர்ந்து தன்னுடைய புனைவுகளின் களமாக கொள்ளும் இவர், ஜமைக்காவைச் சேர்ந்த தாய்க்கும், இங்கிலாந்து தந்தைக்கும் லண்டனில் பிறந்தவர். கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்றவர். தற்போது அமெரிக்காவில் உள்ள நியூயார்க் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணியாற்றுகிறார்.[1] இவரது சமீபத்திய புதினம் ஸ்விங் டைம் (Swing Time, 2006) என்பதாகும்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

ஸேடி ஸ்மித் 1975 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் திகதி வடமேற்கு லண்டனின் பெருநகரமான ப்ரெண்டில் உள்ள வில்லெஸ்டனில் பிறந்தார்.  தனது 14 வது வயதில் பெயரை ஸேடி என்று மாற்றினார்.[2] இவரது தாயார் யுவோன் பெய்லி ஜமைக்காவை சேர்ந்தவர் மற்றும் இவரது தந்தை ஹார்வி ஸ்மித் ஆங்கிலேயர் ஆவார்.[3] ஸேடி இளம் வயதாக இருக்கும் போது அவரது பெற்றோர் விவாகரத்து செய்தனர். பருவ வயதில் இசை நாடகத்துறையில் பணியை முன்னெடுத்தார். பல்கலைக்கழகத்தில் கற்கும் போதே ஜாஸ் பாடகராக திகழ்ந்தார். அவரது பத்திரிகையாளராகுவதே அவரது இலட்சியம்  இருந்தது. இலக்கியத்தின் மீதும் மிகுந்த ஆர்வமுடையவராக இருந்தார்.

கல்வி[தொகு]

ஸேடி உள்ளூர் மாநில பள்ளிகளான மலோரிஸ் ஜூனியர் பள்ளி மற்றும் ஹாம்ப்ஸ்டெட் பள்ளி மற்றும் கேம்பிரிட்ஜ் கிங்ஸ் கல்லூரி ஆகியவற்றில் ஆங்கில இலக்கியம் பயின்றார். கேம்பிரிட்ஜில் பயிலும் போது தி மேஸ் அந்தலாஜி என்ற தொகுப்பில் பல சிறுகதைகளை வெளியிட்டார். இதனால் ஈர்க்கப்பட்ட வெளியீட்டாளர் முதல் புதினத்திற்கான ஒப்பந்தத்தை வழங்கினார்.[4]

பணி[தொகு]

1997 ஆம் ஆண்டில் ஸேடி ஸ்மித்தின் முதல் புதினமாகிய வைட் டீத் வெளியீட்டு உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டு கையெழுத்துப் பிரதியின் அடிப்படையில் உரிமைகளுக்கான ஏலத்தில் ஹமீஷ் ஹாமில்டன் வென்றார். 2000 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட வைட்டிங் டீத் புதினம் வணிக வெற்றியை பெற்றது. மேலும் சர்வதேச அளவில் பாராட்டப்பட்டு டைட் பிளாக் நினைவு பரிசு, பெட்டி டிராஸ்க் விருது ஆகிய விருதுகளை வென்றது. 2002 ஆம் ஆண்டு இந்த புதினம் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக தழுவிக்கொள்ளப்பட்டது.[5] 2002 இல் இவரது இரண்டாவது புதினமாகிய தி ஆட்டோகிராப் மேன் வெளியிடப்பட்டது. இப்புதினம் வணிக ரீதியாக வெற்றிப் பெற்றாலும் விமர்சக ரீதியில் பெரிதும் பாராட்டப்படவில்லை. தி ஆட்டோகிராப் மேன் வெளியீட்டிற்குப் பிறகு அமெரிக்கா ஹார்வார்ட பல்கலைக்கழகத்திற்கு சென்றார்.[6] வெளியிடப்படாத கட்டுரைக புத்தகமான தி மோரலிட்டி ஆஃப் தி நவல் என்ற புத்தக பணியை தொடர்ந்தார். இந்த புத்தகத்தின் சில பகுதிகள் 2009 நவம்பரில் வெளியிடப்பட்ட சேஞ்சிங் மை மைண்ட் என்ற கட்டுரைத் தொகுப்பில் காணப்படுகின்றன. 2005 ஆம் ஆண்டு செப்டம்பரில் ஆன் பியூட்டி என்ற அவரது மூன்றாவது புதினத்தை வெளியிடப்பட்டது. இந்த புதினம் ஆட்டோகிராப் மேனை புதினத்தை விட அதிக பாராட்டைப் பெற்றது. மேலும் மேன் புக்கர் பரிசிற்காக பட்டியலிடப்பட்டது.[7] அதே ஆண்டின் பிற்பகுதியில் மார்தா அண்ட ஹன்வெல் என்ற புத்தகத்தை வெளியிட்டார். 2008 திசம்பரில் பிபிசி ரேடியோ 4 டுடே நிகழ்ச்சியின் விருந்தினராக கலந்து கொண்டார்.[8] கொலம்பியா யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸில் புனை கதை கற்பித்தபின் 2010 ஆம் ஆண்டில் நியுயார்க் பல்கலைக்கழகத்தில் புனைக்கதை பேராசிரியராக சேர்ந்தார்.[9]2012 ஆம் ஆண்டு என்.டபிள்யூ6 என்ற இவரது புதினம் வெளியிடப்பட்டது. என்.டபிள்யூ6 தழுவி பிபிசி தொலைக்காட்சி திரைப்படம் எடுக்கப்பட்டது. 2016 நவம்பர் 14 இல் பிபிசி டூவில் ஒளிபரப்பப்பட்டது.[10]

