ஷோபா சென்
ஷோபா சென் | |
---|---|
நபன்னாவில் ஷோபா சென் | |
பிறப்பு | ஃபரித்பூர், வங்காளம், பிரித்தானியாவின் இந்தியா (தற்போதைய பங்களாதேஷ்) death_date=13 August 2017 (aged 93) | 17 செப்டம்பர் 1923
இறப்பு | கொல்கத்தா, வங்காளம், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பணி | நடிகர் |
வாழ்க்கைத் துணை | உத்பல் தத் |
ஷோபா சென் (17 செப்டம்பர் 1923 - 13 ஆகஸ்ட் 2017) ( சோவா சென் என்றும் அழைக்கப்படுகிறார்) பெங்காலி நாடக மற்றும் திரைப்பட நடிகையாவார்.[1][2][3]
தொழில்
[தொகு]ஷோபா சென் பெத்தூன் கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகு, கணநாட்ய சங்ஸ்தாவில் சேர்ந்தார். அங்கு நபன்னா என்ற முக்கிய பெண் பாத்திரத்தில் நடித்தார். அவர் 1953-54 இல் லிட்டில் தியேட்டர் குழுவில் சேர்ந்தார். பின்னர் மக்கள் நாடகக் குழுவாக அது மாறியது. அதன் பிறகு அவர் குழுவின் பல தயாரிப்புகளில் நடித்துள்ளார். அவற்றில் முக்கியமானவை பாரிகேட், டைனர் தலோயர் மற்றும் டைடுமிர் ஆகும். ஏக் அதுரி கஹானி உட்பட சில படங்களிலும் அவர் பணியாற்றியுள்ளார்.10 ஏப்ரல் 2010 அன்று அன்னை தெரசா சர்வதேச விருதை ஷோபா சென் பெற்றார்.[4]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]ஷோபா சென் இரண்டு முறை திருமணம் செய்து கொண்டார். மேலும் ஒவ்வொரு திருமணத்திலும் இவருக்கு ஒரு குழந்தை பிறந்தது. இவரது முதல் கணவர் தேபா பிரசாத் சென் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். திருமணம் விவாகரத்தில் முடிவதற்கு முன்பாக அவர்களுக்கு உதயன் சென் என்ற ஒரு மகன் பிறந்தார். 1960 இல், ஷோபா சென் தன்னை விட ஆறு வயது இளைய நடிகரும் நாடக ஆளுமையுமான உத்பால் தத்தை மணந்தார். ஷோபா மற்றும் உத்பால் தத் தம்பதியருக்கு டாக்டர் பிஷ்ணுப்ரியா தத் என்ற மகள் உள்ளார். அவர் புது தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கலை மற்றும் அழகியல் பள்ளியில் நாடக வரலாற்றின் பேராசிரியராக உள்ளார்.
பணிகள்
[தொகு]நாடகங்கள்
[தொகு]- நபன்னா (1944)
- பாரிகேட்
- டைனர் தலோயர்
- டைடுமிர்
- கல்லோல்
- அங்கார்
திரைப்படங்கள்
[தொகு]- பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணா, பிரபுல்லா சக்ரவர்த்தியின் 1955 திரைப்படம் [5]
- ஆதர்ஷா இந்து ஹோட்டல், 1957 திரைப்படம்
- கோகபாபர் பிரத்யபர்தன், 1960 ஆம் ஆண்டு - அக்ரதூத்தின் திரைப்படம்
- பெடேனி, ரித்விக் கடக்கின் முடிக்கப்படாத படம் .
- ஏக் அதுரி கஹானி, 1972 இல் மிருணாள் சென் இயக்கிய திரைப்படம்.
- ஜார்ஹ், 1979 இல் உத்பல் தத் இயக்கிய திரைப்படம்.
- தகினி, தருண் மஜும்தார் இயக்கத்தில் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த படம்
- ஏக் தின் பிரதிடின், மிருணாள் சென் இயக்கிய 1979 திரைப்படம் .
- பைசாகி மேக், 1981 இல் உத்பல் தத் இயக்கிய திரைப்படம்.
- பக்கா தேகா, 1980ல் அரபிந்தா முகர்ஜி இயக்கிய படம்.
- பசந்த் அப்னி அப்னி, 1983 பாசு சாட்டர்ஜி இயக்கிய இந்தித் திரைப்படம்.
- தேகா, கெளதம் கோஸ் இயக்கிய 2001 திரைப்படம் .
- ஷேடோஸ் ஆஃப் டைம், 2004 ஆம் ஆண்டு பெங்காலி மொழியில் ஃப்ளோரியன் கேலன்பெர்கர் இயக்கிய ஜெர்மன் திரைப்படம்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Anit Mukerjea (28 June 2004). "A Woman of Grit" Asia Africa Intelligence Wire (From The Statesman (India))
- ↑ "Bethune X Distinguished Alumni". Archived from the original on 25 April 2012. பார்க்கப்பட்ட நாள் 10 March 2012.
- ↑ "Thespian Shobha Sen passes away". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 6 April 2018.
- ↑ Anonymous (9 April 2010). "Kapil, Wadekar to receive Mother Teresa International Award" Nerve.in (accessed 14 Jan 2013)
- ↑ See also Bhagaban Sree Sree Ramkrishna பரணிடப்பட்டது 2016-05-14 at the வந்தவழி இயந்திரம் listing at Gomolo.