2015 ஆம் ஆண்டில் பிரெஞ்சு திரைப்படத் தயாரிப்பாளர்  கிளாரி டெனிஸின் இயக்கத்தில் அறிவியல் புனைகதைத் திரைப்படத்திற்கான திரைக்கதையை ஸேடி தனது கணவர் நிக் லெயருடன் இணைந்து எழுதுவதாக அறிவிக்கப்பட்டது.[11]2016 ஆம் ஆண்டு நவம்பரில் ஸ்மித்தின் ஐந்தாவது புதினமாகிய ஸ்விங் டைம் வெளியிடப்பட்டது.[12]இது 2017 ஆம் ஆண்டில் மேன் புக்கர் பரிசிற்கு பட்டியலிடப்பட்டது.  2011 ஆண்டின் மார்ச் மற்றும் அக்டோபரிற்கு இடையில் ஹார்பர்ஸ் சஞ்சிகையின் மாதாந்திர புத்தக விமர்சகராக பணியாற்றினார்.[13]நியூயார்க் ரிவியூ ஆப் புக்ஸில் அடிக்கடி பங்களிப்புச் செய்தார்.[14] 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 8 இல் ஸ்மித்தின் முதல் சிறுகதைத் தொகுப்பு கிராண்ட் யூனியன் வெளியிடப்பட்டது.

விருதுகள்[தொகு]

ஸேடி ஸ்மித் 2002 ஆம் ஆண்டு ராயல் சொசைட்டி ஆப் லிட்டரிச்சரின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004 ஆம் ஆண்டு பிபிசி கலாச்சார ஆராய்ச்சியாளர்களின் கருத்துக் கணிப்பில் பிரித்தானிய கலாச்சாரத்தில் மிகவும் செல்வாக்கு மிக்க முதல் இருபது நபர்களில் இடம் பிடித்தார்.[15] 2003, 2013 ஆண்டிகளில் கிராண்டாவின் 20 சிறந்த இளம் ஆசிரியர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டார்.[16] 2010 ஆம் ஆண்டில் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் படைப்பு எழுத்து திட்டத்தில் பணிபுரிந்தார்.[17] புனைக்கதைக்கான ஆரஞ்சு பரிசு மற்றும் 2006 ஆம் ஆண்டில் அனிஸ்பீல்ட்- வுல்வ் புக் விருதுகளை பெற்றார்.[18][19]டைம் பத்திரிகையில் இவரது புதினமாகிய வைட் டீத் 1923 முதல் 2005 வரையிலான சிறந்த ஆங்கில புதினங்களின் பட்டியலில் இடம்பெற்றது.

 • வைட் டீத் - விட்பிரட் முதல் புதின விருது, கார்டியன் முதல் புத்தக விருது, ஜேம்ஸ் டைட் கருப்பு நினைவு பரிசு, காமன்வெல்த் எழுத்தாளர்களின் முதல் புத்தக விருது ஆகியவற்றை வென்றது.
 • தி ஆட்டோகிராப் மேன் - ஜூவிஸ் கார்டர்லி விங்கேட் இலக்கிய பரிசு
 • ஒன் பியூட்டி - காமன்வெல்த் எழுத்தாளர்களின் சிறந்த புத்தக விருது (யூரேசியா பிரிவு), புனைகதைக்கான ஆரஞ்சு பரிசையும் வென்றது. மேன் புக்கர் பரிசிற்கு பட்டியலிடப்பட்டது.
 • ஸ்விங் டைம் - மேன் புக்கர் பரிசிற்கு இறுதி பட்டியலுக்கு தேர்வானது.[20]
 • என்.டபிள்யூ - ராயல் சொசைட்டி ஆப் லிட்டரிச்சர் ஒண்டாட்சி பரிசு, புனைக்கதைக்கான பெண்கள் பரிசு
 • 2003, 2013 - கிரண்டாவின் சிறந்த பிரித்தானிய நாவலாசிரியர்
 • 2016 - வெல்ட் லிடெரடூர்பிரைஸ்[21]
 • 2017 - லாங்ஸ்டன் ஹியூஸ் பதக்கம்[22]
 • 2019 - முடிவிலி விருது

குறிப்புகள்[தொகு]

 1. ""Zadie Smith to Join NYU Creative Writing Faculty"". https://www.nyu.edu/about/news-publications/news/2009/june/zadie_smith_to_join_nyu.html. 
 2. "The return of zadie smith". https://www.telegraph.co.uk/culture/books/9495181/The-return-of-Zadie-Smith.html. 
 3. ""Writers: Zadie Smith"". http://literature.britishcouncil.org/zadie-smith. 
 4. "Wayback Machine". 2011-05-19. http://www.apwatt.co.uk/. 
 5. "Profile: learning curve". http://books.guardian.co.uk/review/story/0,12084,1560999,00.html. 
 6. "2002–2003 Radcliffe Institute Fellows". http://www.radcliffe.edu/fellowships/fellows_1004.aspx. 
 7. "Paperback Row". https://query.nytimes.com/gst/fullpage.html?res=9C03EEDD1731F934A2575AC0A9609C8B63&ref=bookreviews. 
 8. "Guest editor: zadie smith". http://news.bbc.co.uk/today/hi/today/newsid_7801000/7801054.stm. 
 9. "Zadie Smith Joins NYU Creative Writing Faculty" (in en). 2009-07-24. https://www.pw.org/content/zadie_smith_joins_nyu_creative_writing_faculty. 
 10. "NW star Nikki Amuka-Bird: 'Zadie is purposefully challenging the viewer". https://www.theguardian.com/tv-and-radio/2016/nov/14/nw-star-nikki-amuka-bird-zadie-smith-is-purposefully-challenging-the-viewer-london. 
 11. Andreas Wiseman2015-08-26T11:44:00+01:00. "Robert Pattinson to star in Claire Denis sci-fi" (in en). https://www.screendaily.com/news/robert-pattinson-to-star-in-claire-denis-sci-fi/5092092.article. 
 12. Nov 4, Katie Pearce / Published; 2015 (2015-11-04). "Author Zadie Smith shares bits of her unpublished fourth novel, 'Swing, Time'" (in en). https://hub.jhu.edu/2015/11/04/zadie-smith-new-book/. 
 13. "Zadie Smith Takes Over New Books Column for Harper’s Magazine" (in en). 2010-09-20. https://observer.com/2010/09/zadie-smith-takes-over-new-books-column-for-emharpers-magazineem/. 
 14. "Zadie Smith" (in en-US). http://www.nybooks.com/contributors/zadie-smith/. 
 15. "iPod designers leads culture list". http://news.bbc.co.uk/1/hi/entertainment/3481599.stm. 
 16. "Best of young British novelists 2003" (in en-US). https://granta.com/archive-access/. 
 17. "Creative Writing Program". http://as.nyu.edu/cwp.html. 
 18. "BAILEYS Women's Prize for Fiction » 2006". 2015-03-03. http://www.womensprizeforfiction.co.uk/2006. 
 19. "On Beauty" (in en-US). http://www.anisfield-wolf.org/books/on-beauty/. 
 20. "The Booker Prize 2019 | The Booker Prizes". https://thebookerprizes.com/fiction. 
 21. "Welt literturpreis 2016 fuer zadie smith". https://www.welt.de/kultur/literarischewelt/article158607455/Welt-Literaturpreis-2016-fuer-Zadie-Smith.html. 
 22. "Zadie Smith wins CCNY’s Langston Hughes Medal" (in en). http://www1.cuny.edu/mu/forum/2017/08/31/zadie-smith-wins-ccnys-langston-hughes-medal/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸேடி_ஸ்மித்&oldid=3573646" இருந்து மீள்விக்கப்பட்டது